Zodiac signs in Tamil and English | 12 ராசிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

Zodiac signs in Tamil and English
- Advertisement -

Zodiac signs in Tamil and English: ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 12 ராசிகள் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆங்கிலத்தில் Zodiac signs என அழைக்கப்படுகின்ற 12 ராசிகளுக்குரிய தமிழ் பெயர்கள் என்ன என்பது குறித்தும் இந்த 12 ராசிகளின் பொதுவான குணாதிசயங்கள் என்னென்ன? என்பது குறித்தும் இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

magam astro

Zodiac signs in Tamil and English

Zodiac signs in TamilZodiac signs in English
மேஷம்Aries
ரிஷபம்Taurus
மிதுனம்Gemini
கடகம்Cancer
சிம்மம்Leo
கன்னிVirgo
துலாம்Libra
விருச்சிகம்Scorpio
தனுசுSagittarius
மகரம்Capricorn
கும்பம்Aquarius
மீனம்Pisces

இந்த 12 ராசிகளும் பஞ்சபூதங்களில் நான்கின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.

- Advertisement -
  • நிலம் ராசிகள்: ரிஷபம், கன்னி, மகரம்
  • நீர் ராசிகள்: கடகம், விருச்சகம், மீனம்
  • காற்று ராசிகள்: மிதுனம், துலாம், கும்பம்
  • நெருப்பு ராசிகள்: மேஷம், சிம்மம், தனுசு

மேஷம்

mesham

ஜோதிட சாஸ்திரப்படி மேஷ ராசி செவ்வாய் பகவானுக்குரிய ஒரு ராசியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மேஷ ராசி என்பது நவகிரகங்களில் சூரியனுக்கு உச்ச வீடாகவும், செவ்வாய் கிரகத்திற்கு ஆட்சியை வீடாகவும், சந்திரனுக்கு சம வீடாகவும், சனி பகவானுக்கே நீச்ச வீடாகவும் திகழ்கிறது. மேஷ ராசியில் பிறந்தவர்கள் மிகவும் தைரியசாலியாகவும், எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வெற்றி காண்பவர்களாகவும் திகழ்வார்கள்.

- Advertisement -

ரிஷபம் – Taurus zodiac sign

rishabam

ரிஷப ராசி என்பது நவகிரகங்களில் சுக்கிர பகவானுக்குரிய ராசிகளில் ஒன்றாக திகழ்கிறது. இந்த ரிஷப ராசி என்பது சுக்கிர பகவானுக்கு ஆட்சி வீடாகவும், சந்திர பகவானுக்கு உச்ச வீடாகவும், சனிபகவானுக்கு நட்பு வீடாகவும், சூரிய பகவானுக்கு பகை வீடாகவும், ராகு – கேது பகவான்களுக்கு நீச்ச வீடாகவும் திகழ்கிறது. ரிஷப ராசியில் பிறந்தவர்கள் செல்வ செழிப்புடன் வாழும் யோகம் பெற்றவர்களாக திகழ்கிறார்கள்.

- Advertisement -

மிதுனம்

Mithunam

மிதுன ராசி என்பது புதன் பகவானுக்கு ஆட்சி வீடாகவும், சந்திரன், சுக்கிரன், சனி, ராகு – கேது ஆகிய கிரகங்களுக்கு நட்பு வீடாகவும், சூரியனுக்கு சம வீடாகவும், செவ்வாய் மற்றும் குருவிற்கு பகை வீடாகவும் திகழ்கிறது. மிதுன ராசிக்காரர்கள் எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதை நேர்த்தியுடன் செய்து பிறரின் பாராட்டுகளை பெறுவார்கள்.

கடகம்

Zodiac signs in Tamil and English - Kadagam

கடக ராசி என்பது சந்திர பகவானுக்குரிய ஆட்சி வீடாகவும், குரு பகவானுக்குரிய உச்ச வீடாகவும், சூரிய பகவானுக்கு சம வீடாகவும், செவ்வாய் பகவானுக்கு நீச்ச வீடாகவும், புதன், சுக்கிரன், சனி, ராகு – கேது ஆகிய கிரகங்களுக்கு பகை வீடாகவும் திகழ்கிறது. கடக ராசியில் பிறந்தவர்கள் பிறர் நலனுக்காக தங்களையே அழித்துக் கொள்வதற்குக் கூட தயங்காத தியாக குணம் கொண்டவர்கள்.

சிம்மம்

Simmam

சிம்ம ராசி என்பது என்பது சூரிய பகவானுக்குரிய ஆட்சி வீடாகவும், சந்திரன், செவ்வாய், புதன், குரு ஆகிய கிரகங்களுக்கு நட்பு வீடாகவும், சுக்கிரன், சனி, ராகு கேது ஆகிய கிரகங்களுக்கு பகை வீடாகவும் திகழ்கிறது. சிம்ம ராசியில் பிறந்தவர்கள் பிறர் மதிக்கத் தக்க வகையில் கம்பீரத்துடன் வாழ்வார்கள்.

கன்னி – Virgo zodiac sign

Zodiac signs in Tamil and English - Kanni

கன்னி ராசி என்பது புதன் பகவானுக்குரிய ஆட்சி மற்றும் உச்ச வீடாகவும், சந்திரன், குரு, சனி, ராகு – கேது ஆகிய கிரகங்களுக்கு நட்பு வீடாகவும், சூரியனுக்கு சம வீடாகவும், செவ்வாய்க்கு பகை வீடாகவும் சுக்கிரனுக்கு நீச்ச விடாகவும் திகழ்கிறது. பிறரைக் கவரும் வகையில் பேச, எழுத திறமை கொண்டவர்களாக கன்னி ராசியினர் திகழ்கின்றனர்.

துலாம்

Thulam

துலாம் ராசி (Zodiac signs in Tamil and English) என்பது சுக்கிர பகவானின் ஆட்சி வீடாகவும், சனி பகவானின் உச்ச வீடாகவும், புதன், ராகு – கேது ஆகிய கிரகங்களுக்கு நட்பு வீடாகவும், சந்திரன், செவ்வாய்க்கு சம வீடாகவும், புதன், ராகு – கேதுவிற்கு நட்பு வீடாகவும், சூரியனுக்கு நீச்ச வீடாகவும் திகழ்கிறது. பிறரை கவர்ந்திழுக்கக்கூடிய அழகும் அறிவாற்றலும் கொண்டவர்களாக துலாம் ராசிக்காரர்கள் திகழ்கிறார்கள்.

விருச்சிகம்

Viruchigam

விருச்சக ராசி என்பது செவ்வாய் பகவானுக்குரிய ஆட்சி வீடாகவும், ராகு – கேது கிரகங்களுக்கு உச்சவீடாகவும், சூரியன், குரு ஆகிய கிரகங்களுக்கு நட்பு வீடாகவும், புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு சம வீடாகவும், சனி பகவானுக்கு பகை வீடாகவும்,, சந்திர பகவானுக்கு நீச்ச வீடாகவும் திகழ்கிறது. விருச்சக ராசியினர் தங்கள் மனதின் உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேச தெரியாத எதார்த்த குணம் கொண்டவர்களாக திகழ்கிறார்கள்.

தனுசு

Dhanusu

தனுசு ராசி (Zodiac signs in Tamil and English) என்பது குருபகவானுக்குரிய ஆட்சி வீடாகவும், சூரியன், செவ்வாய், சுக்கிரன், ராகு – கேது ஆகிய கிரகங்களுக்கு நட்பு வீடாகவும், சந்திரன், புதன், சனி ஆகிய கிரகங்களுக்கு சம வீடாகவும் திகழ்கிறது. பிறருக்கு தங்களின் வாழ்க்கை அனுபவம் மூலம் போதனை செய்கின்ற குருவை போன்று திகழும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் இந்த தனுசு ராசிக்காரர்கள்.

மகரம் – Capricorn zodiac sign

Zodiac signs in Tamil and English - Magaram

மகர ராசி என்பது சனிபகவானுக்குரிய ஆட்சி வீடாகவும், செவ்வாய் பகவானுக்குரிய உச்சவீடாகவும், சுக்கிரன், ராகு கேதுக்கு நட்பு வீடாகவும், சந்திரன், புதனுக்கு சம வீடாகவும், சூரியனுக்கு பகை வீடாகவும், குரு பகவானுக்கு நீச்ச வீடாகவும் திகழ்கிறது. மகர ராசிக்காரர்கள் எதையும் திட்டமிட்டு செயல்படுத்தக்கூடிய செயல் வீரர்களாக திகழ்வார்கள்.

கும்பம்

Kumbam

கும்ப ராசி என்பது சனி பகவானுக்குரிய மற்றொரு ஆட்சி வீடாக திகழ்கிறது. இந்த கும்ப ராசி சுக்கிர பகவானுக்கு நட்பு வீடாகவும், சந்திரன், செவ்வாய், புதன், குரு ஆகிய கிரகங்களுக்கு சம வீடாகவும், சூரியன் ராகு கேது ஆகிய கிரகங்களுக்கு பகை வீடாகவும் திகழ்கிறது. எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்து அதற்கேற்றார் போல் செயல்படும் குணம் கொண்டவர்களாக கும்ப ராசியினர் திகழ்கின்றனர்.

மீனம்

Zodiac signs in Tamil and English - Meenam

மீன ராசி (Zodiac signs in Tamil and English) என்பது குரு பகவானுக்குரிய ஆட்சி வீடாகவும், சுக்கிர பகவானுக்குரிய உச்ச வீடாகவும், சூரியன் செவ்வாய், ராகு கேது ஆகிய கிரகங்களுக்கு நட்பு வீடாகவும், சந்திரன் சனி கிரகங்களுக்கு சம வீடாகவும், புதன் கிரகத்திற்கு நீச்ச வீடாகவும் திகழ்கிறது. ஆடம்பரமாக வாழ விருப்பமும், மக்கள் செல்வாக்கும் அதிகம் கொண்டவர்களாக இந்த மீன ராசியினர் திகழ்கின்றனர்.

- Advertisement -