- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval12 ஏலக்காய் இருந்தால் போதும் உங்க வீட்டில் இனி பணப் பிரச்சனையே வராது தெரியுமா? ஏலக்காய்...

12 ஏலக்காய் இருந்தால் போதும் உங்க வீட்டில் இனி பணப் பிரச்சனையே வராது தெரியுமா? ஏலக்காய் தாந்திரீக பரிகாரம்!

- Advertisement -

ஏலக்காய் தாந்திரீகங்களில் பெருமளவு பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருளாக இருக்கிறது. இது பண வசியம் செய்ய அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஏலக்காய் இருக்கும் இடங்களில் பணம் வரத்துக்கு குறை இருக்காது என்கிற ஒரு நம்பிக்கை நிலவுகிறது. அந்த வகையில் ஏலக்காய் வைத்து பண பிரச்சனையை எப்படி தீர்ப்பது? ஏலக்காயில் இருக்கக்கூடிய வியப்பிற்குரிய மர்மங்கள் என்ன? என்கிற ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

ஏலக்காய் என்பது மகாலட்சுமியின் அம்சமாக விளங்குகிறது. மகாலட்சுமியை ஈர்க்கக்கூடிய சக்தி இந்த ஏலக்காய்க்கு உண்டு. முக்கிய விசேஷங்களில் வடமாநிலங்களில் பெரும் அளவில் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. ஏலக்காய் ஒரு நறுமண பொருளாக மட்டும் அல்லாமல், தெய்வீக பொருளாகவும் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விசேஷமான கோவில்களில் எல்லாம் ஏலக்காயை தீர்த்தத்தில் சேர்த்து கொடுப்பது வழக்கம்.

- Advertisement -

ஏலக்காய் சிறந்த மூலிகை பொருளாக, நறுமண பொருளாக, மருத்துவ பண்புகளை கொண்டு விளங்குவதால் ஏலக்காயின் நன்மைகள் எண்ணில் அடங்காதவை. மேலும் இந்த ஏலக்காயின் வாசம் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க செய்கிறது. இதனால் நம்மை தீய சக்திகள் அண்டுவது கிடையாது. 12 ஏலக்காய்களை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சிறிதளவு பச்சை கற்பூரத்தை நொறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு மஞ்சள் துணியில் முடிச்சு போல செய்து, மஞ்சள் நூலால் கட்டி நிலை வாயிலில் தொங்கவிடலாம், இதனால் வீட்டுக்குள் வரக்கூடிய துரதிர்ஷ்டங்கள் வராமல், அதிர்ஷ்டங்களை மட்டும் ஈர்த்து கொடுக்கும்.

ஏலக்காய்களை மணி பர்சில் வைக்கலாம், அதே போல தொழில், வியாபாரம் செய்பவர்கள் கல்லாப்பெட்டியில் ஏலக்காய்களை போட்டு வைக்கலாம். வட மாநில மக்கள், நகை வியாபாரம் செய்பவர்கள், பெரிய பெரிய முதலீடுகளில் ஈடுபடுபவர்கள் ஏலக்காயை எப்பொழுதும் மென்று கொண்டு இருப்பார்கள். ஏலக்காயுடன் சிறிதளவு கற்கண்டையும் சேர்த்து அவர்கள் மெல்வதை நீங்கள் பார்த்ததுண்டா? ஏலக்காயுடன் சிறிதளவு சர்க்கரை அல்லது கற்கண்டு சேர்த்து அடிக்கடி நீங்கள் மென்று வரலாம், இதனால் உங்களுக்கு பண வசியம் ஏற்படும்.

- Advertisement -

உங்களிடம் இருக்கும் தரித்திரம் நீங்கி, நீங்கள் கைராசிக்காரர்களாக மாறவும் வாய்ப்புகள் உண்டு. எல்லோரிடமும் ராசி என்பது அமைவது கிடையாது, ஆனால் ஏலக்காய் இருக்கும் இடத்தில் கைராசி, முகராசி, வசியம், வெற்றி அனைத்தும் குவியும். ஏலக்காய்களை பணம் இருக்கும் இடங்களில் எல்லாம் போட்டு வைக்கலாம். பீரோவில் பணத்தை வைத்தால் சிறிதளவு ஏலக்காய்களையும் சேர்த்து வையுங்கள். இதனுடன் பச்சைக் கற்பூரத்தையும் நொறுக்கி சேர்ப்பது நன்மை தரும். மேலும் ஒரு கண்ணாடி பவுலில் ஏலக்காய்களை முழுவதுமாக நிரப்பி வரவேற்பு அறையில் எல்லோரும் பார்க்கும் படியாக வைத்துக் கொள்ளலாம். இதனால் தனவசியம் அதிகம் உண்டாகும், எவருடைய கண் திருஷ்டியும் நம்மை ஒன்றும் செய்யாது.

இதையும் படிக்கலாமே:
எந்த இடத்திலும் பயம் இல்லாமல் செல்ல, வாழ்க்கையில் வெல்ல, இந்த 1 பொருளை கையில் வைத்துக் கொள்ளுங்கள். தோல்வி உங்கள் பக்கம் வராது.

ஏலக்காய்களை நொறுக்கி பவுடர் செய்து, அதனை ஒரு சிறிய அளவிலான பேப்பரில் மடித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பேப்பரை நீங்கள் ஹேண்ட் பேக், மணி பர்ஸ் போன்ற இடங்களில் எல்லாம் வைத்துக் கொள்ளலாம். பூஜை அறையில் ஏலக்காய்களை பித்தளை அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பி வைக்க, தெய்வ வசியம் உண்டாகும். இதிலிருந்து வரக்கூடிய வாசம் மகாலட்சுமியின் சுபீர்சத்தை உங்களுக்கு கொடுக்கும், இதனால் பணம் வீண் விரயமாவது தடுக்கப்படும். பொருளாதாரமானது உயர ஆரம்பிக்கும். நீங்கள் அதிகம் உழைக்க வேண்டும் என்கிற எண்ணத்தை உருவாக்கும். உழைப்பின் உன்னதத்தை உங்களுக்கு உணர்த்தக்கூடிய இந்த ஏலக்காயை இப்படியும் நீங்கள் பயன்படுத்தி பலன் பெறலாமே!

சற்று முன்