புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது எப்படி? அதன் பலன்கள் என்ன?

Perumaal
- Advertisement -

பெரும்பாலான இந்துக்கள் புரட்டாசி மாதத்தில் விரதம் இருப்பது வழக்கம். இந்த விரதத்தை முறையாக இருந்தால் நாம் பல பலன்களை அடையலாம். வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

Perumal

புரட்டாசி சனி விரதம் இருப்பது எப்படி

புரட்டாசி சனிக்கிழமை அன்று அதிகாலையில் எழுந்து வீட்டு வாசலில் கோலமிட்டு பின் குளித்துவிட்டு பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையின் இருபக்கமும் குத்து விளக்கேற்ற வேண்டும். பின் அலங்கார பிரியரான வேங்கடேசப் பெருமாள் அலர்மேல்மங்கை தாயாருடன் இருக்கும் படத்தை பூஜை அறையில் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு மாவிளக்கேற்றி நாம் அன்று சுவாமிக்கு படைக்க இருக்கும் நிவேதியங்களான சர்க்கரை பொங்கல், வடை, பாயசம் போன்றவற்றை படைத்தது புஜயை துவங்க வேண்டும். பெருமாளுக்குரிய பாடலையும் சுலோகங்களையும் பூஜையின்போது சொல்லலாம்.

Lord Perumal

புரட்டாசி விரதம் பலன்கள்:

புரட்டாசி சனிக்கிழமைகளில் மாவிளக்கேற்றி வழிபடுவதன் மூலம் நாம் பெருமாளின் அருளோடு சேர்த்து குலதெய்வத்தின் அருளையும் முழுமையாக பெறலாம். இதனால் வீட்டில் உள்ள அனைத்து புருளாதார பிரச்சனைகளும் தீரும். அதோடு வீட்டில் இருக்கும் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும்.

- Advertisement -

சனி தோஷம் இருக்கும் ஜாதகர்கள் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கோயிலிற்கு சென்று சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவதன் மூலம் சனி தோஷம் நீங்கி வாழ்வில் ஏற்றம் பெறுவர். அதோடு அஷ்டம சனி, கண்ட சனி, ஏழரை சனி போன்ற சனியின் பிடியில் இருப்பவர் இந்த மாதத்தில் விரதம் இருந்து பெருமாளை மனதார பிராதிப்பதன் மூலம் சனியின் உக்கிரம் குறைந்து சனியால் ஏற்படும் தடைகள் அனைத்தும் விலகி வாழ்வில் ஏற்றம் பெறுவர்.

புரட்டாசியில் விரதம் இருப்பதோடு, பசியால் வாடும் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் அளிப்பதன் மூலம் ஏழைகளின் பசி பறந்தோடுவது போல நம் துன்பங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகிச்செல்லும்.

இதையும் படிக்கலாமே:
விரதம் இருக்கையில் கூறவேண்டிய பெருமாள் மந்திரம்

English Overview:
Here we have Purattasi viratham irupathu eppadi in Tamil. It is also called as Purattasi sani viratham in Tamil or Purattasi sanikilamai viratham in Tamil .

- Advertisement -