மைதானத்தின் தன்மை மற்றும் நாங்கள் எடுத்த இந்த முடிவே சிறந்த வெற்றிக்கு காரணம் – ஆட்டநாயகன் ட்ரென்ட் போல்ட்

trent
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று (31-01-2019) ஹாமில்டன் நகரில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது நியூசிலாந்து அணி. அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோஹித் மற்றும் தவான் களமிறங்கினர்.

nz team

ரோஹித் 7 ரன்கள், தவான் 13 ரன்களில் வெளியேற இந்திய அணி தடுமாற்றம் கண்டது. பின்னர் வந்த வீரர்கள் யாரும் எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை என்பதால் இந்திய அணி 30.5 ஓவர்களில் 92 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் சாஹல் அதிகபட்சமாக 18 ரன்கள் அடித்தார். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் 20 ரன்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பிறகு ஆடிய நியூசிலாந்து அணி 14.4 ஓவர்களில் எளிதாக 93 ரன்கள் என்ற இலக்கினை அடைந்து வெற்றி பெற்றது. ஐந்து விக்கெட்டுகளை சாய்த்த நியூசிலாந்து வீரர் போல்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார். பின்னர் போல்ட் பேசுகையில் : இந்த வெற்றி எங்களுக்கு மூன்று ஆட்டங்களுக்கு பிறகு தற்போது ஒரு ஆறுதலை தந்துள்ளது. மைதானத்தில் இருந்த வேகம் மற்றும் ஸ்விங் எனக்கு அதிக அளவில் கைகொடுத்தது.

boult

மேலும், இந்த மைதானத்தில் சேசிங் செய்வது எளிது எனவே, முதலில் பவுலிங் தேர்வு செய்தது சரி என்று நினைக்கிறன். டாஸ் இந்த போட்டியில் முக்கிய பங்காகும் மேலும், நான் என்னால் முடிந்த சிறப்பான பவுலிங்கை கொடுத்தேன். அதற்கு விக்கெட்டுகள் எளிதாக கிடைத்தது மகிழ்ச்சி என்றும், பந்துகள் நன்றாக திரும்பியது அது பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தியதும் எனக்கு மகிழ்ச்சி என்று தெரிவித்தார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

தோனி மற்றும் கோலி இல்லை என்றால் இந்தியாவுக்கு இந்த நிலைமை தான் என்பது அப்பட்டமாக தெரிகிறது – பத்ரி நாத்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -