வீட்டின் கதவு, ஜன்னல் போன்றவை இப்படி இருந்தால் நஷ்டம் தான் வருமாம்! எப்படி இருக்கக்கூடாது என்று நீங்களும் தெரிஞ்சுக்கோங்க!

window-cleaning-scrubber
- Advertisement -

நம்முடைய வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் கூட நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும். வாஸ்து சாஸ்திரத்தில் ஒரு சில பொருட்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரக் கூடிய சக்தி உண்டு என்று கூறப்பட்டுள்ளது. வாஸ்து பொருட்கள் எண்ணற்றவை இருந்தாலும் நம் வீட்டில் இருக்கும் மிக முக்கியமான ஜன்னல் கதவுகள், கம்பிகள் போன்றவற்றை இப்படி வைத்திருந்தால் குடும்பத்தில் நிம்மதியும், ஆரோக்கியமும் உண்டாகுமாம். அதைப் பற்றிய தகவல்களைக் காண தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

varalakshmi-viratham2

நம் வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் நாம் தூசு, தும்புகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வாரம் ஒரு முறையாவது வீட்டை அவ்வப்போது துடைத்து எடுத்து சுத்தத்துடன் வைத்திருந்தால் அந்த வீட்டில் நிச்சயம் தெய்வ கடாக்ஷம் நிரம்பியிருக்கும். அப்படி அல்லாமல் ஆங்காங்கே குப்பைகளையும், தூசுகளையும் சேர்த்துக் கொண்டு இருந்தால் நாளடைவில் நம் மனதிலிருக்கும் நேர்மறை எண்ணங்கள் நம்மை விட்டு வெளியில் சென்று விடும்.

- Advertisement -

நாம் பார்க்கும் ஒவ்வொரு பொருளுக்கும், நாம் தொட்டு எடுக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் நம்மிடம் அதிர்வலைகளை உண்டு பண்ணும் திறன் உண்டு. அந்த வகையில் நம் வீட்டின் ஜன்னல், கதவுகள் எப்பொழுதும் தூசுகள் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தம் சோறு போடும் என்று பழமொழி கூட உண்டு. சுத்தமாக இருக்கும் கதவுகளும், ஜன்னல்களும் கூட நமக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

window

ஜன்னல் கம்பிகளில் படியும் தூசுகள் நாளடைவில் அதிகமாக சேர்ந்து பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். மேலும் அது மட்டும் அல்லாமல் அதிலிருந்து பறந்து வரும் தூசுகளால் உடலுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. எனவே ஆரோக்கிய அக்கறை உள்ளவர்கள் எப்போதும் வீட்டை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இப்படி சுத்தம் செய்யும் பொழுது நம் வீட்டின் ஜன்னல், கதவுகள், கம்பிகளை இந்த முறையில் சுத்தம் செய்தால் நம்முடைய வேலை பன் மடங்கு மிச்சமாகும்.

- Advertisement -

வீட்டில் இருப்பதிலேயே மிக சிரமமான வேலை என்றால் அது ஜன்னல், கம்பிகளை துடைப்பதாக தான் இருக்கும். கைகள் தண்ணீரில் படாமல், அழுக்கு சேராமல் சுத்தமாக சுத்தம் செய்ய ஒரு வழி உண்டு. இப்போது கடைகளில் 10 ரூபாய்க்கு கூட இந்த பொருள் கிடைக்கிறது. ஒருபுறம் ஸ்க்ரப்பரும், இன்னொரு புறம் பஞ்சும் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த பஞ்சு ஸ்கிரப்பரை 2 எடுத்துக் கொண்டு அதில் ஸ்கிரப்பற்கும், பஞ்சுக்கும் இடையில் அப்பளம் எடுக்கும் இடுக்கி போன்ற ஏதாவது ஒன்றை சொருகிக் கொள்ளுங்கள்.

sponge-scrubber

இரண்டு புறமும் அப்படி சொருகிக் கொண்டு ஜன்னல் கம்பிகளுக்கு இடையே விட்டு துடைத்தால் ரொம்ப ரொம்ப சுலபமாக எவ்வளவு தூசிகள் இருந்தாலும் அவைகள் நம் கைகளில் படாமல் நீங்கிவிடும். எப்போதும் இது போல் வீட்டை சுத்தம் செய்யும் பொழுது முக கவசம் அணிந்து கொள்ளுங்கள். அப்போது தான் தூசுகள் மூக்கிற்குள் சென்று சுவாச கோளாறுகளை ஏற்படுத்தாமல் இருக்கும். அதிகப்படியான அழுக்குகள் இருந்தால் தண்ணீரில் பஞ்சை நனைத்து பின்னர் இதே போல துடைத்து எடுக்கலாம். இந்த பஞ்சை வைத்துக் கொண்டே கதவுகளையும் கூட சுலபமாக சுத்தம் செய்து விடலாம். நீங்களும் இந்த டிப்ஸை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

- Advertisement -