கொரோனா வைரஸை தடுக்க நாளை ஏன் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்? ஆன்மீகம் கூறும் ரகசிய உண்மைகள்.

corona1

சீனாவைப் போல இந்தியாவிலும் கொரானா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடாமல் தடுப்பதற்காக நாளை வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டுமென்று அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது. இத்தாலியை பொறுத்தவரை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இரண்டு வாரங்களில் அந்த நாடு பெரிய இழப்பை சந்தித்துள்ளது. கிட்டத்தட்ட நம் இந்தியாவும் இரண்டாவது கட்டத்தை தாண்டி உள்ளது. இந்த நேரத்தில், இத்தாலியை போன்று நம் நாட்டில் இந்த வைரஸ் பரவினால், நம் நாட்டின் நிலைமையை நம்மால் யோசித்து கூட பார்க்க முடியாது  அளவிற்கு பெரிய அளவிலான பாதிப்பை நாம் எதிர்கொள்ள வேண்டிய நிலை வந்துவிடும். இது எவரையும் பயமுறுத்துவதற்காக சொல்லப்படுவது அல்ல. நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதற்காக எடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுதான்.

coronovirus1

சரி. எதற்காக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது? சற்று சிந்தித்துப் பார்த்தால்  இதிலும் நம் முன்னோர்களின் கூற்றும், நம்முடைய ஆன்மீகமும் தான் கலந்து இருக்கின்றது என்பதை கூறினால் நீங்கள் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். இதிலிருக்கும் ஆன்மிக காரணத்தை நாம் தெரிந்துகொள்ளலாமா?

இந்த காலகட்டத்திற்கு, இன்றைய சூழ்நிலையில் கொரானா வைரஸ் என்பது கொடிய நோயாக நம்மில் பேசப்படுகிறது. ஆனால் அந்த காலங்களில் எல்லாம் காலரா, அம்மை, மலேரியா, கொடிய காய்ச்சல் இப்படி பட்ட பலவகை நோய்கள் கிராமத்தில் உள்ளவர்களை தாக்கும். இதற்காக கிராம மக்கள், இதை தெய்வ குற்றமாக எண்ணி, உடனே அந்த ஊரில் இருக்கும் கிராம தேவிக்கோ அல்லது வேறு ஏதாவது கோவிலுக்கோ காப்பு கட்டிவிடுவார்கள்.

kappu

ஒரு கிராமத்தில் காப்புகட்டி விட்டால், அந்த ஊர் எல்லையில் நான்கு திசைகளிலும் அம்மன் சிலைகளை வைத்து விட்டு, வேப்ப இலைகளை தோரணம் கட்டி, மா இலைகளில் தோரணம் கட்டி, திருவிழா நடத்தப்பட்டு, ஊர் மக்கள் யாவரும் எல்லையை விட்டு வெளியே செல்லக்கூடாது. வெளியூரில் இருக்கும் மக்கள் யாரும் ஊருக்குள் வரக்கூடாது. என்று ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு கட்டுப்பாட்டை விதிப்பார்கள்.

- Advertisement -

வீதிகளிலும், வீடுகளிலும் வேப்ப இலை தான் தோரணமாக இருக்கும். மா இலை கொத்து கொத்தாக தொங்கும். மாட்டுச் சாணத்தை வீட்டில் மெழுகி, வீட்டை சுத்தம் செய்து விடுவார்கள். மஞ்சள் தண்ணிரை கரைத்து தெளிப்பது என்பது இரண்டாம் கட்டம் தான். மஞ்சல் தண்ணிரை தங்களுடைய தலைகளில் ஊத்திக் கொண்டு கூட கோவிலை வலம் வருவார்கள்.

Pongal-kappu2

பருத்தித் துணியை மஞ்சள் தண்ணீரில் நனைத்து, உலர்த்தி அந்த ஆடையை அணிந்து கொள்வார்கள். இவ்வளவு பாதுகாப்பு முறைகள் திருவிழா, காப்பு என்ற ஆன்மிக பெயரில் நடத்தப்படும். நம்மில் சில பேர் இதை கண்டு கேலி செய்ததும் உண்டு. என்ன இது மூட நம்பிக்கை? இப்படியெல்லாம் செய்தால் நோய் வராமல் இருந்து விடுமா? என்று கூட கேட்டிருக்கலாம்.

ஆனால் அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் விஞ்ஞானிகள் போல் சிந்தித்து இருக்கிறார்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா? வேப்ப இலை, மா இலை, மஞ்சள் இவை எல்லாமே கிருமிநாசினி. எந்த கிருமியும் நம் அருகில் அண்டாது. தற்போது விஞ்ஞானிகள் அதை மனதில் வைத்துக் கொண்டுதான் யாரும் வெளியில் வராதீர்கள். நோய் எதிர்ப்பு சக்தி உள்ள பொருட்களை பயன்படுத்துங்கள். ஊர்விட்டு ஊர் செல்லாதீர்கள் என்று கூறுகிறார்கள். விஞ்ஞானிகள் சொல்லினால் அது நம்பக்கூடியது. நம்முன்னோர்கள் கூறினால் அது நம்பமுடியாத மூடபழக்கம்?

corona

பிரச்சனை என்று வந்தால் தான் நம்முடைய பழங்காலத்தை நாம் திரும்பிப் பார்க்கின்றோம். பிரச்சனை வருவதற்கு முன்பாகவே, நம் முன்னோர்களின் பழக்கவழக்கங்களை கடைபிடிக்க ஏன் தயங்குகிறோம். எது எப்படியோ? பழங்கால முறை என்று நினைத்து இந்த ஊரடங்கு உத்தரவுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுத்தாலும் சரி. நவீனகால 144 தடை என்று நினைத்து ஒத்துழைப்பு கொடுத்தாலும் சரி. எல்லாம் நம் நன்மைக்காகத்தான். இந்த கொடிய கொரானாவை நம் நாட்டில் தங்க விடாமல் துரத்த நாம் எல்லோரும் சேர்ந்து ஒத்துழைப்பது தான் சரி. யாரும் விதண்டாவாதம் பேசாமல் நம்முடைய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நம் மனைவி, நம் குழந்தைகள், நம் உற்றார், உறவினர் இவர்களோடு சேர்த்து நம்மையும், நம் வீட்டையும் நம் நாட்டையும் பாதுகாப்பதற்கா தான் இவ்வளவு போராட்டமும் என்பதை ஒவ்வொருவர் மனதிலும் நினைத்தாலே, எந்த கொடிய நோயும் நம்மை கண்டு ஓடிவிடும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் தொழில் நஷ்டத்தில் செல்கிறதா? கடன் கழுத்தை நெறிக்கிறதா? கடன் தீர்ந்து, வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்க இதுதான் வழி.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Prevention of corona virus in India. Corona virus 2019 in Tamil. Corona virus in Tamil. Coronavirus in india. Corona prevention.