- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅமாவாசை அன்று சொல்ல வேண்டிய மகாலட்சுமி மந்திரம்

அமாவாசை அன்று சொல்ல வேண்டிய மகாலட்சுமி மந்திரம்

- Advertisement -

பண வரவு அதிகரிக்க, கடன் சுமை குறைய ஏராளமான பரிகாரங்கள் உள்ளது. எக்கச்சக்க பரிகாரங்களை நாமும் முயற்சி செய்து பார்த்திருப்போம். எவ்வளவு முயற்சி செய்தும் என்னுடைய கடன் தீர்ந்த பாடாக இல்லை. எனக்கு வருமானம் உயர்ந்ததாக சரித்திரமே இல்லை.

கையில் பணம் தங்கினதே கிடையாது என்பவர்கள் கூட அமாவாசை தினமான இன்று, மகாலட்சுமியை நினைத்து இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லி, இந்த ஒரு பொட்டை மட்டும், நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொட்டை நெற்றியில் வைத்தால் பணக்காரர் யோகம் வரும். ஆனால், இதற்கு சில வழிபாட்டு முறைகளும் பூஜை முறைகளும் இருக்கிறது. அதை பற்றிய விரிவான தகவலை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

இன்று மகாளய அமாவாசை. எல்லோர் வீட்டிலும் முன்னோர்கள் வழிபாடு, திதி தர்ப்பணம் முறைகள் எல்லாம் சிறப்பாக நடந்து முடிந்திருக்கும். இந்த நாளில், இந்தப் பிரபஞ்சம் முழுவதும் முன்னோர்களின் ஆசிர்வாதமும் நேர்மறை ஆற்றலும் நிறைந்திருக்கும்.

அமாவாசை தினத்தில் அம்பாள் வழிபாடு குலதெய்வ வழிபாடு செய்வது கூட சிறப்பு என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. இத்தனை நேர்மறை ஆற்றல் நிறைந்த இந்த நாளில் நம் பண கஷ்டத்தை தீர்த்து வைக்க போகும் ஒரு சக்தி வாய்ந்த பரிகாரத்தை செய்து முயற்சிப்பதில் எந்த தவறும் கிடையாது.

- Advertisement -

பணம் தரும் மகாலட்சுமி

இன்று மாலை வழக்கம் போல மகாலட்சுமிக்கு முன்பு பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். மகாலட்சுமியின் அம்சம் கொண்ட யோகலட்சுமியை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால், நமக்கான யோகம் நம்மிடம் வரவேண்டும். அதற்கு நாம் வழிபட வேண்டிய தெய்வம் யோகலட்சுமி.

யோகலட்சுமி வழிபாடு

பூஜை அறையில் இருக்கும் மகாலட்சுமியின் திருவுருவப்படத்திலேயே இந்த யோகலட்சுமியை நாம் வழிபடலாம். அமாவாசை அன்று மாலை 6:00 மணிக்கு பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்திருக்கிறோம் அல்லவா. அந்த விளக்கிற்கு முன்பு அமர்ந்து யோகலட்சுமியை மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுக்கு யோகம் அடிக்க வேண்டும் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று முழுமையான பிரார்த்தனையை வைத்து, 21 முறை “ஓம் யோகலட்சுமி நமோ நமஹ” என்ற மந்திரத்தை சொல்லுங்கள். மந்திரத்தை 21 முறை உச்சரித்து விட்டு நல்ல தாழம்பூ குங்குமத்தை உங்களது வலது கை மோதிர விரலால் எடுத்து மகாலட்சுமிக்கு இட்டு விட வேண்டும்.

அந்த குங்குமத்தில் இருந்து, கொஞ்சம் குங்குமத்தை எடுத்து நீங்களும் உங்களுடைய நெற்றியில் யோகலட்சுமி நினைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அமாவாசை நாளில் மாலை 6 டு 7 மணிக்குள் இந்த பூஜையை எவர் ஒருவர் வீட்டில் செய்து இந்த குங்குமத்தை வெற்றி பொட்டில் வைத்திருக்கிறீர்களோ, அவர்களுக்கு அந்த நொடிப் பொழுதில் இருந்து யோகம் கொட்ட தொடங்கி விடும்.

இதையும் படிக்கலாமே: மகாளய அமாவாசையில் அகால மரணம் அடைந்தவர்கள் வழிபாடு

இந்த அமாவாசை அன்று நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். அடுத்த அமாவாசைக்குள் யோகம் நிச்சயம் உங்கள் வீட்டு வாசல் தட்டும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்