ராஜாவிற்கு எப்படி கிரீடம் முக்கியமோ அதேபோல்தான் நாம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய தலையில் இருக்கக்கூடிய தலைமுடி மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. தலைமுடி உதிர ஆரம்பித்து விட்டாலே அதனால் கவலைப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். தலை முடி உதிர்தலால் பலவிதமான அவமானங்களை சந்திக்கக்கூடிய நபர்களும் அந்த அவமானத்தில் இருந்து வெளியே வந்து அவர்களுடைய தலைமுடி வளர்ச்சியை அதிகரிப்பதற்கு தயார் செய்யக்கூடிய ஒரு பொடியை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
முடி வேகமாக வளர
தலைமுடி உதிர்வு என்பது மிகவும் சாதாரண ஒரு செயல்தான். ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தலைமுடி உதிர்தல் என்பது இருக்கத்தான் செய்யும். அதிகப்படியான தலைமுடி உதிர்தல் ஏற்பட்டால் தான் அதனால் ஏதோ ஒரு பாதிப்பு இருக்கிறது என்று கண்டறிந்து அதை சரி செய்ய வேண்டும். அதேபோல் தலை முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக தலைமுடி வளராமல் இருக்கும் பொழுதும் எதனால் வளரவில்லை என்பதை கண்டறிந்து அதற்குரிய சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இது மருத்துவ ரீதியாக செய்யக்கூடிய செயல் என்றாலும் நாமும் நம்முடைய வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் ஒரே ஒரு பொடியை தயார் செய்து வைத்து பயன்படுத்தினால் போதும் நம்முடைய தலைமுடி வளர்ச்சியில் ஒரு நல்ல மாற்றத்தை பார்க்க முடியும்.
இந்தப் பொடிக்கு நமக்கு நான்கே நான்கு பொருட்கள்தான் தேவைப்படும். அவை செம்பருத்தி இலை, கருவேப்பிள்ளை, வெந்தயம், பச்சைப்பயிறு. செம்பருத்தி இலை இரண்டு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு கைப்பிடி அளவு கருவேப்பிள்ளையையும் சேர்த்து நன்றாக வெயிலில் காய வைக்க வேண்டும். இதே போல் 50 கிராம் பச்சை பயிறு 50 கிராம் வெந்தயம் இவற்றையும் தனியாக ஒரு தட்டில் போட்டு வெயிலில் காய வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு நாட்கள் வெயிலில் நன்றாக காயட்டும். பிறகு இவை நான்கையும் மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த இந்த பொடியை ஒருமுறை சலித்து தலைக்கு பயன்படுத்தும் பொழுது தலையில் திப்பி திப்பியாக நிற்காது.
தலைமுடி வளர்ச்சியை தூண்டக்கூடிய பொடி தயாராகிவிட்டது. இரண்டிலிருந்து மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு இந்த பொடியை எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு இதில் சாதம் வடித்த கஞ்சியை ஊற்றி நன்றாக கலந்து நம்முடைய தலைக்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து பிறகு குளித்து விட வேண்டும். இதை நாம் பயன்படுத்தும் பொழுது ஷாம்பு பயன்படுத்தக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை சாதம் வடித்த கஞ்சி இல்லை என்பவர்கள் முட்டை, தயிர் அல்லது தேங்காய் பாலை கூட பயன்படுத்தலாம். இவை அனைத்துமே நம்முடைய தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்க கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. இந்த முறையில் நாம் நம்முடைய தலைக்கு ஹேர் பேக் போடுவதன் மூலம் தலைமுடி உதிர்தல் படிப்படியாக குறையும். மேலும் முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடிகள் வேகமாக வளர ஆரம்பிக்கும்.
இதையும் படிக்கலாமே:ஆவாரம்பூ ஃபேஸ் பேக்
இப்படி ஒரு முறை மட்டும் இந்த பொடியை தயார் செய்தால் போதும் 6 மாதம் வரை எந்தவித கவலையும் இல்லாமல் வைத்து உபயோகப்படுத்தலாம். ஆரோக்கியமான முறையில் நம்முடைய தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்க கூடிய இந்த அற்புதமான பொடியை நாமும் பயன்படுத்துவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.