அதிநவீன போர் விமானங்கள் நம்மிடம் இருக்கையில் மிராஜ் 2000 விமானத்தை கையில் எடுக்க காரணம் என்ன தெரியுமா ? – அசரவைக்கும் அம்சங்கள்

Miraj-flight

இன்று அதிகாலை பாகிஸ்தான் முகாமில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தபட்ட விமானம் குறித்த முழுத்தகவல் தான் இந்த பதிவு. இந்தியாவிடம் பல அதிநவீன போர் விமானங்கள் குறிப்பாக Su -30MKI, MiG 29 மற்றும் Tejas LCA போன்ற அதிநவீன முறையில் வடிவமைக்கப்பட்ட போர் விமானங்கள் இருந்தும் இன்று இந்திய விமானப்படை கையில் எடுத்தது மிராஜ் 2000 ரக போர்விமானம் அப்படி என்ன சிறப்பு இதில் இருக்கிறது என்பதை பற்றியே இந்த பதிவு இருக்கப்போகிறது.

Pulwama

இந்தியா முதன்முதலாக 1982 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டு நிறுவனமான டாஸால்ட் எனும் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட 40 மிராஜ் ரக விமானங்களை வாங்கியது. கார்கில் போரின் போது இந்த விமானம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதால் 2004 ஆம் ஆண்டு மேலும், 10 விமானங்களை இந்தியா வாங்கியது. தற்போது இந்தியாவிடம் 50 மிராஜ் 2000 வகை விமானங்கள் உள்ளன. இந்த விமானங்களின் திறனை அதிகரிக்கும் வகையில் 2011ஆம் ஆண்டு அந்த விமானத்தில் கூடுதல் வசதிகளை சேர்த்து விமானம் மேம்படுத்தப்பட்டது. மேம்படுத்தப்பட்ட விமானங்கள் 2030ஆம் ஆண்டுவரை எந்த சிக்கலும் இன்றி திறன்பட செயல்படும் வங்கியில் மாற்றியமைக்கப்பட்டது.

முதலில் இந்தியாவிற்கு மிராஜ் ரக விமானம் வாங்கியபோது ஒரு பைலட் மட்டுமே இயக்கும் வகையில் இருந்ததை தற்போது இரண்டு பைலட் இயக்கும் வகையில் இந்திய விமானப்படை மாற்றி அமைத்துள்ளது. மேலும், இதன் நீளம் – 14.36 மீட்டர்,இறக்கை அகலம் 91.3 மீட்டர் மற்றும் இந்த விமானத்தின் மொத்த எடை 7500 கிலோ எடையுடையது. 7500 கிலோ என்பது வெறும் விமானத்தின் எடை தான். இந்த மிராஜ் 2000 வகை போர் விமானம் சுமார் 9500 கிலோ பொருட்களுடன் அதாவது 17000 கிலோ வரையில் எடையை தாங்கிக்கொண்டு அசாதாரணமாக விண்ணில் பாய்ந்து செல்லும் திறனுடையது.

Miraj-flight

மிராஜ் 2000 போர் விமானத்தின் வேகம் மணிக்கு 2336 கிலோமீட்டர் ஆகும் . மேலும் தரையில் இருந்து சுமார் 59000 அடி உயரம் பறக்கும் திறனுடையது அதாவது 17 கிலோமீட்டர் உயரம் வரை பறக்கும். மேலும், 50 கிலோ மீட்டர் வரை குறிவைத்து தாக்கும் இந்த விமானம் சுமார் 1550 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் கூட இலக்கை குறி தவறாமல் அடிக்கும் வல்லமை கொண்டதாகும். எனவே தான் இந்திய விமானப்படை மற்ற அதிநவீன விமானத்தை பயன்படுத்தாமல் மிராஜ் 2000 ரக போர் விமானத்தை இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Pakistan

இந்த விமானம் தற்போது இந்தியா, பிரான்ஸ், எகிப்த், யூ.ஏ.இ, பெரு, தைவான், கிறீஸ் மற்றும் பிரேசில் என 8 நாடுகளில் தற்போதும் பயன்பாட்டில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

Indian air force attack : தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானம், வெடிகுண்டு மற்றும் தாக்கப்பட்ட இடம் குறித்த விரிவான பதிவு