அனைவருக்கும் பிடித்த வெண்டைக்காய் கார குழம்பை ஒரு முறை இப்படி செய்து பாருங்கள். சுட சுட சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடும்பொழுது நாவில் எச்சில் ஊறும் சுவையில் அருமையாக இருக்கும்

vendaikai
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட ஒவ்வொரு வகையான குழம்புகள் செய்யப்படுகிறது. அதிலும் சுடச்சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் ஒருசில குழம்புகள் அனைவருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அப்படி கார குழம்பு, மீன் குழம்பு, கறி குழம்பு இவை அனைத்தும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அளவில்லாத சுவையில் இருக்கும். இப்படி அனைவரும் ருசித்து சாப்பிடும் காரக்குழம்பில் பல வகைகள் உள்ளன. வெங்காய குழம்பு, பூண்டு குழம்பு, வெந்தய குழம்பு, வெண்டைக்காய் குழம்பு, கத்தரிக்காய் குழம்பு என பல வகையான குழம்புகள் இருக்கின்றன. காய்கறிகள் இல்லாமல் கூட இந்த சுவையான குழம்பை செய்ய முடியும். ஆனால் வெண்டைக்காய் சேர்த்து செய்யும் இந்த சுவையான கார குழம்பை நீங்களும் இப்படி ட்ரை செய்து பாருங்கள். பிறகு மீண்டும் அடிக்கடி உங்கள் வீட்டில் கார குழம்பாகத்தான் இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 20, பூண்டு – 10 பல், வெண்டைக்காய் – 150 கிராம், புளி – எலுமிச்சம்பழ அளவு, தேங்காய் – கால் மூடி, மிளகாய் தூள் – 2 ஸ்பூன்= உப்பு – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், தக்காளி – 3, மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் புளியை ஊறவைத்து, நன்றாக கரைத்து, புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கால் மூடி தேங்காயை பொடியாக அறிந்து, அதனை மிக்ஸியில் சேர்த்து, அரைத்து, தேங்காய்ப் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் வெண்டைக்காய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, தனியாக எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வெண்டைக்காய் மிகவும் சுவையாகவும், கொழகொழப்பு இல்லாமலும் இருக்கும்.

- Advertisement -

பிறகு அதே கடாயில் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து தாளித்து, அதனுடன் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு, அதனுடன் வெங்காயம் சேர்த்து கிளறி விடவேண்டும். பின்னர் இவற்றுடன் மஞ்சள் தூள், உப்பு மற்றும் 2 ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின்னர் எடுத்து வைத்துள்ள தேங்காய் பாலை, புளிக் கரைசலையும் சேர்த்து ஒன்றாக கலந்து, வதக்கி வைத்துள்ள கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பிறகு ஒரு தட்டு போட்டு மூடி, மிளகாய் தூள் வாசனை போகும் வரை நன்றாக கொதிக்க விடவேண்டும். பின்னர் இறுதியாக கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழைகளைத் தூவி கலந்து விட்டு, குழம்பை இறக்க வேண்டும்.

- Advertisement -