2022 புத்தம் புதிய ஆண்டில் நாம் தவறாமல் கடைபிடிக்க வேண்டிய 10 தீர்மானங்களை(resolutions) தெரிந்து கொள்வோமா?

2022
- Advertisement -

ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் முன்பு அனைவருமே ஒரு சில தீர்மானங்களை எடுத்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு எப்படியோ போய் தொலைந்து விட்டது. இனி வரும் புதிய ஆண்டில் இதையெல்லாம் நாம் செய்யக்கூடாது! இதையெல்லாம் நாம் செய்ய வேண்டும்! இப்படித்தான் இனி நாம் வாழ வேண்டும் என்கிற ஒரு நல்ல விஷயத்தோடு ஆரம்பிப்பது உண்டு. ஆனால் அதையெல்லாம் கடைசியில் செய்தோமா? இல்லையா? என்பது கேள்விக்குறிதான்! 2022 ஆம் ஆண்டு முதல் நீங்கள் எடுக்க வேண்டிய தீர்மானங்கள்(resolutions) என்னென்ன? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

health

தீர்மானம் 1:
இன்று நமக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை ஆரோக்கியம் ஆகும். நாம் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத நோய்கள் நமக்கு ஏற்படுவதில் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நம்முடைய ஆரோக்கியம் நம்முடைய எதிர்காலத்தை மட்டுமல்லாமல், நம்மை சார்ந்தவர்கள் உடைய எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்றன எனவே இந்த வருடத்தில் ஆரோக்கிய ரீதியான அக்கறையை இன்னும் மேம்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது.

- Advertisement -

தீர்மானம் 2:
இன்று இருக்கும் நவீன உலகில் பக்கத்து வீட்டில் இருப்பவர்களை கூட மொபைல் போனில் தான் பார்த்துக் கொள்கிறோம். யாரும் நேருக்கு நேர் பேசுவது கிடையாது, பார்ப்பதும் கிடையாது எனவே நட்பு வட்டம் என்பது சுருங்கிவிட்டது. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வாரத்திற்கு ஒரு முறையாவது பேசி உறவை வளர்க்க வேண்டும். மற்றவர்கள் நமக்கு என்ன செய்கிறார்கள்? என்பது நமக்கு முக்கியமல்ல! நாம் அவர்களுக்கு என்ன செய்கிறோம்? செய்தோம்? என்பது முக்கியமாகக் கருத வேண்டும்.

happy-friends

தீர்மானம் 3:
நமக்கு பொக்கிஷமாக இருக்கும் சில நினைவுகளை நாம் இந்த நாளில் பத்திரப்படுத்தி வைக்கலாம். அதாவது லேப்டாப் அல்லது மொபைல் போனில் இருக்கும் பிச்சர்கள், வீடியோக்கள், நீங்கள் சேமித்த மற்ற தகவல்கள் போன்றவற்றை பிரித்து பத்திரப்படுத்தி வைத்தால் சில நினைவுகளை இழக்காமல் தவிர்க்கலாம்.

- Advertisement -

தீர்மானம் 4:
வருடம் முழுவதும் நாம் உழைத்துக் கொண்டே தான் இருக்கிறோம். முன்பெல்லாம் பிறந்த நாள், திருமண நாள் வாழ்த்துக்களை மெனக்கெட்டு அமர்ந்து தயாரித்து போஸ்ட் செய்வது உண்டு ஆனால் இப்போதோ ஒரு எஸ்எம்எஸ் அனுப்ப கூட நமக்கு நேரம் இல்லாமல் போய்விட்டது. இதற்காக இந்த வருடம் முழுவதும் உங்களுக்கு முக்கியமாக இருக்கும் நபர்களுடைய, முக்கிய நாட்களை அலாரம் செட் செய்து கொள்ளலாம். இது உறவுகளை மேலும் வலுவாக்க உதவும்.

mobile-cellphone

தீர்மானம் 5:
வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி புதிதாக தேவையான மற்ற பொருட்களை வாங்கி வைப்பது மற்றும் வீட்டை சுத்தம் செய்வது போன்றவற்றை புத்தாண்டில் செய்து விட்டால் நமக்கு மனதில் ஒருவிதமான புத்துணர்வு உண்டாகும்.

- Advertisement -

தீர்மானம் 6:
கஷ்டப்பட்டு ஓடி ஆடி உழைக்கும் பணத்தை அனுபவிக்க முடியாமல் பலருக்கும் போய்விடுகிறது என்கிற விரக்தி உண்டு. இந்த விரக்தி மனப்பான்மை நீக்குவதற்கு மாதம் ஒரு முறையோ அல்லது வாரம் ஒருமுறையோ உங்கள் வசதிக்கு ஏற்ப திட்டமிட்டு குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் பயணங்கள் மேற்கொள்ள தீர்மானம் எடுக்கலாம். இது உங்களுடைய மனோ பலத்தை அதிகரிக்க செய்யும்.

dairy

தீர்மானம் 7:
ஒவ்வொரு வருடம் ஆரம்பிக்கும் பொழுது ஒரு புது டைரியை வாங்கி அன்றைய நாள் என்ன நடந்தது? என்பதை குறித்து வைத்துக் கொள்வதை நாம் அறிந்திருப்போம். உங்களில் பலரும் இந்த பழக்கத்தை வைத்திருக்கலாம். இது போல் டைரி எழுதும் பழக்கம் வைத்திருந்தால் அந்த ஆண்டின் இறுதியில் அதனை புரட்டிப் பார்க்கும் போது ஒருவித மன நிறைவு மற்றும் மகிழ்ச்சி ஏற்படுவதை நீங்கள் உணர முடியும். இது உங்களுடைய அடுத்தகட்ட நகர்வையும், உங்கள் வாழ்க்கையின் அர்த்தத்தையும் உணர வைக்கும்.

தீர்மானம் 8:
வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கு நேரம் ஒதுக்க நாம் மறந்து போய் விடுகிறோம். இதனால் அவர்கள் தனிமையை உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள். நமக்கு துணை தேவைப்பட்ட போதெல்லாம் நம்முடன் துணையாக இருந்த நம் பெற்றோர்கள் மற்றும் தாத்தா, பாட்டிகளுக்கு கொஞ்ச நேரமாவது ஒதுக்கி அவர்களுடைய அனுபவங்களையும், எதிர்கொண்ட சவால்களையும் காதால் கேட்டால் நமக்கும், அவர்களுக்கும் மனநிறைவு உண்டாகும்.

tree-astro

தீர்மானம் 9:
இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு மரத்தையாவது நட்டு போக வேண்டும் என்பது பலருடைய கனவாக இருக்கிறது. வாழ்நாளில் நீங்கள் ஒரு மரத்தை வளர்த்தால், உங்களுக்கு புண்ணியம் கோடி சேரும். எனவே இந்த புத்தம் புதிய ஆண்டில் புத்தம் புதிய மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்தால், ஆண்டின் இறுதியில் உங்களுக்கே உங்கள் மீது ஒரு பேரன்பு உண்டாகும்.

money

தீர்மானம் 10:
நீங்கள் செய்யும் செலவுகளை அனுதினமும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். பணத்தின் அருமை அதை எழுதி வைக்கும் பொழுது தான் நம்மால் உணர முடிகிறது. இல்லையேல் தண்ணீர் போல பணத்தை செலவாக்கி விட்டு பிறகு மாத கடைசியில் தலையில் துண்டைப் போட்டு அமர வேண்டியதாக இருக்கும். இப்படி நல்ல விஷயங்களை நாம் இந்த புத்தம் புதிய ஆண்டில் கடைபிடிக்க துவங்கினால் ஆண்டின் இறுதியில் நாம் திரும்பி பார்த்தால் நல்ல நினைவுகள் நிச்சயம் இருக்கும்.

- Advertisement -