நீங்கள் செய்யும் கேசரி ஒட்டாமல் உதிரியாக இருக்க இந்த ஒரு டிப்ஸை தெரிந்துகொள்ளுங்கள் போதும்

kesari1
- Advertisement -

மிகவும் சுலபமாக செய்யக் கூடிய இனிப்பு என்றால் அது கேசரி மட்டும் தான். கேசரி செய்வதற்கு பெரிதளவில் பொருட்களும் தேவைப்படுவதில்லை, எனவே அதிகம் செலவு செய்ய வேண்டிய அவசியமும் இருப்பதில்லை. ஆகவே தான் அனைவரது வீட்டிலும் இந்த கேசரியை நினைத்த உடனேயே செய்து சாப்பிடுகின்றனர். ஆனால் ஒரு சிலர் செய்யும் கேசரி மிகவும் குழைந்து கையில் எடுக்கும்பொழுது ஓட்டும் தன்மையுடன் இருக்கும். இதனை சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்காது. ஆனால் ஓட்டல்களில் கொடுக்கப்படும் கேசரி வாயில் வைத்த உடனே கரைந்துவிடும். அந்த அளவிற்கு வழுவழுப்பாக, மிகவும் சுவையாக இருக்கும். இவ்வாறு ஹோட்டலில் கொடுக்கும் கேசரி போன்று வீட்டிலேயும் சுவையான கேசரி செய்ய இந்த ஒரு டிப்ஸை தெரிந்துகொள்ளுங்கள். வாங்க நீங்களும் இப்படி சுவையான கேசரி செய்வது எப்படி என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
ரவை – கால் கிலோ, நெய் – 3 ஸ்பூன், எண்ணெய் – 50 கிராம், சர்க்கரை – 200 கிராம், ஏலக்காய் – 4, கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை, முந்திரி பருப்பு – 10, உலர்ந்த திராட்சை – 10.

- Advertisement -

செய்முறை:
முதலில் 4 ஏலக்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கொண்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் கால் கிலோ ரவை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ரவையை தனியாக ஒரு தட்டில் மாற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கப் ரவைக்கு இரண்டு கப் தண்ணீர் என்ற பதத்தில், சரியான அளவு தண்ணீரை அளந்து கொண்டு, அதனை கடாயில் சேர்த்து சூடுபடுத்த வேண்டும். அதன் பிறகு தண்ணீரில் அரைத்து வைத்த ஏலக்காய் பொடியை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஒரு சிட்டிகை கேசரி பவுடரையும் சேர்த்து கலந்து விட வேண்டும். அதே சமயம் மற்றொரு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு சிறிய கடாயை வைக்க வேண்டும். பின்னர் அதில் மூன்று ஸ்பூன் நெய் மற்றும் 50 கிராம் எண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் முந்திரிப்பருப்பு மற்றும் திராட்சை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

கடாயில் தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு, அடுப்பை சிம்மில் வைத்துக் கொண்டு, ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி படாமல் கலந்துவிட வேண்டும். சிறிது நேரம் தட்டு போட்டு மூடி வைத்து ரவை நன்றாக வெந்ததும், அதனுடன் 200 கிராம் சர்க்கரை சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு மற்றொரு கடாயில் இருக்கும் சூடான எண்ணெயை கேசரியுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு இறுதியாக பொரித்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து விட வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது கேசரி குழைந்து போகாமல், கையில் ஒட்டாமல் அருமையாக இருக்கும்.

- Advertisement -