- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்இரண்டு மூன்று நாட்களுக்கு கெட்டுப் போகாத இந்த இஞ்சி தொக்கை, சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட அமோக...

இரண்டு மூன்று நாட்களுக்கு கெட்டுப் போகாத இந்த இஞ்சி தொக்கை, சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட அமோக ருசியாக இருக்கும்

- Advertisement -

எந்தவொரு கேரள விருந்திலும், குறிப்பாக ஓணம் பண்டிகையில் இது ஒரு முக்கியமான ஊறுகாயாக வழங்கப்படுகிறது. இது கேரள மாநிலத்தின் ஒரு சுவையான, இனிப்பு மற்றும் புளிப்பு இஞ்சி கறி. இஞ்சி, வெல்லம், புளி மற்றும் பிற மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது. இனிப்பு, உப்பு, மற்றும் புளிப்பு கூறுகளின் சரியான கலவைக்கு, இந்த உணவைப் பயன்படுத்துவதற்கு முந்தைய நாள் தயாரிப்பது நல்லது. இதனை இரண்டு, மூன்று நாட்களுக்கு வைத்தும் சாப்பிடலாம். செய்து வைத்த சுவை மாறாமல் அப்படியே இருக்கும். இதை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றோடு தொட்டுக்கொள்ள ஊறுகாயாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது சுட சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் பயன்படுத்திக் கொள்ளலாம். எப்படி சாப்பிட்டாலும் இதன் சுவை அவ்வளவு அற்புதமாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான இஞ்சி தொக்கை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
இஞ்சி – 100 கிராம், பச்சை மிளகாய் – 6, கருவேப்பில்லை – ஒரு கொத்து, எள் – 1 ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 4 ஸ்பூன், வெந்தயம் – 1ஸ்பூன், தேங்காய் எண்ணெய் – 3 ஸ்பூன், கடுகு – 1ஸ்பூன், சிவப்பு மிளகாய் – 5, புளி – எலுமிச்சை பழ அளவு, உப்பு – 1 ஸ்பூன், காஷ்மீரி மிளகாய் தூள் – 1 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், பெருங்காய தூள் – 1/4 ஸ்பூன், வெல்லம் – 2 ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் இஞ்சியை தண்ணீர் சுத்தமாக கழுவிக் கொண்டு, அதனை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். ஒரு எலுமிச்சை அளவிலான புளயை ஒரு கிண்ணத்தில் சேர்த்து அதனுடன் 2 ½ கப் சூடான நீர் ஊற்றி, 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். தண்ணீர் குளிர்ந்ததும் புளியை கரைத்து புளிக்கரைசல் எடுக்க வேண்டும்.

பிறகு அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து அதில் ஒரு ஸ்பூன் எள், ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் சேர்த்து, உளுத்தம்பருப்பு தங்க பழுப்பு நிறமமாகும் வரை அனைத்து பொருட்களையும் ஒரே மாதிரியாக வறுக்க வேண்டும். பிறகு இவற்றை ஆறவைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பிறகு வர மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, நறுக்கி வைத்துள்ள இஞ்சி துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இறுதியாக நறுக்கிய 6 பச்சை மிளகாய் சேர்க்க வேண்டும்.

இஞ்சியின் நிறம் சற்று பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். பிறகு இவற்றுடன் உப்பு சேர்த்து கலந்து விட்டு ,கரைத்து வைத்துள்ள புளி கரைசலையும் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். புளி கரைசல் கொதித்து பச்சை வாசனை போனதும், இவற்றுடன் இரண்டு ஸ்பூன் வெல்லம் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்து விட வேண்டும்.

சற்று முன்