வெறும் 15 நிமிடத்தில், ஹோட்டல் ஸ்டைலில் அட்டகாசமான வெள்ளை குருமாவை ஒருமுறை இப்படி வச்சு பாருங்க! இதோட வாசம் பக்கத்து வீட்டு வரை வீசும்.

white-kuruma
- Advertisement -

காய்கறிகள் சேர்த்த குருமாவை மிளகாய்த்தூள் சேர்த்து காரமாக வைத்து ஒருமுறை என்றால் வெறும் பச்சை மிளகாயை வைத்து வெள்ளை குருமா வைப்பது மற்றொரு முறை. இதனுடைய சுவை கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். சில ஓட்டல்களில் இதனுடைய சுவையை அடித்துக் கொள்ள முடியவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வெள்ளை குருமா ரெசிபி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வெறும் 15 லிருந்து 20 நிமிடத்திற்குள் இந்த குருமாவை தயார் செய்துவிடலாம். வாங்க ரெசிபிக்கு போகலாம்.

choped-veg

முதலில் உங்களுக்கு தேவையான காய்கறிகளை எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும். கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு காலிஃப்ளவர், நூல்கோல், பச்சை பட்டாணி இப்படி உங்களுக்கு எந்த காய்கறிகள் கிடைத்தாலும் அதை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். கட்டாயமாக நறுக்கிய கேரட் ஒரு கைப்பிடி, பீன்ஸ் ஒரு கைப்பிடி, உருளைக்கிழங்கு ஒரு கைப்பிடி தேவைப்படும். தயாராக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1 கப் தேங்காய் துருவல், 3 கைப்பிடி அளவு, கிராம்பு – 1, ஏலக்காய் – 2, பட்டை – 1, பொட்டுக்கடலை – 1 டேபிள்ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன், சோம்பு – 1 ஸ்பூன், முந்திரிபருப்பு – 5, பச்சைமிளகாய் 5 லிருந்து 6 உங்கள் காரத்திற்கேற்ப கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இதை விழுதுபோல் அரைத்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

white-kuruma1

இப்போது குருமாவை தாளிக்கலாம். ஒரு குக்கரை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். 1 டேபிள்ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, சோம்பு – 1 ஸ்பூன் தாளித்து 1 கொத்து கறிவேப்பிலை, 1 பிரியாணி இலை, பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயம் (மீடியம் சைஸ் பெரிய வெங்காயம்) போதுமானது, இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இதனுடன் 1 டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இஞ்சி பூண்டின் பச்சை வாடை நீங்கியதும் பொடியாக வெட்டி வைத்திருக்கும் காய்கறிகளை வெங்காயத்துடன் கொட்டி ஒரு முறை வதக்கி, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை குக்கரில் சேர்த்து விடவேண்டும். தேவையான அளவு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள்.

white-kuruma2

இறுதியாக தேவையான உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு குக்கரின் மூடியை போட்டு அடுப்பை முழு தீயில் வைத்து விட்டு இரண்டு விசில் வைத்தால் குருமா கமகம வாசத்தோடு தயாராகிவிடும். இறுதியில் கொத்தமல்லி தழை தூவி இட்லி, சப்பாத்தி, பரோட்டா, பூரி தோசைக்கு சைட் டிஷ் ஆக பரிமாறிக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்களுடைய வீட்டிலும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -