காரம் குறைவாக குழந்தைகளுக்கு பிடித்த ருசியில் இருக்கும் இந்த ரவா கிச்சடியை, காய்கறிகள் சேர்த்து ஒருமுறை இந்த சுவையில் செய்து கொடுத்துப் பாருங்கள். அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள்

upma
- Advertisement -

வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் சுலபமாக செய்து விடலாம். ஆனால் குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதை மட்டும் சுலபமாக செய்துவிட முடியாது. அவர்களுக்கு பிடித்த உணவு என்றால் விருப்பமாக சாப்பிடுவார்கள். இதுவே அவர்களுக்கு விருப்பம் இல்லாத உணவை நாம் கொடுப்பதாக இருந்தால் பெரும் போராட்டமாக போராட வேண்டியிருக்கும். ஆகவே குழந்தைகளுக்கு எப்பொழுதும் காரம் குறைவான உணவுகளை தான் செய்து கொடுக்க வேண்டும். காரம் அதிகமான உணவுகளை செய்து கொடுத்தால் ஒரு வாய் உணவைக் கூட சாப்பிட மாட்டார்கள். அப்படி காரம் குறைவாகவும், காய்கறிகள் சேர்த்தும் செய்யக்கூடிய இந்த ரவா கிச்சடியை ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்கள். இதன் ருசிக்கு குழந்தைகள் எனக்கு வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த ரவா கிச்சடியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
ரவை 250 கிராம், கேரட் – 2, மஞ்சள்தூள் – கால் ஸ்பூன், மஞ்சள் மிளகாய் – 2, வெங்காயம் – 1, நெய் – 4 ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, நெய் – 50 மில்லி, முந்திரிபருப்பு – 5.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயத்தை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ள வேண்டும்.

நெய் நன்றாக சூடானதும் அதில் 250 கிராம் ரவை சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த ரவையை ஒரு தட்டில் மாற்றிக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் 3 ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும். பின்னர் இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் காய்கறிகள் சேர்த்து அனைத்தையும் நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

இவற்றுடன் கால் ஸ்பூன் மஞ்சள்தூள் மற்றும் முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் இவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். ரவை 2 டம்ளர் இருந்தது என்றால், நான்கு டம்ளர் அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். அவ்வாறு தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு தண்ணீர் கொதிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

தண்ணீர் நன்றாக கொதித்ததும் இவற்றுடன் வறுத்து வைத்துள்ள ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து கொண்டே வர வேண்டும். அப்பொழுது அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இருதியாக முந்திரிப்பருப்பை எண்ணெயில் வறுத்து சேர்த்து கலந்து விடவேண்டும். அவ்வளவுதான் சுவையான ரவா கிச்சடி சட்டென தயாராகிவிட்டது.

- Advertisement -