உங்கள் வீட்டிலும் நகை சேர வேண்டுமா? தங்கத்தை சேர்க்கும் மஞ்சள் நிறப் பூ! அது என்ன பூ?

guru thangam

ஒருவருக்கு நகை சேர வேண்டும் என்றாலும், சொத்துகள் சேர வேண்டும் என்றாலும் நம் ஜாதக கட்டத்தில் இருக்கும் கிரகங்கள் சரியான இடத்தில் அமர்ந்திருக்க வேண்டும். நமக்கு நேரம் சரியில்லை என்றால் கொஞ்சம் பொறுத்துப் போவதில் தவறில்லை. கையில் இருக்கும் பணத்தை விரயம் ஆகாமல் தடுக்க, சொத்தாக மாற்ற வேண்டும் அல்லது நகையாக மாற்ற வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால், உங்கள் வீட்டில் உள்ளவர்களின் ஜாதகத்தை பார்த்து யாருடைய ஜாதகத்திற்கு யோகம் உள்ளதோ, அவர்களது பெயரில் வாங்குவது நல்லது. நம்முடைய ஜாதக கட்டத்தில் குரு பகவான் வலுவாக இருந்தால் திருமணம் நிச்சயமாகும் என்று கூறுவார்கள். அதாவது குருபலன் வந்துவிட்டது என்று சொல்வார்கள் அல்லவா! இதேபோல் குரு நம் ஜாதக கட்டத்தில் உச்சத்தில் இருந்தால் நம்மால் அதிக நகைகளையும் வாங்கி சேர்க்க முடியும். குருவின் ஆசிர்வாதம் நமக்கு முழுமையாக கிடைத்தாலும், நம்மால் தங்க நகைகளை வாங்கி குவிக்க முடியும். ஏனென்றால் குருவுக்கு மற்றொரு பெயர் ‘பொன்’.

guru

சரி. ஒருவருக்கு ஜாதகத்தில் குரு வலுவிழந்து இருக்கின்றார். அவர் தங்கத்தை சேர்க்க வேண்டும். என்ன செய்யலாம்? குருவிற்கு உகந்த நாள் எது? குருவிற்கு பிடித்த நிறம் எது? குருவிற்கு என்ன பரிகாரம் செய்தால் நம்மால் குருவின் ஆசியைப் பெற முடியும்? இந்த கேள்விகளுக்கான பதிலை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுலபமான பரிகாரம். எல்லோராலும் செய்யக்கூடிய பரிகாரம். இது ஒரு பரிகாரம் கூட அல்ல. வழிபாடு என்றும் கூறலாம். இப்படி நாம் செய்யும் பட்சத்தில் நமக்கு தங்கம் மட்டும்தான் சேரும் என்று சொல்லிவிடமுடியாது. தங்கத்தோடு சேர்த்து 16 வகையான செல்வங்களும் கூட நம்மை வந்து அடையும் என்றே கூறலாம்.

வாரம் தோறும் வரும் வியாழக்கிழமை அன்று நவகிரக சன்னிதியில் இருக்கும் குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் வாங்கிக் கொடுத்து, மஞ்சள் நிற சாமந்திப்பூ சாத்தி, குரு பகவானை மனதார நினைத்து தொடர்ந்து வேண்டி வந்தால் உங்களுக்கு குரு பகவானின் ஆசி கட்டாயமாக கிடைக்கும். வாரம்தோறும் மஞ்சள்நிற வஸ்திரம் வாங்கிக் கொடுக்க முடியவில்லை என்றாலும், மஞ்சள்நிற சாமந்திப்பூவை குருபகவானுக்கு சூட்டி வழிபட்டு வாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலன் உண்டு.

samandhi

நகையை வாங்கும் யோகம் உங்களுக்கு வந்து, சிறிய குண்டுமணி அளவு தங்க நகையோ வெள்ளி நகையோ வாங்கிவிட்டீர்கள். முதலில் என்ன செய்வது? நவக்கிரகங்களில் இருக்கும் குரு பகவானின் பாதங்களில் நீங்கள் வாங்கிய தங்க நகையை வைத்து சாமந்திப்பூ மலர்களால் அர்ச்சனை செய்துவிட்டு, அதன் பின்பு உங்கள் வீட்டிற்கு கொண்டு வந்து நீங்கள் அணிந்து கொள்ளுங்கள். கட்டாயமாக மேலும் மேலும் தங்கம் சேர்க்கும் நிலை உங்களுக்கு உருவாகும். குரு பகவானின் பாதங்களில் வைத்து பூஜை செய்யப்பட்ட நகை என்றும் அடகு கடைக்கு கட்டாயமாக போகாது என்றும் நம்பலாம்.

- Advertisement -

பொதுவாக தங்கத்தை வாங்கி சேர்க்கும் ஆசை என்பது பெண்களுக்கு தான் அதிகம் இருக்கும். நீங்கள் வியாழக்கிழமை தோறும் மஞ்சள் நிற சாமந்தி பூவை உங்கள் தலையில் சூடிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். நம் வீட்டில் கட்டாயமாக பொன் பொருள் சேர்க்கும் யோகத்தினை இந்த சாமந்திப்பூ நிச்சயமாக தரும். வியாழக்கிழமை அன்று சாமந்திப் பூவை தலையில் சூட்டிக் கொள்வதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. நம்பிக்கையோடு செய்து தான் பாருங்களேன். சிறிய மூக்குத்தியை தங்கத்தில் வாங்கினாலும் அது நமக்கு லட்சுமி கலாட்சியம் தான்.

Today Gold rate

வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் மேற்கண்ட வழிபாட்டு முறைகளை பின்பற்றி வருகிறீர்கள். மனதில் அந்த சமயம் கட்டாயம் இப்படி நினைக்க வேண்டும். ‘மஞ்சள் நிற சாமந்திப்பூவை குருபகவானுக்கு சூட்டி இருக்கின்றோம். நம் வீட்டில் இருக்கும் இறைவனுக்கும் வைத்து இருக்கின்றோம். நம் தலையிலும் மஞ்சள்நிற சாமந்திப்பூ இருக்கின்றது. நாம் கட்டாயம் நிச்சயமாக நகை வாங்கி விடுவோம்’. என்று அந்த ஒரு எண்ணம் உங்கள் மனதிற்கு கட்டாயம் வரவேண்டும். இப்படி ஒரு எண்ணம் நம் மனதில் தோன்றிவிட்டால் நிறைவேறாமல் இருந்து விடுமா? எண்ணம் போல் வாழ்க்கை அமையும் என்பதை மறந்து விடாதீர்கள்.

இதையும் படிக்கலாமே
பணத்தை நம் வசம் ஈர்க்க எந்த எண்ணெயில் தீபம் ஏற்றுவது? பண வசிய எண்ணெயை தயாரிக்கும் ரகசியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Nagai. Thangam sera Tamil. Vettil thangam sera. Thangam thanga pariharam Tamil.