வீட்டுக்கு திடீர்னு கெஸ்ட் வந்துட்டாங்களா டென்ஷனே ஆகாம, சட்டுனு ஒரு கப் ரவையை எடுத்து பத்தே நிமிஷத்துல சூப்பரான இந்த போண்டா செய்து குடுத்துடுங்க. அப்புறம் உங்களுக்கு ஒரே பாராட்டு மழை தான் போங்க.

- Advertisement -

போண்டா செய்ய வேண்டும் என்றால் அதற்கு முன்னமே மாவு அரைத்து அதன் பிறகு தான் தயார் செய்ய வேண்டும். இந்த முறையில் ஒரு கப் ரவை இருந்தால் போதும் சட்டுனு என்று இந்த ரவை போண்டாவை செய்து விடலாம். இது ஈவினிங் குழந்தைகளுக்கு இன்ஸ்டன்ட் ஸ்நாக்ஸ் ஆகவும் செய்து கொடுக்கலாம். அதே நேரத்தில் வீட்டிற்கு திடீரென கெஸ்ட் வந்து விட்டால், அந்த நேரத்திற்கும் டக்கென்று இந்த ரவை போண்டா கை கொடுக்கும். இதை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செய்முறை

இந்த ரவை போண்டா செய்வதற்கு முதலில் ஒரு பெரிய உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து மசித்து வைத்துக் கொள்ளுங்கள். இது ஒரு புறம் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்து ஒரு பவுலில் ஒரு கப் ரவை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து வைத்து விடுங்கள். 10 நிமிடம் இதை அப்படியே ஊற வைக்க வேண்டும். இந்த ரவை ஊறும் நேரத்தில் நீங்கள் ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு துண்டு இஞ்சி, ஒரு கைப்பிடி கருவேப்பிலை, கொத்தமல்லி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பத்து நிமிடம் கழித்து ஊறி இருக்கும் ரவை மாவில் கால் கப் தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் மசித்து வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கட்டிகள் இல்லாமல் மாவை பிசைந்து கொள்ளுங்கள். இப்போது இத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி அனைத்தையும் சேர்த்து கொஞ்சம் சீரகமும் சேர்த்து கால் டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் பெருங்காயம் என அனைத்தையும் சேர்த்து உளுந்து வடைக்கு அடிப்பதை போல் மாவை அடித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நீங்கள் இப்படி மாவை அடிக்கும் போதே இந்த ரவை, போண்டா மாவின் பதத்திற்கு வந்து விடும். உங்களுக்கு தண்ணீர் அதிகமானது போல் தெரிந்தால் ஒரு ஸ்பூன் மைதா மாவு சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர் போதவில்லை என்றால் கொஞ்சமாக தண்ணீர் கலந்து கொள்ளலாம் அல்லது தயிரையும் கலந்து கொள்ளலாம். அவ்வளவு தான் ரவை போண்டாவிற்கு மாவு தயாராகி விட்டது.

இப்போது அடுப்பை பற்ற வைத்து எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்தவுடன், அடுப்பை மிதமான தீக்கு மாற்றி ஒவ்வொரு போண்டாவாக போட்டு எடுக்க வேண்டியது தான்.

இதையும் படிக்கலாமே: காரசாரமாக ரசிச்சு ரசித்து சாப்பிட இப்படித்தான் கார சட்னி செய்யணும் தெரியுமா? 10 நிமிடத்தில் அசத்தலான ஸ்பெஷல் கார சட்னி ரெசிபி இதோ உங்களுக்காக!

இந்த போண்டா விற்கு தேங்காய் சட்னி, கார சட்னி, எது வேண்டும் ஆனாலும் அரைத்து சைடு டிஷ் ஆக பரிமாறலாம். போண்டாவின் சுவைக்கும் இந்த சட்னி வைக்கும் பிரமாதமாக இருக்கும்.

- Advertisement -