வீட்டில் காய்கறி இல்லையா? கவலை வேண்டாம். உடனே இந்த வெந்தய குழம்பு வைத்து கொடுங்கள். சட்டி நிறைய சாதம் செய்தாலும் முழுவதுமாக தீர்ந்து விடும்

vendhaya-kuzhambu
- Advertisement -

வீட்டில் சமையல் செய்யும் பெண்மணிகள் தினமும் யோசனை செய்து தான் ஆகவேண்டும். நாளை என்ன சமைக்க வேண்டும்? மதியம் என்ன பொரியல் செய்ய வேண்டும்? இப்படி அவர்கள் சிந்திக்காத நாள் என்று எதுவுமே இருக்காது. எனவே மதிய உணவிற்காக சமைப்பதற்கு வீட்டில் காய்கறிகள் இல்லை என்றால் வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே, இந்த வெந்தய குழம்பை சுலபமாகவும், சுவையாகவும் செய்து விடலாம். அப்படி காய்கறிகள் இல்லாமல் செய்யும் இந்த குழம்பு சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும். சாதத்துடன் குழம்பு சேர்த்துப் பிசைந்து வாயில் வைத்த உடனே எச்சில் ஊர ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு இதன் சுவை மிகவும் அபாரமாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு சமைக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

vegetable1

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 20, தக்காளி – 3, பச்சை மிளகாய் – 2, புளி – 150 கிராம், எண்ணெய் – 100 கிராம், பூண்டு – 15 பல், வெந்தயம் – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் 100 கிராம் புளியை தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, நன்றாக கரைத்து புளித்தண்ணீர் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் தக்காளி மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

puli1

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 100 கிராம் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் ஒரு ஸ்பூன் வெந்தயம், அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு இரண்டு ஸ்பூன் மிளகாய்தூள், ஒரு ஸ்பூன் உப்பு மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பின்னர் இவற்றுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கடாயை தட்டு போட்டு மூடி குழம்பை கொதிக்க விட வேண்டும்.

vendhaya-kuzhambu

குழம்பு நன்றாக கொதித்து மிளகாய் தூள் வாசனை சென்றதும், கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை இவற்றுடன் சேர்த்து மறுபடியும் தட்டு போட்டு மூடி கொதிக்க விடவேண்டும். சிறிது நேரத்தில் குழம்பு நன்றாகக் கொதித்து எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் கொத்தமல்லி தழையை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும். இந்த குழம்பை சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு பாருங்கள். மிகவும் அற்புதமான சுவையில் அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -