மகாபாரதத்தில் கிருஷ்ணர் ஏன் சூதாட்டத்தை தடுக்கவில்லை? அவரே கூறிய அதிர்ச்சியூட்டும் பதில்

krishnal
- Advertisement -

மகாபாரத போரில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் தேரோட்டியாக இருந்தது நமக்கு தெரியும். அதே போல கிருஷ்ணருக்கும் அந்த பாரத காவியத்தில் ஒருவர் தேரோட்டியாக இருந்தார். கிருஷ்ணர் குழந்தை பருவத்தில் இருக்கும் சமயத்தில் இருந்து அவருக்கு பல பணிவிடைகள் செய்த அந்த பெருமைக்குரியவர் தான் உத்தவர். கிருஷ்ணரின் அனைத்து நடவடிக்கைகளையும் உற்று கவனிக்கும் பழக்கம் உத்தவருக்கு உண்டு. ஆனால் கிருஷ்ணரின் செயல்கள் எதையும் உத்தவரால் புரிந்துகொள்ள இயலவில்லை. ஆனால் அதை பற்றி கண்ணனிடம் அவர் வினவியதும் இல்லை.

krishna

மகாபாரத போர் முடிந்து பல காலம் ஆன சமயம் அது. தனது அவதாரப் பணி முடித்து விட்ட நிலையில், உத்தவரிடம் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். உத்தவரே, என்னுடைய இந்த அவதாரத்தில் பலரும் தங்களுக்கு வேண்டியே பல்வேறு வரங்களை என்னிடம் பெற்றனர். என்னோடு பலகாலம் இருந்தவர்கள் நீங்கள். ஆனால் இதுவரை நீங்கள் உங்களுக்காக எதையும் என்னிடம் கேட்டதில்லை ஆகையால் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள். அதை தந்த பிறகே இந்த அவதார பணியை நான் முடித்துக்கொள்ள விரும்புகிறேன் என்றார் கிருஷ்ணர்.

- Advertisement -

 

கிருஷ்ணரின் நலனை மட்டுமே எப்போதும் விரும்பிய உத்தவரால் தனக்கான எதையும் கேட்க விருப்பம் இல்லை. ஆனால் சொல் ஒன்றும், செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் நிலைகள் அனைத்தும் அவருக்கு புரியாத புதிராக இருந்ததால் அது குறித்து அவர் கண்ணனிடம் கேட்க விரும்பினார்.

- Advertisement -

இறைவா, உங்களோடு நான் இது நாள் வரை பயணித்துளேன். இதில் நீங்கள் அனைவரையும் வாழச் சொன்னவழி வேறு; நீங்கள் வாழ்ந்து காட்டியவழி வேறு ! உங்கள் செயல்கள் எனக்கு புரியாத புதிராக உள்ளது. அதற்கான விளக்கத்தை தந்து எனதாசையை நிறைவேற்றுவாயா என்றார் உத்தவர்.

krishna

நிச்சயமாக சொல்கிறேன், உங்கள் சந்தேகத்தை கேளுங்கள் என்றால் கிருஷ்ணர்.

- Advertisement -

உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: கண்ணா, நீ பாண்டவர்களின் உற்ற நண்பனாவாய். அவர்கள் அனைவரும் உன் மீது அளவில்லா நம்பிக்கை கொண்டிருந்தனர். அப்படி இருக்கையில் இந்த மகாபாரத யுத்தத்திற்கு முக்கிய காரணமாக இருந்த சூதாட்டத்தை நீ தடுத்திருக்கலாமே. தருமனிடம் நீ சென்று தருமா.. வேண்டாம் இந்த சூதாட்டம் என்று நீ கூறி இருந்தால் அவர் கேட்டிருப்பாரே. நீ ஏன் அதை செய்யவில்லை.. அது கூட பரவாயில்லை.. அவர் விளையாட துவங்கிய பிறகாவது நீ உன் சக்தியால் தர்மன் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து அவனை வெல்லவைத்து அப்போதே தர்மத்தை நிலைநாட்டி இருக்கலாமே. நீ அப்படி செய்யாததால் தருமன் செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான், தனையும் இழந்தான். அப்போதாவது நீ சென்று அவனை காத்திருக்கலாம். ஆனால் அவன் தொடர்ந்து சூதாடி தம்பியையும் பணையம் வைத்து தோற்றான்.

dice

அப்போதும் துரியன் அவனை விடாததால், ஐவருக்கும் பொதுவான திரௌபதியை தருமன் பணையம் வைத்தான் அப்போதாவது நீ உன் சக்தியால் பகடைக்காய்களை தருமனுக்கு சாதகமாக விழச்செய்திருக்கலாமே. ஆனால் நீ அதை செய்யவில்லை.. மாறாக திரௌபதியின் துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும் நிலை ஏற்பட்ட போதுதான் நீ சென்று, ‘துகில்தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’ என்று மார்தட்டிக் கொண்டாய்.

playing dice

துரியனின் தம்பி திரௌபதியின் சிகையை பிடித்து தரதரவென இழுத்து வந்து ஆண்கள் பலர் நிறைந்திருந்த அந்த சபையில் அவள் ஆடை மேல் கை வாய்த்த பிறகு எஞ்சிய மானம் தான் என்ன இருக்கிறது ? அப்படி இருக்கையில் நீ எதை காத்ததாக பெருமைப் படுகிறாய்? எல்லோரும் கடவுளை நம்புவதற்கு முக்கிய காரணம், ஆபத்தில் அவர் நம்மை காப்பார் என்பது தான். பாண்டவர்கள் ஆபத்தில் இருக்கும்போது உதவாத நீ எப்படி ஆபத்பாந்தவன் ஆவாய். இதில் தருமம் எங்கு உள்ளது என வருத்தத்தோடு கேட்டார் உத்தவர்.

sudhatam

உதவரின் இந்த கேள்வி நம்மில் பலர் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இதற்கான பதிலை அன்றே கண்ணனிடம் கேட்டறிந்தார் உத்தவர். உதவரின் கேள்விகள் அனைத்தையும் பொறுமையாய் கேட்டு முடித்த கண்ணன் ஒரு மௌன சிரிப்புடன் உத்தவருக்கு பதில் அளிக்க துவங்கினார்.

krishna

உத்தவரே ! உங்களுக்கு தெரியாது அல்ல.. விவேகம் உள்ளவனே எதிலும் ஜெயிக்கவேண்டும் என்பது உலக நியதி. இந்த போட்டியில் துரியன் விவேகத்தோடு செயல்பட்டான் அதனால் அவன் வென்றான். தன்னுடைய ஆஸ்திக்களை பணயம் வாய்த்த துரியன், பகடை காய்களை சகுனியின் மூலம் உருட்டினான். ஆனால் தருமனோ அப்படி செய்யவில்லை. ஒரு வேலை தருமனும் தன் ஆஸ்திக்களை பணயமாக வைத்து, என் மைத்துனன் கண்ணன் பகடை காய்களை உருட்டுவான் என்று விவேகத்தோடு கூறி இருந்தால் வெற்றி யார் பாக்கம் இருந்திருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.. என்னை அவன் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளாதது கூட பரவாயில்லை.. அதையும் தண்டி தருமன் ஒரு மிகப்பெரிய தவறை அவன் செய்தான்..

mahabhratham

விதி வசத்தால் சூதாட்டத்தில் சிக்கிய அவன், இந்த விடயம் எனக்கு தெரிய கூடாது என்று எண்ணினான். ஆகையால் கடவுளே கண்ணன் மட்டும் இந்த சூதாட்ட மண்டபத்திற்குள் வந்து விட கூடாது என்று மனதிற்குள் வேண்டினான். தருமனின் வேண்டுதலுக்கு நான் எப்படி செவி சாய்க்காமல் இருக்க முடியும். ஆகையால் அவனே தன் வேண்டுதலால் என்னை கட்டி போட்டான்.

dice

ஐவரில் ஒருவரது என்னை அழைக்கமாட்டார்களா என சூதாட்ட மண்டபத்திற்கு வெளியே காத்திருந்தேன். ஆனால் எவருமே என்னை அழைக்கவில்லை. அஜுனன், பீமன், நகுலன், சகாதேவன் ஆகிய நால்வரும் துரியனை திட்டுவதில் தீவிரமாக இருந்தார்களே தவிர என்னை அழைக்க மறந்தனர்.

பாஞ்சாலியும் இவர்களை போல தான் என்னை மறந்தால். துட்சாதனன் அவளை இழுத்துவந்து போது தன் பலத்தின் மீது நம்பிக்கை வைத்து அவனிடம் அவள் போராடிக்கொண்டிருந்தாலே தவிர அவளும் என்னை அழைக்கவில்லை. இறுதியாக துட்சதனான் அவளின் ஆடையை தொட்ட பிறகு தான் அவள் ‘ஹரி…ஹரி…அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல் கொடுத்தாள்.

krishna

அவளுடைய மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும் சென்றேன். அவள் மானத்தைக் காக்க வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என் மீது என்ன தவறு? என்று பதிலதித்தார் கண்ணன்.

இந்த பதிலை கேட்டு அசந்துபோன உத்தவர்? எனக்கு இன்னொரு சந்தேகம் அதையும் கேட்கலாமா என்கிறார் கண்ணனிடம். தாராளமாக கேள் என்கிறார் கண்ணன்.

pandavas

யாரும் என்னை அழைக்கவில்லை அதனால் நான் செல்லவில்லை என்று கூறினாய். அப்படியானால் உன்னை அழைத்தால் தான் நீ செல்வாயா. தர்மத்தை நிலைநாட்ட நீயாகவே அங்கு சென்றிருக்கலாம் அல்லவா என்றார் உத்தவர். இதை கேட்டு புன்னகைத்த கிருஷ்ணர், உதித்தவா நான் எப்போதும் மனிதர்களின் வாழ்வில் குறிக்கிடுவது கிடையாது, அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு அவரது வழக்கை நிலை அமைகிறது. நான் மனிதர்கள் செய்யும் அனைத்தையும் பார்த்துக்கொண்டு நிற்கும் ஒரு சாட்சி பொருளாகவே இருக்கிறேன் என்றார் கிருஷ்ணர்.

panjali

இதை கேட்ட உத்தவர், நன்றாய் இருக்கிறது கண்ணா உன் நியாயம். மனிதர்களாகிய நாங்கள் தவுறுகளையும், பாவங்களையும் செய்துகொண்டே இருப்போம் அதை நீ பார்த்துக்கொண்டே இருப்பாயா? இது எப்படி சரியாகும் என்றார் உத்தவர். கிருஷ்ணர் சிரித்தபடியே மீண்டும் அதற்கான விளக்கத்தை கொடுக்கிறார். உத்தவா, நான் கூறியதன் உட்பொருளை நீ உணரவில்லை என்று எண்ணுகிறேன். நான் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்பதை மனிதர்கள் அறிந்தால் அவர்கள் ஏன் தவறு செய்ய போகிறார்கள். ஆனால் அவர்கள் அதை உணராததாலேயே தவறுகள் நடக்கிறது. நான் எங்கும் இருப்பவன் என்பதை தர்மன் அன்று உணர்ந்திருந்தால் நான் அந்த மண்டபத்திற்கு வர கூடாது என்று அவன் நினைத்திருக்க மாட்டான் அல்வா என்றார் கிருஷ்ணர்.

krishna

கிருஷ்ணரின் இந்த விளக்கத்தை கேட்டு மெய் மறந்து போனார் உத்தவர். இந்த தத்துவத்தை தான் மகாபாரதத்தில் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசித்தார். அர்ஜுனனின் இடத்தில் அவர் நின்று போரிடாமல் அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்து அவனை வழிநடத்தியதற்கும் இதுவே காரணம்.

- Advertisement -