ஜெராக்ஸ் மிஷின், பிரிண்டர் இல்லாமலேயே ஒரு மெழுகுவர்த்தியை வைத்து இப்படி ஜெராக்ஸ் எடுக்கும், இந்த பழைய ட்ரிக் உங்களுக்கு தெரியுமா? தெரியாதவங்க இப்பவே தெரிஞ்சுக்கோங்க.

wax-printing6
- Advertisement -

இன்று ரொம்பவும் பழைய ஒரு ஐடியாவை தான் திரும்ப நினைவு கூறப்போகின்றோம். 90’s ல பிறந்தவர்களுக்கு இந்த ஐடியா தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் தற்போது இருக்கக்கூடிய பிள்ளைகளுக்கு இந்த விஷயம் எல்லாம் தெரியாது அல்லவா. அவர்கள் கைபேசியும் தொலைக்காட்சி பெட்டியுடனே இணைந்து பொழுதை கழிக்கிறார்கள். இந்த மாதிரி புது புது ஐடியாவை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் போது, வீட்டில் இருக்கும் பிள்ளைகள் ஒரு புதிய விஷயத்தை கற்றுக் கொண்டது போல உணர்வார்கள். அவர்கள் விடுமுறை நாட்களை சந்தோஷமாக கழித்தது போலவும் இருக்கும்.

இந்தக் குறிப்புக்கு நமக்கு தேவையான பொருள். பழைய நியூஸ் பேப்பர் அல்லது பழைய புத்தகங்கள், மெழுகுவர்த்தி, 1 ரூபாய் நாணயம், ஒரு ஏ 4 ஷீட், இந்த நான்கு பொருட்கள்தான். வீட்டில் பழைய நோட்டுப் புத்தகம் இருக்கிறது. அதிலிருந்து வெள்ளை காகிதத்தை கிழித்து கூட இந்த ஐடியாவை முயற்சி செய்யலாம்.

- Advertisement -

ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேலே ஒரு மெழுகுவர்த்தியை வைத்து தேய்க்க வேண்டும். மெழுகு அந்த பேப்பர் முழுவதும் நன்றாக ஒட்டிக் கொள்ளும். இப்போது நியூஸ் பேப்பரை எடுத்துக்கோங்க. பேப்பரில் மெழுகுவர்த்தி தீட்டிய பகுதியை, நியூஸ் பேப்பரின் மேல் கவிழ்த்து வைத்து, 1 ரூபாய் நாணயத்தை வைத்து மேலே நன்றாக தேய்க்க வேண்டும். நியூஸ் பேப்பரில் இருக்கும் அச்சு, மெழுகு வத்தியில் அப்படியே ஒட்டிக்கொள்ளும். அதற்காகத்தான் மேலே ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து நன்றாக அழுத்தம் கொடுத்து தேய்க்க வேண்டும்.

இப்படி செய்தால் நியூஸ் பேப்பரில் இருக்கும் அச்சு வரைபடம் அப்படியே தலைகீழாக நமக்கு வெள்ளை காகிதத்தில் மெழுகு தடவிய பகுதியில் கிடைத்துவிடும். மீண்டும் ஒரு வெள்ளை காகிதத்தை எடுத்து, அதன் மேலே மெழுகுவர்த்தியை தீட்டி, வச்சுக்கோங்க. நம் கையால் தலைகீழாக பிரின்ட் எடுத்து வச்சிருக்கோம் இல்லையா, அதை எடுத்து, இரண்டாவது முறையாக புதுசா மெழுகுவர்த்தி தேய்த்து வைத்திருக்கும் காகிதத்தின் மேல் கவிழ்த்து வைத்து, மீண்டும் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அதன் மேலே தேய்த்தால் தலைகீழாக விழுந்த அச்சு நேரடியாக விழுந்து விடும்.

- Advertisement -

நியூஸ் பேப்பரில் எழுதி இருக்கும் அச்சு அப்படியே ஜெராக்ஸ் எடுத்தது போல உங்களுக்கு கிடைத்துவிடும். இதே போல நியூஸ் பேப்பரில் ஏதாவது அழகான வரைபடம் இருந்தால் கூட அதை மெழுகுவர்த்தியை பயன்படுத்தி ஜெராக்ஸ் எடுக்கலாம். அந்தக் காலத்தில் அறிவியல் பாடத்தில் இருக்கும் வரை படங்களை பிள்ளைகள் இப்படி அச்சு எடுப்பார்கள். இந்த விஷயத்தை உங்களுடைய குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுங்கள். அவர்கள் இதை முயற்சி செய்து பார்த்து நிச்சயமாக சந்தோஷப்படுவார்கள்.

இந்த மழை நேரத்தில் குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே இருப்பார்கள். நிறைய இடங்களில் கரண்டும் இருக்காது அல்லவா. அந்த சமயம் பழைய நினைவுகளை இப்படி நினைவூட்டும் போது நிச்சயமாக மனதிற்குள் சந்தோசமும் நிம்மதியும் இருக்கும். இது ஒரு சின்ன பதிவுதான்.

ஆனால் நிறைய குழந்தைகளுக்கு சந்தோஷத்தை கொடுத்து, பழைய நினைவுகளை கொண்டு வந்து, நேரத்தை கழிக்கும் பதிவாக அமைய வேண்டும் என்பதற்காகவே இந்த நேரத்தில் இதை பதிவு. குறிப்பு பிடிச்சிருந்தா நீங்களும் உங்க வீட்ல இதை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -