முன் நெற்றி வழுக்கையில் முடியை, அதிவேகமாக வளரச் செய்ய கூடிய, சுலபமான, சூப்பரான ரெமிடி இதைவிட வேறு எதுவுமே இருக்க முடியாது!

hair2

நம்மில் நிறைய பேருக்கு இருக்கக்கூடிய பிரச்சனை முன் நெற்றியில் வழுக்கை. முன்னாடி நெற்றியில் சில பேருக்கு முடி வளர்ச்சி மிக மிக குறைவாக இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு மிக மிக சுலபமான முறையில், அதிவிரைவாக, அந்த வழுக்கையில் முடி வளர செய்வதற்கான ஒரு ரெமிடியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை தலைப்பகுதியில், வழுக்கையாக இருக்கும் எந்த இடத்தில் தடவினாலும், அந்த இடத்தில் முடி வளர்வது உறுதி. நீங்களும் தாராளமாக ட்ரை பண்ணி பார்க்கலாம். எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாத இயற்கையான முறையில் சொல்லப்பட்டுள்ள வைத்தியம் தான் இது.

hair3

முதலில் முடி கொட்டுவதற்கு முதன்மையான காரணம் நம்முடைய உடலில் சூடு அதிகமாக இருப்பது தான். உடலில் இருக்கும் சூட்டை தணிக்கும் பட்சத்தில், முடி உதிர்வு குறைக்கப்படும். இதற்காக முதலில் நம்முடைய தலைமுடிக்கு ஆயில் மசாஜ் கொடுக்க வேண்டும். அதற்கு 3 எண்ணெய் தேவைப்படும். பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், (பாதாம் எண்ணெய் இல்லை என்றால் நல்லெண்ணெய் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.) இந்த 3 எண்ணெயில் இருந்தும் 1 ஸ்பூன் அளவு எடுத்து, மூன்றையும் ஒன்றாக கலந்து, டபுள் பாய்லின் மெத்தடில் மிதமாக சூடு செய்து கொள்ள வேண்டும்.

அதன் பின்பு வெதுவெதுப்பாக இருக்கும் இந்த எண்ணெயை முன்நெற்றியில் எந்த இடங்களில் வழுக்கை இருக்கின்றதோ அந்த இடத்தில் நன்றாக வட்டவடிவில் தடவி, மசாஜ் செய்யவேண்டும். தலை முழுவதும் இந்த எண்ணையை தேய்த்து கொண்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றே! இது ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே உங்களுடைய தலையில் இருக்கலாம். இந்த எண்ணெய் வேர் கால்களில் நன்றாக ஊறும்போது போது முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

hair4

மறுநாள் காலை எழுந்து சின்ன வெங்காயம் 6 லிருந்து 7 எடுத்துக் கொள்ளுங்கள். தோலை உரித்து மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும். இதனுடன் தேங்காய் எண்ணெய் 1 ஸ்பூன், வல்லாரை பொடி 1/2 ஸ்பூன் சேர்த்து விழுது போல் அரைத்து உங்களுடைய நெற்றிப் பகுதியில் வழுக்கை இருக்கும் இடத்தில் தடவி, நன்றாக 20 லிருந்து 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கலாம்.

- Advertisement -

வல்லாரைக் கீரையாக கிடைத்தாலும், அந்த இலைகளை எடுத்து வெங்காயத்துடன் சேர்த்து அரைத்து தடவி கொள்ளலாம். தவறொன்றும் கிடையாது. இப்படியாக வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் உங்களுடைய முடியில் இந்த இரண்டு மசாஜ் செய்து வரும் பட்சத்தில் வழுக்கை இருக்கும் இடத்தில் அதிவிரைவாக முடி வளர்வதை உங்களால் உணர முடியும். இன்னும் வேகமாக முடி வளர்ச்சி தேவை என்றால், தொடர்ந்து 10 நாட்கள் இந்த குறிப்பை பின்பற்றி வந்தாலும் தவறு இல்லை. ஆனால் சின்ன வெங்காயம் விளக்கெண்ணை இந்த பொருட்கள் அனைத்துமே உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியவை.

hair5

உங்களுடைய உடலின் தன்மை சட்டென்று ஜலதோஷம் பிடிக்கும், காய்ச்சல் வரும் என்றால் இந்த குறிப்புகளை தலை முழுவதும் அப்ளை செய்யாமல் வெறும் முன்நெற்றியில் மட்டும், வழுக்கை உள்ள இடங்களில் மட்டும் கூட அப்ளை செய்து கொள்ளலாம். உங்களுடைய விருப்பம் தான். ட்ரை பண்ணி பாருங்க! நிச்சயமாக நல்ல ரிசல்ட் தெரியும்.

இதையும் படிக்கலாமே
எப்படிப்பட்ட பித்ருசாபமாக இருந்தாலும், முன்னோர்களின் சாபமாக இருந்தாலும், இந்த ஒரு பரிகாரத்தை, ஒரு முறை செய்தால் கூட போதும். பாவத்திற்கு விமோசனம் கிடைத்து விடும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.