108 ஆம்புலன்சிற்கு 108 என்ற நம்பர் வைத்ததன் காரணம் தெரியுமா? இதை கேட்ட நீங்களே அசந்து போயிடுவீங்க.

108
- Advertisement -

வீட்டிலும் சரி, ரோட்டிலும் சரி ஒருவருக்கு உடல்நிலை சரி இல்லை என்றால் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது 108 ஆம்புலன்ஸ் தான். அந்த அளவிற்கு இந்தியாவில் 108 ஆம்புலன்ஸ் பிரபலம். அவசர கால ஊர்தியான இந்த 108 ஆம்புலன்ஸ் எப்போது இருந்து இயங்கி வருகிறது?, 108 என்ற எண்ணிற்கு பின் ஒளிந்துள்ள உண்மை என்ன? இது எந்தெந்த மாநிலத்தில் இயங்கி வருகிறது? இப்படி 108 ஆம்புலன்ஸ் குறித்த பல தகவல்களை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

ஆரம்ப காலகட்டத்தில் நோயாளிகளை மருத்துவரிடமோ மருத்துவமனைக்கோ கொண்டு செல்ல மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். பிறகு அவர்களால் முடிந்த வகையில் கட்டிலில் படுக்க வைத்தோ அல்லது துணிமேல் படுக்க வைத்தோ தூக்கி சென்றனர். காலப்போக்கில் இந்த நடைமுறையானது மாறிவந்தது.

- Advertisement -

1487 ஆம் ஆண்டு ஐரோப்பா கண்டத்தில் உள்ள எசுப்பானிய என்னும் நாட்டில் தான் முதன் முதலில் அவசர ஊர்தி நடைமுறைக்கு வந்தது. பிறகு தொழிநுட்ப வளர்ச்சி பெறுக பெறுக 19 ஆம் நூற்றாண்டில் நவீன சிகிச்சை கருவிகளோடு கூடிய ஆம்புலன்ஸ் பரவலாக பல நாடுகளில் வளம் வந்தன.

இந்தியாவை பொறுத்தவரையில் 108 ஆம்புலன்ஸ் சேவை என்பது முதன் முதலில் ஆந்திர மாநிலத்தில் அரசு சார்பாக 2007 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அதன் பிறகு குஜராத் மாநிலத்திலும் இது துவங்கப்பட்டது. அதன் பிறகு முன்னாள் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் இதை தேசிய ஊரக சுகாதாரம் திட்டத்தின் கீழ் கொண்டுவந்தார்.

- Advertisement -

தற்போது 108 ஆம்புலன்ஸ் திட்டமானது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், ராஜஸ்தான், கோவா, குஜராத், உள்ளிட்ட 18 மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களின் நண்பனாக இருக்கும் 108 ஆம்புலன்ஸ் மூலம் இதுவரை எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.

இந்த 108 ஆம்புலன்சிற்கு 108 என்ற எண்ணெய் ஒதுக்கியதற்கு பின்பும் ஒரு சுவாரஸ்யம் ஒளிந்துள்ளது. பொதுவாக இந்து மதத்தில் 108 என்பது புனித எண்ணாகவே பார்க்கப்படுகிறது. ஒரு மந்திரத்தை ஜபிக்க வேண்டும் என்றால் கூட 108 முறை ஜபிக்க சொல்லி நாம் கேட்டிருப்போம். அப்படினாயா ஒரு சிறப்பான எண் அவரச ஊர்திக்கு வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டும் அல்லாது அறிவியல் ரீதியாக பார்க்கையில் நம்முடைய கண்கள் முதலில் எண் ஒன்றை தான் கவனிக்குமாம் அடுத்து பூஜ்யம் மற்றும் எட்டை எளிதில் கவனிக்குமாம். அதனால் 108 என்ற எண்ணை அவசரமான பதற்றம் நிறைந்த நேரத்திலும் எளிதில் டயல் செய்துவிடலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -