வெள்ளைத் துணிகள் பளிச்சென்று இருக்க

white dress Cleaning
- Advertisement -

வெள்ளை துணிகளை பொருத்த வரையில் வாங்கும் போது இருக்கும் அந்த பளபளப்பு தன்மை நாளாக நாளாக குறைந்து கொண்டே சென்று கடைசியில் பழுப்பு நிறத்தில் மாறி விடும். நாம் வாங்கும் போது வெள்ளை நிறத்தில் வாங்குவது அதனுடைய வெளிர் தன்மைக்காக தான். அந்த நிறமே போய் விடும் போது துணிக்கு இருக்கும் மவுசு குறைந்து விடும். அப்படி ஆகாமல் எப்பொழுதும் வெள்ளை துணி வெள்ளையாகவே இருக்க அருமையான ஒரு குறிப்பை தான் இப்பொழுது நாம் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

வெள்ளை துணி பளிச்சென்று மாற

இதற்கு முதலில் உங்களுடைய வெள்ளைத் துணி மூழ்கும் அளவிற்கு தண்ணீரை வெதுவெதுப்பாக சூடு படுத்தி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த முறைக்கு முடிந்த வரையில் பிளாஸ்டிக்கை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இதில் நீங்கள் துணிக்கு பயன்படுத்தும் சோப்பு அல்லது லிக்வீட் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் காஸ்டிங் சோடா ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த சோடா சேர்க்கும் கை வைத்து கலக்கக் கூடாது. ஏதேனும் ஒரு குச்சியை பயன்படுத்தி கலக்கி கொள்ளுங்கள். இதில் அதிக அளவு அமிலத் தன்மை இருப்பதால் கைகள் பொங்கி போகக் கூடிய வாய்ப்பு உண்டு கவனமாக செய்யுங்கள். இதில் உங்களுடைய வெள்ளை துணிகளை சேர்த்து இரண்டு மணி நேரம் ஊறிய பிறகு அதிலிருந்து எடுத்து வேறு நல்ல தண்ணீரில் துணியை அலசிய பிறகு நீங்கள் எப்போதும் போல துணி துவைத்து காய விட்டு விடுங்கள். துணிகள் பளிச்சென்று மின்னும்.

அடுத்து நம் வீட்டில் பீரோவில் துணிகள் வைக்கும் போது வாசனைக்காக நாப்தலின் பால் அதாவது பாச்சா உருண்டை போடுவோம். இது சிலருக்கு பிடிக்காது. அது மட்டும் இன்றி இந்த பாச்சா உருண்டைகளை அதிகமாக பயன்படுத்தும் போது துணிகளும் சில நேரங்களில் பாதிப்படையும். அதை சரி செய்ய எளிமையாக வீட்டில் நாம் ஒரு நாப்தலின் உருண்டை தயார் செய்யலாம்.

- Advertisement -

அதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் மஞ்சள், கால் டீஸ்பூன் ஆப்ப சோடா சேர்த்த பிறகு இதில் கொஞ்சமாக கம்போர்ட் ஊற்றி பேஸ்ட் போல குழைத்துக் கொள்ளுங்கள். அடுத்து இதை சின்ன சின்ன பால் போல உருண்டைகளாக செய்து கொள்ளுங்கள். இந்த உருண்டை களை உங்களுடைய பீரோக்களில் வைக்க வேண்டும். அப்படியே நேரடியாக வைக்காமல் ஒரு சிறிய கிண்ணத்தில் சேர்த்து வையுங்கள் அல்லது ஏதேனும் ஒரு பாட்டிலில் போட்டு மூடியில் துளைகள் போட்டு இதன் வாசம் வெளியில் வர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இல்லத்தரசிகளின் வேலையை சுலபமாக்க எளிய டிப்ஸ்

இதை நேரடியாக வைக்கும் போது மஞ்சள் துணிகளில் பட்டு கரை ஏற்பட வாய்ப்பு உண்டு. இதை பீரோவில் மட்டுமல்ல வீட்டில் பாத்ரூம், கிச்சன் போன்ற இடங்களில் கூட வைக்கலாம். அசைவம் சமைக்கும் நாட்களில் இதை சமையல் அறையில் வைக்கும் போது அசைவம் சமைத்த வாடையை கொஞ்சம் கூட தெரியாது. அந்த அளவிற்கு நறுமணமாக இருக்கும். இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைத்தால் நீங்களும் பயன்படுத்தி பலன் அடையலாம்.

- Advertisement -