உங்களுக்கு ஜாதகப்படி கெட்ட நேரம் நடக்கிறதா? தோஷங்களும் தடைகளும் தானாகவே விலகி செல்ல, விநாயகரை இந்த நேரத்தில் வழிபாடு செய்தால் போதுமே!

vinayagar-vilakku

சில பேரது ஜாதக கட்டத்தில் இருக்கக்கூடிய தோஷத்தின் மூலம், அவர்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். நிறைய பேர் தங்கள் ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்களை நிவர்த்தி செய்ய பரிகாரங்களை மேற்கொள்வார்கள். சரிதான், ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் நீங்க வேண்டும் என்றால், அதற்கான சரியான பரிகார முறைகளை ஜோதிடரிடம் கேட்டு செய்வதன் மூலம்தான் நல்ல பலன் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடைக்காது. இருப்பினும் சிலரால், சில பரிகாரங்களை செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும்.

vinayagar-abishegam

எடுத்துக்காட்டாக, உங்கள் ஜாதகத்தில் ராகு கேதுவால் பலவகைப்பட்ட பிரச்சினைகளை சந்தித்து வருகிறீர்கள். விரயங்கள், விபத்துகள், எதிர்பாராத இழப்புகள், எதிர்பாராத ஆபத்துகள் போன்ற தொடர் பிரச்சனை உங்கள் வாழ்க்கையில் வந்து கொண்டே இருக்கின்றது. சனிபகவானால் உங்கள் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்! இப்படிப் பட்ட பிரச்சினைக்கு என்ன செய்யலாம்.

கிரக தோஷங்களை நிவர்த்தி செய்ய, தினம் தோறும் விநாயகர் வழிபாடு செய்ய வேண்டும். அதுவும், குறிப்பாக எமகண்ட நேரத்தில் விநாயகரை வழிபடுவது மிகப்பெரிய பலன்களை அள்ளிக் கொடுக்கும் என்று சொல்கிறது சாஸ்திரம். இந்த பரிகாரத்தை நிச்சயமாக கோவிலுக்கு சென்று செய்ய வேண்டும். வீட்டில் இருந்தபடி எமகண்ட நேரத்தில் பரிகாரம்,  செய்யக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

விநாயகருக்கு அருகம்புல், பூக்கள் இவற்றைக் கொண்டுபோய் செலுத்துங்கள். நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றி வைத்து, அறுகம்புல்லை உங்களது கைகளில் வைத்துக்கொண்டு உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டம் என்னவோ அதை மனதார விநாயகரிடம் சொல்லி, அந்த கஷ்டத்தில் இருந்து உங்களை வெளியில் கொண்டு வர சொல்லி வேண்டிக்கொள்ளுங்கள். மனதார இந்த வேண்டுதலை விநாயகருக்கு சொல்லிவிட்டு கையில் சிறிது அறுகம்புல்லோடு விநாயகப்பெருமானை 27, 54 அல்லது 108 முறை வலம் வர வேண்டும்.

- Advertisement -

உங்களால் எத்தனை முறை வலம் வர முடியுமோ அத்தனை முறை வலம் வாருங்கள். அதிலும் எந்த ஒரு தவறும் கிடையாது. வலம் வந்த பின்பு உங்கள் கையில் இருக்கும் அருகம்புல்லை விநாயகரின் பாதங்களில் வைத்து விடுங்கள். இப்படியாகத் தொடர்ந்து 48 நாட்கள் முடிந்தால், எமகண்ட நேரத்தில் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் விநாயகப் பெருமானை வழிபாடு செய்யலாம்.  முடியாதவர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமாவது விநாயகரை எமகண்ட நேரத்தில் வழிபடு செய்யுங்கள்.

Arugampul juice benfits Tamil

விநாயகர் கோவிலில் இருந்து நீங்கள் வேறு எந்தப் பொருளையும் உங்கள் வீட்டிற்கு செல்லக்கூடாது. கோவிலில் இருந்து நேராக உங்கள் வீட்டிற்கு தான் செல்ல வேண்டும். மற்ற இடங்களுக்கு செல்லக்கூடாது. விபூதி குங்குமம் பிரசாதத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். மீதம் விபூதி குங்குமம் இருந்தால் அந்த பிரசாதத்தை மட்டும் வீட்டிற்கு கொண்டு வரலாம் அதில் எந்த ஒரு தவறும் இல்லை.

praying god

வெற்றிலை பாக்கு பூ பழம் போன்ற பொருட்களை கோவிலிலேயே விட்டு வருவது சிறந்த பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது. அப்படி இல்லை என்றால் தேங்காய் பழம் இவைகளை வீடு திரும்பும் வழியிலேயே, பசு மாட்டிற்கு சாப்பிட கொடுத்து விடலாம். நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலன் அடைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள், கொடுத்த பணத்தை திரும்ப வாங்க செவ்வாய்க்கிழமையில் இப்படி செய்து பாருங்கள்! உடனே அந்த பணம் கைக்கு வந்து சேரும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.