உங்க மொத்த குடும்பமும் எப்போதும் உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க தினமும் இதை சாப்பீடுங்க. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சும்மா பம்பரம் போல சுழல்வார்கள், அது மட்டும் இல்லாம ஹாஸ்பிடல் போற அவசியமே வராது.

salad
- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் நோய் நொடி இல்லாத மனிதர்கள் கிடையவே கிடையாது. வீட்டிற்கு ஒருவராவது தினமும் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம் நம்முடைய வாழ்வியல் மாற்றங்கள் தான். முன்பை போல் உடல் உழைப்பு அதிக அளவு இல்லாததோடு உணவிலும் பலவகையான மாற்றங்களை செய்து விட்டோம். ஆகையால் அதன் விளைவுகளையும் நாம் கண்டிப்பாக சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் தான் உள்ளோம்.

இது எல்லாம் சரி செய்ய முதலில் நம்முடைய உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்கு முடிந்த அளவு அடுப்பில் வைத்து சமைக்காத காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. அப்படி ஒரு நன்மை தரக்கூடிய அதிக சத்துமிக்க ஒரு ஃப்ரூட் சாலட்டை எப்படி செய்வது என்று தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

ஃப்ரூட் சாலட் செய்வது எப்படி
இந்த ஃப்ரூட் சாலட் செய்ய முதலில் ஒரு பெரிய பவுல் ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒன்றரை கப் அதிகம் புளிக்காத தயிர் சேர்த்து கொள்ளுங்கள் இத்துடன் கால் டீஸ்பூன் உப்பை மட்டும் சேர்த்து முதலில் தயிரை நன்றாக அடித்து விடுங்கள்.

இப்போது ஒரு ஆப்பிளை எடுத்து மேல் தோலை சீவி ஆப்பிளை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஆப்பிளின் தோலிலும் அதிக அளவு சத்துக்கள் உள்ளது. ஆனால் இப்பொழுது எல்லாம் ஆப்பிள் தோலில் மெழுகு கலந்தது உள்ளது. இதை அப்படியே பயன்படுத்துவது ஆபத்து. தோலுடன் உண்ண வேண்டும் என நினைத்தால் சிறிது நேரம் உப்பு தண்ணீரில் போட்டு வைத்த பிறகு அதை சுத்தம் செய்த பின் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரு மாம்பழம் எடுத்து அதையும் தோல் இல்லாமல் உள்ளிருக்கும் சதை பகுதிகளை மட்டும் எடுத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். மாதுளை பழத்தின் முத்துக்களை உரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் தயிர் கலவையில் சேர்த்து சுவைக்கு போதுமான அளவு தேன் கலந்து வீட்டில் அனைவருக்கும் சாப்பிட கொடுங்கள்.

தினமும் ஒரு ஆப்பிள் எடுத்துக் கொண்டால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என்று சொல் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆப்பிளில் அந்த அளவிற்கு சத்துக்கள் உள்ளது. அதே போல் மாம்பழத்திலும் புற்றுநோய்கள் செல்களை அழிக்க கூடிய சக்தி அதிக அளவில் உள்ளது. இத்துடன் இதில் சேர்த்து இருக்கும் மாதுளை முத்துக்கள் உடம்பில் ரத்தத்தின் அளவை அதிகரித்து அதை சுத்தப்படுத்தி சுறுசுறுப்புடன் இருக்க செய்யும்.

இதையும் படிக்கலாமே: அட! இந்த தண்ணில இவ்வளவு விஷயம் செய்யலாமா? இது தெரியாம இத்தனை நாள் இதை வீணாக கீழே ஊத்திட்டமே அப்படின்னு பீல் பண்ற அளவுக்கு நிறைய டிப்ஸ் இருக்கு வாங்க பார்க்கலாம்.

எப்போதும் நாம் கடைகளில் விற்கும் உணவுகளையும் அல்லது வீட்டில் அதிக அளவு மசாலா, காரம், எண்ணெய் சேர்த்த பொருட்களையும் உண்டு உடம்பை கெடுத்துக் கொள்கிறோம். அது போல இல்லாமல் ஒரு வேலையாவது இந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது இனி மருத்துவமனை செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. இனி மேலேனும் இது போல உணவுகளை சாப்பிட பழகிக் கொள்ளுங்கள்.

- Advertisement -