கைரேகைப்படி கோடீஸ்வர யோகம் யாருக்கெல்லாம் உண்டு தெரியுமா ?

5672
kai regai
- விளம்பரம் -

பணம் என்பது இன்றைய நிலையில் எல்லோருக்கும் ஒரு முக்கிய தேவையாக உள்ளது. பணத்தை சம்பாதிக்க பலரும் பாடாய் படுகின்றனர். ஆனாலும் அனைவரும் கோடீஸ்வரன் ஆகிவிடுவதில்லை. ஒருவரது ஜாதகப்படியும், கைரேகைப்படியும் யாருக்கெல்லாம் கேதேஸ்வர யோகம் உண்டு என்று பார்ப்போம் வாருங்கள்.

astrology-wheel

ஒருவரது ஜாதகத்தில் ரிஷபம் லக்னமாக அமைந்து, 5-ம் வீட்டில்(கன்னி ராசியில்) குருவும் கேதுவும் இணைந்திருந்தால் அந்த ஜாதகர் கோடீஸ்வரர் ஆவது உறுதி என்று ஜோதிடம் கூறுகிறது.

- Advertisement -

கை ரேகையை வைத்து அறிவது எப்படி:

kai regai

நடுவிரல் என்று அழைக்கப்படும் சனி விரலின் அடிபாகத்தில் அமைந்திருப்பது சனி மேடு என்று அழைக்கப்படுகிறது. நடு விரலின் கீழே இருக்கும் வட்டத்திற்கு பெயர் ‘சனி வளையம்’. கைரேகை படி கீழே உள்ள இரண்டு விதிகளும் எந்த கையில் பொருந்துகிறதோ அவர்கள் நிச்சயம் கோடீஸ்வரர் ஆவது உறுதி. (படம் மேலே இணைக்கப்பட்டுள்ளது)

1. நடுவிரலில் சனி வளையம் தெளிவாக அமைந்து, அந்த சனி வலயத்தை கடந்து சிறு ரேகை மேல்நோக்கி செல்லவேண்டும்.

2. ஒருவர் கையில் இருக்கும் விதிரேகையானது, கையின் தொடக்கத்தில் இருக்கும் ரேகையில் தொடங்கி நேராக சென்று சனி விரலை தொட வேண்டும்.

kai regai

இந்த இரண்டு விதிகளும் பொருத்தினால் அந்த கைரேகைக்கு சொந்தமானவர் உலகம் போற்றும் கோடீஸ்வரனாக வாழ்வார் என்கிறது கை ரேகை சாஸ்திரம்.ஆனால் அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் இந்த இரண்டு விதிகளும் பொருந்தக்கூடிய ஒரு கைரேகை அமைவதில்லை.

Advertisement