9 முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா?

9-muka-rudraksha

ருட்ராட்சம் சிவனின் அம்சம் கொண்ட ஒரு தெய்வீக பொருளாகும். சிவனின் பெயரால் தீட்சை பெற்று துறவறம் ஏற்பவர்கள் அணிய வேண்டிய ஒரு தெய்வீக அணிகலனாக ருட்ராட்சம் இருக்கிறது. ருட்ரட்சத்தில் பல வகைகள் உள்ளன அதில் “9 முக ருத்ராட்சம்” அணிவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளாலாம்.

9 muki

9 முக ருத்ராட்சம் பலன்கள்

காரிய வெற்றி
9 முக ருத்ராட்சம் சிவனின் பாதியான சக்தி தேவியின் அம்சம் கொண்டதாகும். இந்த ருத்ராட்சம் அணிபவர்களுக்கு அவர்கள் மேற்கொள்கின்ற முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படாமல் காரிய வெற்றி உண்டாகும். எல்லா வகையான கேடுகளிலிருந்தும் அணிபவரை பாதுகாக்கும். சக்தி தேவியின் பூரண அருளை பெற்று தரும்.

செவ்வாய் பகவான்

ஒரு மனிதனின் உடலில் ரத்தம், நோய் எதிர்ப்பு சக்தி, வீரம், போர்திறன் ஆகியவற்றிற்கு செவ்வாய் பகவான் காரகன் ஆகிறார். இந்த செவ்வாய் ஒருவரின் ஜாதகத்தில் பாதகமான நிலையில் இருக்க அவருக்கு செவ்வாய் தோஷம் ஏற்படுகிறது. செவ்வாய் தோஷம் நீங்கவும், செவ்வாய் பகவானின் நன்மையான பலன்களை பெறவும் 9 முக ருத்ராட்சம் அணிந்து கொள்வது நல்லது.

9 muki

- Advertisement -

கால சர்ப்ப தோஷம்

கால சர்ப்ப தோஷம் என்பது சிலரின் ஜாதகத்தில் ஏற்படுகின்ற ஒரு தோஷமாக இருக்கிறது. இந்த தோஷம் ஏற்பட்ட நபர்கள் திருமண தடை, புத்திர தடை, பாம்புகள் போன்ற விஷ ஜந்துகளால் ஆபத்து போன்றவற்றை அனுபவிக்க நேரிடுகிறது. 9 முக ருத்ராட்சம் அணிபவர்களுக்கு கால சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் பாதகமான பலன்களை குறைக்கிறது.

பெண்கள்

இன்றைய காலங்களில் உலகெங்கும் பெண்களுக்கு பல வகையான ஆபத்துகள் ஏற்படுகின்றது. மேலும் வெளியில் சென்று வீடு திரும்பும் வரை பல பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க நேரிடுகிறது. மாதவிடாய் காலங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் பெண்கள் இந்த 9 முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் அவர்களை அனைத்து வித ஆபத்துகளிலிருந்தும் காக்கும் கேடயமாக இந்த ருத்ராட்சம் செயல்படும்.

9 muki

சிறந்த குணங்கள்

சமுதாயத்தில் நாம் சிறந்த நிலையை அடைய தைரியம், திட நம்பிக்கை, விட முயற்சி போன்றவை நம்மிடம் இருக்க வேண்டியது அவசியம். 9 முக ருத்ராட்சம் அணிந்து கொள்பவர்களுக்கு அவர்களிடமுள்ள எதிர்மறையான குணங்கள் நீங்கி, மேற்கூறிய சிறந்த குணங்கள் உண்டாக்கி வாழ்வில் அனைத்து நன்மைகளையும் பெற செய்யும்.

பயம்

பயம் என்கிற உணர்வு அனைத்து உயிரினங்களிலும் உண்டு. மனிதர்களிடமும் இந்த பய உணர்வு இருக்கிறது. ஆனால் இந்த பய உணர்வு சமயங்களில் எல்லை மீறி எதெற்கெடுத்தாலும் பயம் கொள்கிற பயந்த சுபாவத்தை அம்மனிதர்களிடம் உருவாக்குகிறது. இந்த குறைபாடு நீங்க 9 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் இப்பிரச்சனையிலிருந்து மீளலாம்.

9 muki

நரம்பு கோளாறுகள்

உடலில் ரத்தத்தை பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வதும், தலையில் இருக்கும் மூளை உடலின் பிற உறுப்புகளுடன் தொடர்பு கொள்ளும் ஒரு உறுப்பாக நரம்புகள் இருக்கிறது. இந்த நரம்புகள் வலுவோடு இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். நரம்பு தளர்ச்சி, மூளை சம்பந்தமான பாதிப்புகள் கொண்டவர்கள் 9 முக ருத்ராட்சத்தை அணிந்து கொள்வதால் சிறப்பான பலன்களை பெறலாம்.

செல்வங்கள் பெருக

உலகில் வாழ்வதற்கு அனைவரும் நியாயமான முறையில் பொருள் ஈட்டுவது அவசியம் ஆகும். சிவபெருமானின் அம்சம் கொண்டவை ருத்திராட்சங்கள் ஆகும். அதிலும் நேர்மறை சக்திகளை அதிகம் கொண்ட 9 முக ருத்திராட்சம் அணிந்து கொள்ளும் தொழில், வியாபாரங்கள் செய்யும் மனிதர்களின் செல்வ நிலை உயர தொடங்கும். அதிக செல்வம் மற்றும் புகழ் போன்றவை உங்களுக்கு கிடைக்கும்.

9 muki

மன அமைதி

மனிதனுக்கு உடல் நலம் எந்தளவிற்கு நன்றாக இருக்க வேண்டுமோ, அதே அளவிற்கு மன நலமும் நன்றாக இருக்க வேண்டியது அவசியம். 9 முக ருத்ராட்சத்தை கழுத்தில் அணிந்து கொள்வதால், அதிலிருந்து வெளிப்படும் சக்திகள் உடலுக்குள் சென்று பதட்ட நிலையை கட்டுப்படுத்தி மன அழுத்தங்கள் மற்றும் கோளாறுகளை சரி செய்து மன அமைதியை ஏற்படுத்துகிறது.

இதய நோய்கள்

சிலருக்கு பதட்டம் ஏற்படும் போது இதயத்தில் ரத்த ஓட்டம் அதிகரிப்பது இயல்பானது. ஆனால் இதயம் சம்பந்தமான நோய்கள் கொண்டவர்கள், பிறவியிலேயே பலவீனமான இதயம் கொண்டவர்கள் எதற்கு பதட்டப்படாமல் இருக்க வேண்டியது அவசியமாகும். இத்தகையவர்கள் 9 முக ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் இதய படபடப்பு ஏற்படுவது குறைந்து இதயம் நலம் காக்கப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:
8 முக ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் நன்மைகள்

இது போன்று மேலும் பல ஆரோக்கியம் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 9 mukhi rudraksha benefits in Tamil. It is also called as 9 faced rudraksha in Tamil or 9 mukhi ruthratcham in Tamil or Ruthratcham palangal in Tamil or 9 muga ruthratcham nanmaigal in Tamil.