விளக்கு வைத்த பின்பு பெண்கள் இந்த தவறை கட்டாயமாக செய்யக்கூடாது! அப்படி செய்யும் போது அவர்களது தேஜஸ் குறையக்கூடும்.

vilakku

அந்தக் காலங்களில் எல்லாம் பெண்கள் வீட்டிலேயே இருந்து வீட்டை மட்டுமே கவனித்துக் கொண்டு வந்தார்கள். அனாவசியமாக பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடும் அந்த காலத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய கால சூழ்நிலையில் ஆண்களுக்கு நிகராக, பெண்களும் பலதுறைகளில் முன்னேற்றத்தை அடைந்து வருகிறார்கள் என்றால், அந்தக் கூற்று பொய்யாகாது. ஆனால், பெண்கள் தங்களுடைய வீட்டு பொறுப்பையும் பார்த்துக் கொள்ளவேண்டியது மிக அவசியமான ஒன்று.

vilaku

வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும், எப்படிப்பட்ட பெரிய பதவியில் இருந்தாலும் அவர்களுக்கு தங்களுடைய குடும்பமும், வீடும் முதல் கண்ணாக  இருக்கும். பெண்ணுக்கு உரிய சில  கடமைகளை, அவர்களால் தவிர்க்க முடியாது. இது பெண்களுக்கு மட்டுமல்ல. ஆண்களாக இருந்தாலும் சில கடமைகளை அவர்களால் தவறவிட முடியாது. அந்த காலங்களில் பெண்களுக்கு உரிய கடமையாக ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு விஷயம், வீட்டில் தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவது.

காலை, மாலை இரண்டு வேளையும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வேண்டிய கடமையை, நம்முடைய முன்னோர்கள் பெண்கள் கையில்தான் கொடுத்துள்ளார்கள். ஏனென்றால் மகாலட்சுமியின் அம்சம் என்று சொல்லப்படுபவர் பெண்தான். பெண்களை லட்சணமான பெண்கள் என்றும் சொல்லுவார்கள். லட்சணம் என்றாலே அதற்கு சான்றாக இருப்பது பெண்கள் தானே!

praying hand

இப்படி இருக்க சில பெண்களின் முகத்தில் தேஜஸ் குறைந்து காணப்படும். அதாவது களையிழந்து காணப்படுவார்கள். எப்போதுமே தூக்கம் அவர்களது முகத்தையும், கண்களையும் தழுவிக்கொண்டே இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டுமல்ல. வேலைக்கு செல்லும் சில பெண்களுக்கும் இப்படிப்பட்ட சூழ்நிலை வரும். இதற்கு என்ன காரணமாக இருக்கும்?

- Advertisement -

பொதுவாகவே பெண்கள் தங்களுடைய வீட்டு பூஜை அறையில், மாலை நேரத்தில் தீபம் ஏற்றி விட்டு, வீட்டில் இருப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் விளக்கு ஏற்றிய பின்பு மகாலட்சுமி மட்டும் நம் வீட்டிற்குள் வரவில்லை. மகாலட்சுமி உடன் சேர்ந்து முனிவர்களும், தேவர்களும், ரிஷிகளும் வருகைதந்து, வீட்டில் உள்ள பெண்ணை ஆசீர்வாதம் செய்வதாக நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

deepam

எந்த ஒரு பெண் தன்னுடைய வீட்டில் மாலை நேரத்தில், தீபம் ஏற்றி வைத்து விட்டு, வீட்டிலேயே இருக்கின்றாளோ, அவர்களுக்கு கட்டாயம் அந்த ஆசீர்வாதம் கிடைக்கும். இதன் மூலம் அந்தப் பெண்ணுக்கு முகத்தில் பொலிவு கூடும். அதாவது சில பெண்களின் முகம் தேஜஸ் ஆக இருக்கும். களையாக இருக்கும் என்று சொல்லுவார்கள். இப்படிப்பட்ட அழகான முக லட்சணம் என்பது, வீட்டில் தினம்தோறும் தீபமேற்றி மாலை நேரத்தில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கிடைக்கும் என்று சொல்கிறது சாஸ்திரம்.

வேலை சுமை காரணமாக விளக்கு வைத்த நேரத்தில், வீட்டில் இல்லாத பெண்களுக்கு இந்த லட்சனம் கிடைக்கவே கிடைக்காது என்று கூறவில்லை. அதாவது வீட்டில் இருக்கும் சமயத்தில், அனாவசியமாக விளக்கு வைத்த நேரத்தில், பெண்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியே செல்லக் கூடாது என்பதற்காகத்தான் இந்த குறிப்பு.

DEEPAM

இன்றைய சூழ்நிலையில் இதெல்லாம் சாத்தியம் ஆகுமா? என்று சிலர் கேள்வி எழுப்பலாம். எந்த சூழ்நிலையாக இருந்தாலும், எந்த காலகட்டமாக இருந்தாலும், பெண்ணாக பட்டவள், பெண் தான். வேலைக்கு சென்று வீடு திரும்பிய பின்பும், முகம் கை கால்களை அலம்பி விட்டு, தீபத்தை ஏற்றி வைத்து, பின்பு ஒரு மணி நேரமாவது உங்களது வீட்டிலேயே இருப்பது பெண்களுக்கும் நல்லது. அந்த குடும்பத்திற்கும் நல்லது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.

deepam

உங்களது அலுவலக வேலையானது, 8 மணிக்கு முடிந்து வீட்டிற்கு திரும்புபவர்களாக இருந்தாலும் கூட, உங்கள் வீட்டில் ஒரு அரை மணி நேரமாவது தீபமேற்றி, இறைவனை வழிபட வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த பதிவு. பெண்களுக்கே உண்டான லட்சணமும், தேஜஸும் ஒரு பெண்ணுக்கு அவசியம் தேவை என்றால், தீபம் ஏற்றும் பழக்கத்தை எந்த சூழ்நிலையிலும் பெண்கள் கைவிடக் கூடாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். முடிந்தவரை வீட்டில் இருக்கும் பெண்கள் விளக்கு வைத்த சமயத்தில் வீட்டை பூட்டி விட்டு வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே
தீய சக்தியை உங்கள் பக்கத்தில் கூட நெருங்க விடாத வேர்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pengal kadaipidikka vendiya seyalgal. Pengal kadamaigal in Tamil. Pengal seiya vendiyavai Tamil. Pengal pinpatra vendiyavai.