இந்த இரு சீனியர் வீரர்கள் உலகக்கோப்பை தொடர் மட்டுமல்ல. கிரிக்கெட் வாழ்க்கையே முடிவுக்கு வருகிறதா ?

yuvi-bajji
- Advertisement -

இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் மே மாதம் 30ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான இந்திய அணி கிட்டத்தட்ட தயாராகிவிட்டது என்றே கூறவேண்டும். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இப்போது சுப்ரீம் பார்மில் உள்ளது.

harbajan

விராட் கோலி தலைமையிலான அணியில் துவக்க ஆட்டக்காரர்களான ரோஹித் மற்றும் தவான் வெளிநாட்டு தொடர்களில் சிறப்பாக செயல் படுவதால் அவர்களே உலகக்கோப்பை தொடர்களில் துவக்க ஆட்டக்காரர்களாக தொடர்வார்கள். மேலும் கோலி,தோனி, ராயுடு, கார்த்திக் மற்றும் ஜாதவ் ஆகியோர் நடுவரிசையில் சிறப்பாக ஆடுகிறார்கள் எனவே இவர்களையும் மாற்ற முடியாது.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சீனியர் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ஹர்பஜன் ஆகியோரின் உலகக்கோப்பை இடம் மட்டுமல்ல கிரிக்கெட் வாழ்வும் முடிவுக்கு வந்துவிட்டது என்றே கூறவேண்டும். ஏனெனில் இருவரும் வயது 35 கடந்துவிட்டனர். எனவே, அவர்களை நிச்சயம் இந்திய அணி அவர்களை எடுக்காது. இந்திய அணியில் இளம் வீரர்கள் பலர் இப்போது சிறப்பாக விளையாடி தங்களது இடத்தினை பலப்படுத்தி உள்ளனர்.

yuvraj

எனவே ஹர்பஜனுக்கு பதிலாக சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோர் உள்ளனர். யுவ்ராஜ்க்கு பதிலாக பண்ட், ஜாதவ், ராகுல் போன்றோர் உள்ளனர். எனவே யுவராஜ் மற்றும் ஹர்பஜன் விரைவில் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார்கள் நம்பலாம். ஏற்கனவே, கவுதம் கம்பீர் ஓய்வு அறிவிப்பினை சில மாதங்களுக்கு முன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

நான் ஆஸ்திரேலியாவில் ஸ்லெட்ஜிங் செய்ததை பற்றி என் அம்மா மற்றும் அக்கா கூறும்போது ஓரே ஷாக் – ரிஷப் பண்ட்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -