வெறும் பத்தே நிமிடத்தில் சிங்கிள் இருக்கும் பத்து பாத்திரங்களை தேய்க்க செம ஐடியா.

vessels
- Advertisement -

பாத்திரத்தை இப்படித்தான் தேய்க்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், பாத்திரத்தை இப்படியும் தேய்க்கலாம் என்று இல்லத்தரசிகள் தெரிந்து கொள்வதற்காக இந்த எளிமையான வீட்டு குறிப்பு. என்னதான் வீட்டை சுத்தம் செய்தாலும், இந்த சிங்கை மட்டும் காலி செய்யவே முடியாது.

ஒரு நாலு பாத்திரத்தை தேய்த்து முடித்தால், 40 பாத்திரத்தை கொண்டு வந்து பையனும், கணவரும் போடுவார்கள். இதை மாற்ற யாராலும் முடியாது. ஆனால் இந்த பாத்திரத்தை சுலபமாக தேய்க்க செலவை கம்மி பண்ண, ஒரு ஐடியா இருக்குது.

- Advertisement -

சிங்கிள் இருக்கும் பாத்திரத்தை சுலபமாக தேய்க்க

பத்து ரூபாய் பாத்திரம் தேய்க்கும் சோப். எந்த பிராண்ட் வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம். விம், சபீனா, எக்ஸோ எந்த சோப்பு வேண்டும் என்றாலும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த சோப்பை ஒரு கிரேட்டரில் துருவிக் கொள்ளுங்கள். இரண்டு டேபிள்ஸ்பூன் அளவு வந்தால் போதும். மீதி முக்கால்வாசி சோப்பு மீதம் இருக்கும்.

ஒரு பாத்திரத்தில் இந்த சோப்பு துருவலை போட்டு ஒரு சொம்பு அளவு தண்ணீரை ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள். நன்றாக சோப்பு துகள்கள் கரையட்டும். பிறகு இதை ஒரு வாட்டர் கேனில் ஊற்றி மூடி போட்டுக்கோங்க. அந்த மூடிக்கு மேலே சின்ன சின்ன ஓட்டையை போட்டுக்கோங்க அவ்வளவுதான். லிக்விட் தயார். இதற்கு விம் லிக்விட் ஊற்றியே தேய்க்கலாம் என்று சிலர் சொல்லலாம். விம் ஜெல் விலை அதிகம். ரொம்ப நாளைக்கு நீடித்து வராது.

- Advertisement -

சரி இப்போது நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த சோப்பு லிக்விடை எப்படி பயன்படுத்துவது என்று பார்த்து விடுவோம். சிங்கிள் போடுவதற்கு முன்பு பாத்திரங்களில் இருக்கும் மிச்சம் மீதி சாதம் கருவாப்பிலை கொத்தமல்லி தழை மிளகாய் எல்லா வற்றையும் எடுத்து ஒரு குப்பை கூடையில் போட்டு விடுங்க.

பாத்திரத்தை எப்போதுமே சாப்பிட்ட பிறகு அப்படியே கொண்டு போய் சிங்கிள் போடக்கூடாது. இப்போது பாத்திரங்கள் எல்லாம் சிங்கிள் நிரம்பி இருக்கு. அப்படியே பரப்பி போட்டு இருக்கீங்க. அதன் மேலே நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த வாட்டர் கேனில் இருக்கும் சோப்பு தண்ணீரை தெளித்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு ஸ்பான்ஞ்சு நாரை எடுத்து கடகடகடன்னு இப்போது அந்த பாத்திரங்களை எல்லாம் தேய்ச்சி முடிக்கலாம். ஒவ்வொரு முறை நாரை சோப்பில் இருந்து தொட்டு தடவி எடுக்கக்கூடிய வேலை மிச்சம். சில பேருக்கு இப்படி சோப்பை எடுக்கும்போது, கையில் நகக்கணுக்களில் எல்லாம் சோப்பு புகுந்து கொண்டு எரிச்சலை கூட கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: சமையலறைககு தேவையான புத்தம் புது 10 குறிப்புகள்

பாத்திரங்கள் எல்லாம் காய்ந்து போய் இருந்தாலும் இந்த லிக்விட் தண்ணீரிலேயே அந்த பாத்திரங்கள் எல்லாம் நன்றாக ஊறிவிடும். அது மட்டுமல்லாமல் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த லிக்விடே இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உங்களுக்கு வரும். பத்து ரூபாய் சோப்பு பல நாள் நீடிக்கும். நீங்க வேண்டும் என்றால் இந்த குறிப்பை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம். உங்களுக்கு இந்த முறை பிடித்திருந்தால் இதே போல பாத்திரங்களை சுலபமாக தேய்க்கலாம்.

- Advertisement -