இந்த எலுமிச்சை தோலை எதுக்கெல்லாம் யூஸ் பண்ணலாம்னு தெரிஞ்சா, வெறும் தோல் தானேன்னு இனி யாரும் தூக்கி போடவே மாட்டிங்க. இதை தெரிஞ்சிக்கிட்ட பின்னாடி நீங்களே சொல்லுவீங்க பாருங்க.

- Advertisement -

நாம் வீட்டுக்கு பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களுமே அதன் தேவை முடிந்த பிறகும் வேறொரு விதத்தில் அது பயன்படாத தான் செய்கிறது. அந்த வகையில் இந்த எலுமிச்சை பழத்தை பொருத்த வரையில் வாங்கிய நாள் முதல் அதன் கடைசி தோல் வரை கூட வீணாகாமல் பயன்படுத்திக் கொள்ளலாம் அத்தனை பயன்கள் இந்த எலுமிச்சை பழத்தோலில் உள்ளது. வீட்டு குறிப்பு, சமையல், தோட்டம் என்று இதன் பயன்பாடுகள் இல்லாத இடமே இல்லை என்னும் அளவிற்கு எலுமிச்சை பயன் தருகிறது அதை பற்றிய சில குறிப்புகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வது.

ஃப்ரிட்ஜில் வைத்து காய்ந்து போன எலுமிச்சை பழத்தின் சாறை பாத்திரம் தேய்க்கும் சோப்புடன் கலந்து வைத்து விட்டால் வாசமும் நன்றாக இருக்கும் அதைத் தொட்டு தேய்க்கும் போது பாத்திரங்களும் பள பளப்பாக மாறிவிடும்.

- Advertisement -

அதே போல் பழைய லெமன் பாதி எடுத்து பிழிந்து கொண்டு அதில் அரை ஸ்பூன், பேக்கிங் சோடா சேர்த்து இரண்டையும் நன்றாக கலந்த பிறகு ஒரு பிளாஸ்டிக் பாட்டில் ஊற்றி மூடியில் சிறு சிறு துளைகள் போட்டு ஸ்பிரே போல் செய்து வைத்துக் கொண்டு உங்கள் பிரிட்ஜ் சுத்தம் செய்யும் போது இந்த ஸ்ப்ரேவை பயன்படுத்தி துடைக்கும் போது பிரிட்ஜின் கெட்ட வாடைகளும் நீங்கி விடும் பிரிட்ஜும் பளிச்சென்று மாறி விடும்.

பிழிந்த பிறகு மீதம் இருக்கும் லெமன் தோலை கூட கீழே வீசி விடாமல் ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். ஃப்ரிட்ஜில் அசைவம் வைத்தால் கூட அதன் வாடை வராமல் நறுமணத்துடன் இருக்கும். இதே போல எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி அதில் கொஞ்சம் பேகிங் சோடா சேர்த்து அசைவம் சமைக்கும் நாட்களில் சமையல் அறையில் வைத்து விட்டால் போதும் அசைவம் சமைக்கும் வாடை வராது.

- Advertisement -

கறை படிந்த பாத்திரத்தை சுத்தம் செய்ய ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி லிக்விட் சேர்த்து அதனுடன் அரை எலுமிச்சை பழச்சாறையும் சேர்த்து கொதிக்க வைத்து கழுவினால் அடி பிடித்த பாத்திரம் கறை அனைத்தும் சட்டென்று போய் விடும்.

இதே போல் காய்ந்த எலுமிச்சை பழத்தை தூக்கி எறியாமல் நீங்கள் வீட்டில் பூஜை பாத்திரங்கள் தேய்க்கும் போது பீதாம்பரி அல்லது லிக்விட் எதை வைத்து தேய்த்தாலும் இந்த லெமன் அதனுடன் சேர்த்து தேய்த்துப் பாருங்கள். விளக்கில் உள்ள எண்ணெய் பிசுக்குகள் நீங்கி சுத்தமாகி விடும்.

எலுமிச்சை பழங்களை பயன்படுத்திய பிறகு தோலை தூக்கி எறியாமல் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஊறிய தண்ணீரை வடிகட்டி எடுத்த பிறகு தோலை நீங்கள் கம்போஸ்ட் உரம் தயாரிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். வடித்து எடுத்த இந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி வந்தால் செடிகள் அவ்வளவு சூப்பராக பிரஷ்ஷாக வளரும். அது மட்டும் இன்றி இந்த தோல் செடிகளுக்கு பூச்சி கொல்லி மருந்தவும் பயன்படுத்தலாம்.
இப்படி வேண்டாம் என்று தூக்கிப் போடும் இந்த எலுமிச்சை பழத்தையும் அதன் தோலையும் வைத்து இத்தனை பயன்கள் இருக்கிறது.

- Advertisement -