வாஸ்துப்படி ஏன் வீட்டில் ஊஞ்சல் கட்டக்கூடாது ? அறிவியல் உண்மை

4719
oonjal
- விளம்பரம் -

அந்தக் காலம் முதலாகவே, குழந்தைகள், கன்னிப்பெண்கள் எனப் பலரும் ஊஞ்சல் விளையாட்டில் ஆர்வம் காட்டுவது இயல்புதான். அரசக்குமாரிகள் முதல் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கன்னிப்பெண்கள் வரை தோழியர்களுடன் குதூகலமாக விளையாடும் ஒரு விளையாட்டு ஊஞ்சல் விளையாட்டு. அனால் அவர்கள் மரத்தில் கயிறு கட்டி ஊஞ்சல் அமைத்து விளையாடினார்கள். தற்போது புலரும் வீடுகளில் ஊஞ்சல் கட்டுகின்றனர். அனால் அப்படி செய்வது தவறு என்கிறது வாஸ்து சாஸ்திரம். இது குறித்து அறிவியல் ரீதியாக ஆராய்வோம் வாருங்கள்.

oonjal

நம் வீட்டுக்குள் வரும், காஸ்மிக் கதிர்கள் (காந்த அலைகள் + சூரியக்கதிர்களுடன் இணைந்த ஆற்றல்) பரவி உயிர் ஆற்றல் என்னும் பயோ-எனர்ஜியாக மாறி இருக்கும். இதை வாஸ்துப்படி அமையப்பெற்ற வீடுகளில் நாம் மிக எளிதாக உணரமுடியும். இந்த காஸ்மிக் கதிர்கள், ஊஞ்சலில் ஆடும்போது சிதைக்கப்படுகின்றது. இதனால், குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு குந்தகம் ஏற்படுகின்றது.

- Advertisement -

‘வீட்டில் தொட்டில் கட்டி ஆட்டுகிறோமே’ எனப் பலர் கேள்வி எழுப்பலாம். குழந்தைகளுக்கு, குறைவான உயிராற்றல் சக்தியே போதுமானது. பெரியவர்கள், தம்பதியர்களுக்கு உயிராற்றல் சக்தி அதிகம் தேவைப்படுவதால்தான் வடகிழக்கு அறையை படுக்கை அறையாகப் பயன்படுத்தக் கூடாது என வாஸ்து சாஸ்திரம் வர்ணிக்கின்றது. குழந்தைப் பருவத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி, 16 வயது வரை உள்ளவர்கள் வடகிழக்கு அறையைப் பயன்படுத்தலாம்.

oonjal

‘தூரியாடுகிற வீட்டிலும் ஓரியாடுகிற வீட்டிலும் நிம்மதி இருக்காது. அதாவது, ஊஞ்சல் ஆடுவதும், சண்டை போடுவதும் உள்ள வீடுகளில் நிம்மதி இருக்காது’ என்பது இதனால்தான்.

oonjal

வீட்டில் குழந்தைகள் கதவு மற்றும் தாழ்ப்பாள் போன்றவற்றை அசைத்து ஒலி எழுப்பினால், வீட்டில் சண்டை வரும் என்று பயமுறுத்துவது உண்டு. அப்படிச் செய்தால் வீட்டுக்குள் வரும் காஸ்மிக் கதிர்களின் சக்தி நமக்கு முழுவதும் கிடைக்காமல் போய்விடும். எனவேதான் குழந்தைகளை கதவு, தாழ்ப்பாள் போன்றவற்றை அசைத்து ஒலி எழுப்பக்கூடாது என்று பயமுறுத்துவார்கள்.

Advertisement