1 ஸ்பூன் ஈஸ்ட் இவ்வளவு வேலைகளை செய்யுமா? 40 வயதிலும் 20 வயது போல இளமையாக இருக்க இதை மட்டும் செய்யுங்க போதும்.

face14
- Advertisement -

பேக்கரியில் கேக்குக்கு பயன்படுத்தக்கூடிய ஈஸ்ட் வைத்துதான் இன்று ஒரு அழகு குறிப்பை பார்க்க போகின்றோம். நிறைய அழகு குறிப்புகளில் இப்போது இந்த ஈஸ்ட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஈஸ்ட் முகத்துக்கு பயன்படுத்தினால் ஏதாவது பக்க விளைவுகள் வந்து விடுமோ என்று பயப்பட வேண்டாம். உங்களுடைய முகத்தில் இருக்கும் முகப்பரு கரும்புள்ளிகளை நீக்க, சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை நீக்க, இளமையான தோற்றத்தை தக்க வைத்துக்கொள்ள, இந்த பேக் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும். வாங்க நேரத்தைக் கடத்தாமல் இந்த ஈஸ்ட் பேக்கை சுலபமாக எப்படி தயார் செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

இந்த குறிப்புக்கு நமக்குத் தேவையான பொருட்கள் என்னென்ன என்பதை முதலில் பார்த்துவிடுவோம். ஈஸ்ட், பால், தேன், முல்தானிமெட்டி பொடி, இந்த 4 பொருட்கள் மட்டும் இருந்தால் போதும். எல்லா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் களிலும் இப்போது சுலபமாக ஈஸ்ட் கிடைக்கின்றது. சுத்தமாக எடுக்கப்பட்ட கலப்படம் இல்லாத தேன் பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள். பசும் பால் கிடைத்தால் மிகவும் நல்லது. பசும்பால் இல்லாதவர்கள் பாக்கெட் பால் பயன்படுத்திக்கொள்ளலாம்.

- Advertisement -

ஒரு அகலமான பௌலில் ஈஸ்ட் – 1/2 ஸ்பூன் போட்டு வெதுவெதுப்பாக இருக்கும் பால் – 2 டேபிள்ஸ்பூன், சுத்தமான தேன் – 1 ஸ்பூன் ஊற்றி, ஸ்பூன் வைத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதன் பின்பு 10 நிமிடம் அப்படியே ஒரு மூடி போட்டு வைத்து விடவேண்டும். ஈஸ்ட் ஆக்டிவேட் ஆக பத்து நிமிடங்கள் எடுக்கும். பத்து நிமிடங்கள் கழித்து பார்த்தால் நம் கலந்து வைத்த கலவையில் சின்ன சின்ன பப்பிள்ஸ் வந்து இருக்கும். அப்படி இருந்தால் ஈஸ்ட் ஆக்டிவேட் ஆகி விட்டது என்று அர்த்தம்.

இப்போது ஆக்டிவேட் ஆன இந்த கலவையோடு 1/2 ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியை சேர்த்து நன்றாக கலந்து விட்டால் நமக்கு தேவையான பேக் தயாராகிவிட்டது. அவ்வளவு தான். உங்களுடைய கழுத்து மற்றும் முகத்தில் இந்த பேக்கை போட்டுக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

15 லிருந்து 20 நிமிடத்திற்குள் பேக் டைட்டாக காய்ந்துவிடும். அதன் பின்பு குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி விடுங்கள். உங்களுக்கு முகத்தில் இருக்கும் வித்தியாசம் தெரியும். மாதத்தில் நான்கு நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்தலாம். வாரத்தில் ஒரு நாள் என்று போட்டு வந்தால், கூட உங்களுடைய இளமை நிரந்தரமாக நீண்ட நாட்களுக்கு நீடிக்கும். ட்ரை பண்ணி பாருங்க.

பின்குறிப்பு: நாம் பால் சேர்க்கும் போது கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். ரொம்பவும் சூடான பாலை ஈஸ்ட் உடன் சேர்க்கக்கூடாது. ரொம்பவும் ஆறிய பாலையும் ஈஸ்டில் சேர்க்க கூடாது. வெதுவெதுப்பான பால் சேர்த்தால் தான் ஈஸ்ட் ஆக்டிவ் ஆகி நமக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நிறையபேருக்கு முல்தானி மெட்டியை முகத்தில் போட்டால் ட்ரையாகிவிடும் என்ற பயம் இருக்கிறது. முல்தானி மெட்டியை வெறுமனே முகத்தில் போட்டால்தான் சருமம் ட்ரை ஆகும். பால் தயிர் இப்படிப்பட்ட பொருட்களோடு சேர்த்து கலந்து போடும் போது சருமம் ட்ரை அதற்கு வாய்ப்பே கிடையாது.

- Advertisement -