நாம் கடவுளுக்கு போடும் படையலை அவர் சாப்பிடுவாரா?

515
- விளம்பரம்1-

நாம் கடவுளுக்கு படைக்கும் உணவை அவர் அருந்துகிறாரா இல்லையா? என்ற சந்தேகம் சிலர் மனதில் எழுவதுண்டு. அதே சந்தேகம் ஒரு சிஷ்யன் மனத்திலும் எழுந்தது. இதற்கான விடையை உடனே தெரிந்துகொள்ளவேண்டும் என்று நினைத்த அவன், தன் குருவிடம் சென்றான்.

padayal

“குருவே, நாம் கடவுளுக்காக படைக்கும் நைவேத்யத்தை அவர் அருந்துகிறார் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் அதை சாப்பிட்டால் நைவேதியத்தின் அளவு குறையவேண்டும் அல்லவா? பிறகு எப்படி அதை கடவுள் சாப்பிட்டார் என்று நம்புவது? என்று கேட்டான்.

- Advertisement -

guru sisyan

குரு அவனை ஊடுருவி பார்த்துவிட்டு, மெளனமாக சிரித்தபடியே, ’நமது வேதாந்த வகுப்பிற்கு நேரமாகிவிட்டது. ஆகையால் இப்போது நீ வகுப்பறைக்கு செல் நான் சிறிது நேரத்தில் வருகிறேன்” என்றார்.

வகுப்பறையில் அன்று அனைவருக்கும் ஒரு அற்புத மந்திரத்தை பற்றி விளக்கினார் குரு. பிறகு அணைத்து மாணவர்களும் அதை மனதில் பதியவைக்க துவங்கினர். சிறிது நேரம் கழித்து, தன்னிடம் படையலை பற்றி கேள்வி கேட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.

guru

குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான் சிஷ்யன். “எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார் குரு. என்றும் மறவாதபடி முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே” என்றான் சிஷ்யன். அப்படியா சரி, எங்கே ஒருமுறை அந்த மந்திரத்தை என்னிடம் சொல் பார்க்கலாம் என்றார்.

மனதை ஒருநிலை படுத்திகொண்டு மந்திரத்தை உச்சரிக்க ஆரமித்தான் சிஷ்யன். அவன் கூறி முடித்தவுடன், சிஷ்யா நீ மந்திரத்தை சரியாக உள்வாங்கிக்கொண்டதுபோல் தெரியவில்லையே. உன் புத்தகத்தை காட்டு பாப்போம் என்றார் குரு.

பதட்டம் அடைந்த சிஷ்யன் உடனே தன் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்தான். நான் கூறியதில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னியுங்கள் குருவே. அனால் இந்த புத்தகத்தில் உள்ளபடியே தான் நான் மந்திரத்தை கூறினேன் என்றான்.

guru

இந்த புத்தகத்தில் இருந்து தான் மந்திரத்தை உள்வாங்கினாயா என்றார் குரு. ஆம் குருவே என்றான் சிஷ்யன். அப்படியானால் நீ உள்வாங்கிய பிறகும் இதில் மந்திரம் இருக்கிறதே எப்படி? நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் அது இருக்க கூடாதல்லவா? என்றார் குரு. சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.

duru sisyan

நீ மனதில் உள்வாங்கிய மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன் சூட்சம நிலையில் இருப்பவன். அவனுக்கு நாம் ஸ்தூல வடிவில் படைக்கும் நைவேத்யத்தை அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். அதனாலேயே அதன் அளவு குறைவதில்லை.

padayal

உதாரணத்திற்கு இப்போது நீ உள்வாங்கியதால் புத்தகத்தில் இருந்த மந்திரத்தின் அளவு குறையவில்லை அல்லவா அதுபோல தான் என்றார் குரு. இந்த அற்புத விளக்கத்தை கேட்டு சிஷ்யன் மெய் சிலிர்த்துபோனான்.

 

Advertisement