உங்க வீட்ல நெல்லிக்காய் இருந்தா இளநரையை பத்தி நீங்க கவலைப்பட வேண்டிய அவசியமே இல்ல. இளநரை மறைவதோடு சேர்த்து முடியும் நல்லா அடர்த்தியாக, செழிப்பாக வளரும்.

nellikai grey black hair
- Advertisement -

அற்புதமான கனி என்று சொல்லக்கூடியது தான் நெல்லிக்காய். நெல்லிக்காயில் இல்லாத சத்துகளே கிடையாது. ஏழைகளின் ஆப்பிள் என்று நெல்லிக்காயை அழைப்பதும் உண்டு. அப்படிப்பட்ட நெல்லிக்காய் நம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்லாமல் நம் தலை முடியின் ஆரோக்கியத்திற்கும் பெரும் பங்கு வகிக்கிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது. இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நெல்லிக்காயை வைத்து இளநரையை மாற்றி அடர்த்தியான கூந்தலை பெற என்ன செய்ய வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

மிகவும் விலையில் மலிவாக இருக்கக்கூடிய இந்த நெல்லிக்காயை நாம் அன்றாடம் நம்முடைய உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் பல நன்மைகள் ஏற்படும். ஆன்மீகத்திலும், உடல் ஆரோக்கியத்திலும் நெல்லிக்கனியின் பங்களிப்பு மிகவும் அதிகமாகவே இருக்கிறது. அதேபோல் தான் நம் கூந்தலை பராமரிப்பதற்கு நெல்லிக்காயின் பங்களிப்பு அவசியமான ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

இதற்கு நாம் முழு நெல்லிக்காயை தான் பயன்படுத்த வேண்டும். நாட்டு மருந்து கடைகளில் நெல்லிமுள்ளி என்று கேட்டால் காய்ந்த நெல்லிக்காய்களை தருவார்கள் அல்லது நாமே நம் வீட்டில் நெல்லிக்காய்களை வாங்கி வீட்டிற்குள்ளேயே காயவைத்து உபயோகப்படுத்தலாம். இந்த நெல்லிமுள்ளியை வாங்கி வர வேண்டும். பிறகு கால் கப் அளவிற்கு செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெயை ஒரு இரும்பு கடாயில் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். எண்ணெய் சிறிது காய்ந்ததும் அதில் நாம் வாங்கி வந்திருக்கும் நெல்லிமுள்ளியை போட வேண்டும். 100 கிராம் அளவு போட்டால் போதும். நெல்லிமுள்ளி நன்றாக சிவந்து கருகும் அளவிற்கு அடுப்பில் இருக்க வேண்டும். அப்பொழுது தான் எண்ணெயும் நிறம் மாறும்.

பிறகு அடுப்பை அணைத்துவிட்டு எண்ணெய் சூடு ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் மாற்றி அதை நாம் தினமும் தலைக்கு தேய்க்க உபயோகிப்படுத்திக் கொள்ளலாம். இந்த எண்ணையை நாம் தினமும் தேய்ப்பதால் நம் தலைமுடியின் வேர்க்கால்கள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்கும்.

- Advertisement -

ஐந்து நெல்லிக்காய்களை வாங்கிக் கொள்ளுங்கள். கொட்டையை மட்டும் நீக்கிவிட்டு மற்றதை பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு நன்றாக தண்ணீர் ஊற்றாமல் அரைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதை ஒரு வடிகட்டியை பயன்படுத்தி நன்றாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த நெல்லிக்காய் ஜூஸ் இரண்டு ஸ்பூன் அளவு எடுத்துக்கொண்டு, ஒரு ஸ்பூன் அளவு ஆலிவ் எண்ணெயை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பிறகு இதை நாம் தலையில் நன்றாக தடவி மசாஜ் செய்துவிட்டு ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் இளநரைகள் அனைத்தும் மாறும். மேலும் தினமும் ஒரு நெல்லிக்காய் என்ற வீதம் நாம் சாப்பிட்டு வர நம் உடம்பில் இருக்கக்கூடிய சத்துக் குறைபாடுகள் அனைத்தும் நீங்கி முடி உதிர்வு என்பது தடுக்கப்படும். ஆரோக்கியமான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும்.

இதையும் படிக்கலாமே: கார்மேகம் போன்ற அடர்ந்த கருங் கூந்தலை பெற இந்த மூன்று பொருட்களை ஒன்றாக சேர்த்து தேய்த்து வந்தாலே போதும். முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர ஒரே எளிய வழி இது தான்.

மிகவும் எளிமையாக அதே சமயம் விலை குறைவாக கிடைக்கக் கூடிய இந்த நெல்லிக்காயை நாமும் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்தி வளமுடன் வாழ்வோம்.

- Advertisement -