தொண்டைக்குழி வரை இருக்கிறது ஆனால் என்ன பாட்டு என்பது மட்டும் தெரியவில்லையா? இனி கவலைய விடுங்க இதை உடனே தெரிஞ்சுக்க தான் கூகுள் ஆப் இருக்கே!

google-find-song
- Advertisement -

சில சமயங்களில் மனதிற்குள் நமக்கு பிடித்த பாடல்களுடைய சில வரிகள் மட்டும் நினைவில் வந்து தீ மூட்டும். ஆனால் அதனுடைய துவக்க வரி என்ன? என்பதை மூளை மறந்து போய்விடும். இந்த சமயத்தில் வரும் உணர்வுக்கு என்ன பெயர் சொல்வது? என்பதே தெரியாது! எவ்வளவோ யோசித்தும் இப்பாடலின் முதல் வரி மட்டும் நமக்கு நினைவில் தோன்றுவது கிடையாது.

அது போல பாடலின் வரிகள் எதுவுமே நினைவில் சில சமயங்களில் நிற்காது, ஆனால் அதனுடைய இசை மட்டும் மனதிற்குள் நீங்காமல் ஒலித்துக் கொண்டே இருக்கும். அந்த இசைக்கு உரிய வரிகள் என்ன? என்பதை நம் மூளை மறக்க செய்து விடும். இந்த சமயத்திலும் இது போன்ற ஒரு உணர்வை நாம் அனுபவிக்க கூடும். இப்படியான சூழ்நிலையில் சட்டுனு ஒரே நொடியில் நமக்கு அது என்ன பாடல்? என்ன வரிகள்? என்பதை எடுத்துக் கொடுக்கிறது google ஆப்! கூகுள் ஆப்பில் நாம் செய்ய வேண்டியது என்ன? எப்படி நம் தொண்டை குழிக்குள் சிக்கி தவிக்கும் இந்த பாடல்களை கண்டுபிடிப்பது? என்பதை தான் இந்த பதிவில் நாம் தொடர்ந்து பார்க்க இருக்கிறோம்.

- Advertisement -

இவ்வுலகில் நமக்கு பிடித்த பாடல்கள் எண்ணில் அடங்காதவையாக இருக்கின்றன. எல்லாவற்றையும் நம்மால் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடிய அளவிற்கு நம் மூளையானது பரந்து விரிந்து செயல்படுவது கிடையாது. தேவையானதை மட்டுமே எடுத்துக் கொள்ளும் இந்த மூளையால் தான் மனிதன் இன்றும் ஓரளவுக்கு நிம்மதியாக இருக்கின்றான். இல்லையேல் அவ்வளவு தான்.

சில சமயங்களில் இது போல தொண்டை குழிக்குள் சிக்கி தவிக்கும் பாடல்கள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமாக மேலிட துவங்கிடும். அந்த சமயத்தில் யாருக்காவது போன் போட்டு இது என்ன பாடல்? என்று நாம் கேட்க கூட செய்திருப்போம் அல்லது அருகில் இருப்பவரை நச்சரித்துக் கொண்டே இருந்திருப்போம் ஆனால் இனி யாரையும் நாம் தொந்தரவு செய்யாமல் நம் கையில் இருக்கும் மொபைல் போனில் இருக்கக் கூடிய கூகுள் ஆப் மூலமாகவே சில நொடிகளில் அது என்ன பாடல்? என்பதை கண்டுபிடித்து விடலாம்.

- Advertisement -

முதலில் உங்கள் மொபைல் போனில் டீஃபால்டாக இருக்கக் கூடிய கூகுள் ஆப்பை திறந்து கொள்ளுங்கள். கூகுள் ஆப்பை திறந்ததும் மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் குறியிடப்பட்டுள்ள மைக்கை கிளிக் செய்யுங்கள். மைக்கை திறந்ததும் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு லிசனிங்.. search a song.. அதாவது பாடல்களை தேடுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதில் search a song என்னும் பொத்தானை அழுத்தினால் நமக்கு நினைவில் இருக்கக்கூடிய வரிகளை மட்டும் பாடி கொள்ளலாம். அது உடனே எந்த பாட்டுடன்? எவ்வளவு சதவீதம் ஒத்துப் போகிறது? என்கிற தகவல்களுடன் கூடிய மொத்த லிஸ்டையும் நமக்கு எடுத்துக் கொடுக்கும்.

பாடல் வரிகளுக்கு பதிலாக உங்கள் மனதில் இருக்கக் கூடிய அந்த இசையை ஹம் செய்தால் கூட போதும். அது எந்த பாட்டுடைய ஹம்மிங் என்பதை தேடி கண்டுபிடித்து கொடுத்து விடும்.

- Advertisement -