புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது – அறிவியல் உண்மை

perumal-4

நமது முன்னோர்கள் நமக்கு சொல்லித்தந்த பல விடயங்களுக்கு பின் அறிவியல் ஒளிந்துள்ளது. அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் அசைவ உணவை சாப்பிட கூடாது என்று சொன்னதற்கு பின்பு ஒரு சிறந்த அறிவியல் இருக்கத்தான் செய்கிறது. வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

perumal

புரட்டாசி மாதத்தில் பொதுவாக சூரியனில் இருந்து வரும் வெளிச்சம் சற்று குறைவாகவே இருக்கும். அதோடு இந்த மாதத்தில் தான் மழையும் வர துவங்கும் . ஆனால் பூமி குளிரும்படி மழை பெய்யாது. இதனால் பூமியில் இருந்து அதிக அளவிலான வெப்பம் வெளியில் வரும். இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் நாம் அசைவ உணவு உண்பதால் உடம்பில் வெப்பம் அதிகரித்து தேவையற்ற உபாதைகள் வரும்.

சூரிய வெளிச்சம் குறைவாக இருப்பதால் இயற்கையாகவே புரட்டாசி மாதத்தில் நமது ஜீரண சக்தி குறைவாக இருக்கும். ஆகையால் அந்த நேரத்தில் அசைவ உணவை தவிர்ப்பது சிறந்தது. அதோடு இந்த மாதத்தில் பெய்யும் திடீர் மழை மூலம் ஏற்படும் வெப்ப மாறுதல்களால் பலருக்கு ஜலதோஷம், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் அதிகரிக்கும். இந்த நோய்களுக்கு சிறந்து தீர்வு துளசி.

thulasi chedi

அனைத்து பெருமாள் கோவில்களிலும் துளசி நீர் நிச்சயம் பிரசாதமாக கிடைக்கும். இதனாலேயே இந்த மாதத்தில் நம்மை அடிக்கடி பெருமாள் கோயிலிற்கு சென்று துளசி நீரை அருந்த செய்தார்கள் நம் முன்னோர்கள்.

- Advertisement -

thulasi theertham

மேலே கூறிய காரணங்களை தவிர்த்து அறிவியல் ரீதியாக வேறு பல காரணங்களும் இருக்கலாம். அறிவியலை போல ஆன்மீக ரீதியாகவும் புரட்டாசிமாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது என்பதற்கான சில காரணங்கள் உள்ளன. அதுகுறித்து வேறு பதிவில் பார்ப்போம்.

இதையும் படிக்கலாமே:
திருவண்ணாமலை கோவில் சிறப்பு தகவல்கள்

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள், மந்திரங்கள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have reason for why no non veg in purattasi month. We can also say it as why should not eat non veg in purattasi month.