ஆடி மாதத்தில் அம்மன் கோயிலில் ஏன் கூழ் ஊற்றுகிறார்கள் தெரியுமா?

amman-kuzh

அம்மன் வழிபாட்டிற்கு உரிய ஆடி மாதத்தில் நாம் பின்பற்றும் பல விடயங்களுக்கு பின் அறிவியலும் இருக்கின்றன. இன்றைய கால சூழலில் நாம் செய்யும் அனைத்தையும் ஏன் எதற்கு என்று தெரியாமல் செய்கிரோம். ஆனால் நமது முன்னோர்களின் காலத்தில் வகுக்கப்பட்ட ஒவ்வொரு பழக்க வழக்கத்திற்கு பின்பும் அறிவியல் இருந்தது. அந்த வகையில் ஆடி மாதத்தில் நாம் ஏன் அம்மனுக்கு கூழ் ஊற்றுகிறோம் என்று பார்ப்போம்.

Aadi Koozh
Aadi Koozh

இன்றைய காலகட்டத்தில் பல நவீன தடுப்பூசிகளால் அம்மை நோய் பரவலாக குறைந்துள்ளது. ஆனால் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த நோயின் தாக்கம் ஆடி மாதத்தில் அதிக அளவில் இருந்துள்ளது. இதற்க்கு காரணம் இந்த ஆடி மாதத்தில் நிலவும் தட்ப வெப்ப நிலையே காரணம் ஆகும். இந்த மாதத்தில் ஒரு விதமான அதீத வெப்பமும் வறட்சி காற்றும் அதிகம் இருக்கும். இதனால் இனம்புரியாத பல நோய்கள் மக்களை தாக்கின அதில் மிக கொடியாத கருதப்பட்டது அம்மை நோயே. இதனால் சிலர் மாண்டும் போனார்கள்.

கேழ்வரகு மற்றும் காம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது அதோடு காம்பை உண்பதால் உடலில் குளிச்சி ஏற்படும் என்பதால் இந்த சமயத்தில் கம்பு மற்றும் கேழ்வரகை பயன்படுத்தி கூழ் செய்து அருந்தினர். ஆனால் இந்த கூழை அனைவராலும் உன்ன முடியவில்லை. கரணம் இந்த ஆடி மாதத்தில் தான் கடும் பஞ்சமும் நிலவியது. இந்த பஞ்சத்திற்கு ஒரு முடிவு கட்ட நினைத்த பெரியோர்கள் கடவுளை இந்த விடயத்தில் முன் நிறுத்த துவங்கினார்.

Aadi Koozh
Aadi Koozh

பஞ்சம் போகவும், பயிர் செழிக்கவும், தட்ப வெப்ப நிலை மாறி நோய்கள் தீரவும் மழை அவசியம் என்பதை மக்களிடம் கூறி மாரி தாயை வணங்க செய்தனர். கம்பு, கேழ்வரகு இருப்பு வைத்துள்ளவர்கள் அனைவரையும் அம்மனுக்கு கூழ் ஊற்றும்படி செய்தனர். இதனால் ஏழை எளியோர் என அனைவரும் கூழை அறிந்தனர். இப்படி ஊர் ஊரக வெவ்வேறு நாட்களில் கூழ் ஊற்றப்பட்டது. இதனால் பஞ்சமும் நீங்கியது நோய்களும் குறைந்தது. மாரி தாயின் அருளால் மழையும் பெய்தது.

Aadi Koozh
Aadi Koozh

ஆன்மீகத்தையும் மருத்துவத்தையும் எவ்வளவு நுட்பமாக ஒன்றிணைத்து கையாண்டிருக்கிறார்கள் நம் முன்னோர்கள். அவர்களின் அறிவாற்றலுக்கு எல்லையே இல்லை என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தான் ஆடி அம்மன் கூழ்.

இதையும் படிக்கலாமே:
ஆடி கூழ் செய்வது எப்படி என்று பார்ப்போம்

இது போன்ற மேலும் பல சுவாரஸ்ய தகவல்கள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.