இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் ஏன் குளிக்க வேண்டும் ? – அறிவியல் உண்மை

kuliyall
- Advertisement -

இந்து மத கலாச்சாரப்படி, ஒருவர் இறந்துவிட்டால் அவரது சொந்த பந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் தகவல் தெரிவிக்க படும். பிறகு அனைவரும் வந்து இறுதி அஞ்சலி செலுத்துவர். அதன் பிறகு இறந்தவர்களின் உடலை எரிக்கவோ புதைக்கவோ செய்வர்.

dead body burning

இதற்கு இடையில் சில சடங்குகளும் செய்யப்படுகிறது. அனால் இந்த இறுதி சடங்கில் கலந்துகொள்ளும் ஒருவர் நிச்சயம் குளிக்கவேண்டும் என்று நம் முன்னூர்கள் கூறியுள்ளனர். அதற்கு அறிவியல் ரீதியாக சில கரணங்கள் உள்ளன. அதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

- Advertisement -

மனிதர்கள் இறந்த உடனேயே அவர்களது உடல் சில மணி நேரங்களில் அழுக ஆரமிக்கும். அப்படி அழுகும் உடலில் இருந்து கண்ணனுக்கு தெரியாத சில கிருமிகள் வெளியில் வர ஆரமிக்கும். ஆகையால் இறுதி சடங்கில் கலந்துகொள்பவர்களின் உடலில் இந்த கிருமிகள் தொற்றிக்கொள்வதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

bacteria

அப்படி தொற்றிக்கொள்ளும் கிருமிகளோடு நாம் வீட்டிற்குள் சென்றால் அந்த கிருமாள் நம் வீட்டில் உள்ள சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்களிடம் எளிதில் தொற்றிக்கொள்ளும். இதனாலேயே இறுதிச் சடங்கில் கலந்து கொள்பவர்கள் குளிக்காமல் வீட்டிற்குள் செல்லக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

bathing

இப்படி நாம் செய்யும் ஒவ்வொரு செயலிற்கு பின்பு ஒளிந்துள்ள அறிவியலை புரிந்துகொண்டால். நம் முன்னோர்கள் நமக்கு நல்லதை மட்டுமே கற்பித்து சென்றுள்ளனர் என்ற உண்மை நமக்கு புரியும்.

- Advertisement -