புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. அறிவியல் மற்றும் ஆன்மீக தகவல்கள் இதோ

perumaal

பொதுவாக நாம் அசைவம் எல்லா நாட்களிலும் சாப்பிடுவோம் ஆனால், புரட்டாசி மாதம் மட்டும் அசைவம் சாப்பிடாமல் சைவம் சாப்பிட வேண்டும். அதற்கான காரணம் அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் இப்பதிவில் நாம் காணவிருக்கிறோம்.

 

வழக்கமாக எல்லா மாதங்களிலும் நாம் அசைவம் சாப்பிடுவோம். ஆனால் புரட்டாசி மாதம் புனிதமான மாதமாகும். ஆகையால், அசைவம் சாப்பிடாமல் சைவ உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த ஒரு மாதம் முழுவதும் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

எல்லா மாதங்களை விட புரட்டாசி மாதம் தான் வெயிலும், காற்றும் குறைந்து காணப்படும். இதனால் பூமியானது மிகவும் வெப்பமாக காணப்படும். பூமியானது வெப்பத்தைக் குறைப்பதற்காக அதனுள் இருக்கும் சூட்டை வெளியே விடும். இதனால், மற்ற மாதங்களில் நாம் அனுபவித்த வெப்பத்தை விட அதிகமாக உடலுக்கு சூட்டை கிளப்பிவிடும். இந்த மாதத்தில் நாம் அசைவத்தை எடுத்துக்கொண்டால் மேலும், அவை உடல் சூட்டை அதிகரிக்கும். இதனால், நம் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பு உண்டாகும் என அறிவியல் ரீதியாக கூறப்படுகின்றது.

- Advertisement -

 

ஆன்மீக ரீதியாக புரட்டாசி மாதம் புதன் பகவான் ஆட்சி செய்யும் மாதமாக கூறப்படுகிறது. இதனால் கன்னி ராசியின் அதிபதியான புதன் பகவான் ஒரு சைவ பிரியர் ஆவார். இதனால், நாம் புரட்டாசி மாதம் சைவத்தை உட்கொள்ளவேண்டும். அதுமட்டுமில்லாமல், பெருமாள் கோயில் துளசி தீர்த்தத்தை நாம் இந்த மாதத்தில் எடுத்துக்கொண்டால் உடலில் வலிமை பெருகும். ஏனென்றால், அசைவம் சாப்பிடாமல் சைவம் மட்டும் உட்கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாகும். நம் உடல்நலம் ஆரோக்கியமாக இருப்பதற்காக நம் முன்னோர்கள் புரட்டாசி மாதம் அசைவத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது. என்று அறிவியல் ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் கூறியுள்ளனர்.

இதையும் படிக்கலாமே:
இந்த ஒரு செடி போதும்! செயலிழந்த சீறுநீரகத்தை திரும்ப செயல்பட வைக்க முடியும்

English Overview:
Here we have Why No Non Veg in Purattasi in tamil. we have details of non veg in purattasi too.