சினிமாவிலும் சீரியலிலும் வரக்கூடிய செலிபிரிட்டி போல நாமும் அழகாக வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். ஆனால் பளபளப்பான அழகை, வெள்ளையான சருமத்தை பெறுவதற்கு அதிக காசு செலவு ஆகிறது என்று நினைப்பவர்கள், செலவு இல்லாமல் இந்த குறிப்பை முயற்சி செய்து பார்க்கலாம். இதை செய்யும்போது உங்களுடைய முகம் கூடிய சீக்கிரத்தில் பொலிவு பெறும். அழகான அழகை எளிமையான முறையில் பெறுவதற்கு நாம் வீட்டிலேயே நைட் ஜெல் எப்படி தயாரிப்பது என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
அழகான சருமத்தைப் பெற நைட் ஜெல் தயார் செய்யும் முறை:
இந்த நைட் ஜெல்லை தயாரிக்க நமக்கு உளுந்தம் பருப்பு 2 ஸ்பூன், ஓட்ஸ் 1 ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் ஊற வைக்க தேவையான அளவு பால், இறுதியாக இதை க்ரீமாக மாற்றுவதற்கு கொஞ்சம் ஆலுவேரா ஜெல் நமக்கு தேவைப்படும். அலோவேரா ஜெல்லுக்கு பதில் நீங்கள் வேறு ஏதாவது ஜெல் கூட பயன்படுத்தலாம். சேஃப்ரான் ஜெல், நீம் ஜெல், இப்படி ஜெல் டைபில் எது உங்கள் வீட்டில் இருந்தாலும் அதை இந்த குறிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் உளுந்தம் பருப்பையும், ஓட்ஸையும் போட்டு அது மூழ்கும் அளவுக்கு காய்ச்சிய பால் ஊற்றி கொள்ளவும். 1/2 மணி நேரம் இது ஊரட்டும். பிறகு இதை ஊற வைத்த பாலோடு மிக்ஸி ஜாரில் போட்டு விழுதாக அரைத்து, வடிகட்டி எடுத்தால் வெள்ளை நிறத்தில் திக்கான பால் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு ரொம்பவும் எண்ணெய் வடியும் சருமம், ஓபன் போர்ஸ் நிறைய இருக்குது என்றால், பால் ஊற்றி இந்த பொருட்களை ஊற வைக்க வேண்டாம். ரோஸ் வாட்டர் அல்லது தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
சரி இப்போது ஊற வைத்த உளுந்து ஓட்ஸ் இரண்டையும் அரைத்து வடிகட்டி வைத்திருக்கிறோம் அல்லவா. அந்த திக்கான கலவை உங்களிடம் இருக்கும். அதோடு அலோவேரா ஜெல்லை தேவையான அளவு போட்டு நன்றாக அடித்து கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அது முகத்தில் அப்ளை செய்வதற்கு வசதியாக ஜெல் போல தயாராகும். தயார் செய்த இந்த க்ரீமை ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் ஏழு நாட்கள் கெட்டுப்போகாது.
இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தை சுத்தமாக கழுவிக்கொண்டு இந்த ஜெல்லை கொஞ்சமாக எடுத்து முகம் முழுவதிலும் அப்ளை செய்து லேசாக வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். இரண்டு நிமிடத்தில் ஜெல் முழுவதும் உங்களுடைய சருமம் ஈர்த்துக் கொள்ளும். பிறகு அப்படியே தூங்க செல்லலாம்.
இதையும் படிக்கலாமே: அடிக்கும் வெயிலில் தலையில் வியர்த்து வடிந்து, அரிப்பு பொடுகு தொந்தரவால் முடி கொட்டோ கொட்டென கொட்டுதா? 3 வாரங்களில் அந்தப் பிரச்சினையை சரி செய்ய இதோ உங்களுக்கான எளிய தீர்வு.
மறுநாள் காலை மயில்டானே சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் போட்டு முகத்தை அலம்பி கொள்ளுங்கள். ஒரு நாள் இரவிலேயே ஒட்டுமொத்த அழகும் உங்களுடைய முகத்தில் தெரியும். முகம் பொலிவு பெறும். குறிப்பாக கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் கழுத்தை சுற்றி இருக்கும் கருவளையம் இந்த இடத்தில் எல்லாம் இதை தொடர்ந்து அப்ளை செய்து வரும்போது நிச்சயம் நல்ல ரிசல்ட்டை பார்க்க முடியும். மிகக் குறைந்த நாட்களில் இந்த அழகான அழகு குறிப்பு உங்களுக்கு நிச்சயம் ஒரு மன திருப்தியை கொடுக்கும். ரெமிடி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. எந்த ஒரு பக்க விளைவுகளும் உண்டாகாத இயற்கையான அழகு குறிப்பு.