உங்கள் ராசிக்கு எப்படிப்பட்ட பர்சை பயன்படுத்தினால் மேலும் மேலும் பணம் விரயமாகாமல் சேரும்? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

pursewithcash

நாம் உபயோகிக்கும் மணிபர்ஸ் என்பது மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும் ஒரு பொருளாக இருக்கும். புதியதாக ஒரு மணி பர்சை வாங்கும் பொழுது அதில் ராசியான நபர்களின் கைகளால் வாங்கிய பணத்தை முதல் முதலில் போடுவது என்பது அந்த மணிபர்சில் அதிக அளவிற்கு பணத்தை சேர்க்கும் என்ற நம்பிக்கை உண்டு. 12 ராசிக்காரர்களும் எந்த வகையான மணி பர்சை பயன்படுத்தினால் அவர்களுக்கு மேலும் மேலும் பணம் பெருகும்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம். வாருங்கள் போகலாம்.

purse

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசியில் பிறந்தவர்கள் கருப்பு நிற மணி பர்சை தவிர்ப்பது மிகவும் நல்லது. இவர்கள் கருப்பு நிறப் பர்சை பயன்படுத்தினால் இருக்கும் பணமும் சுலபமாக விரயம் ஆகிவிடும். நீங்கள் உங்கள் ராசிக்கு பச்சை நிற பர்ஸ் பயன்படுத்துவது மிகுதியான அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் வெண்மை நிற மணி பர்சை உபயோகிப்பது வீண் விரயத்தை ஏற்படுத்தும். எனவே அவற்றை தவிர்த்து மற்ற நேரங்களில் குறிப்பாக சிவப்பு நிறத்தை பயன்படுத்துவது அதிர்ஷ்டத்தைத் தரும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசியில் பிறந்தவர்கள் கருப்பு மற்றும் மஞ்சள் நிற பணப்பையை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இந்த நேரங்களில் பணத்தை வைப்பது துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். அந்த மணிபர்சில் பணமே தங்காது. நீங்கள் உங்கள் ராசிக்கு நீல நிற மணி பர்சை பயன்படுத்துவது அதிர்ஷ்டத்தை தரும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசியில் பிறந்தவர்கள் ஆரஞ்சு மற்றும் கருப்பு வர்ண பர்சை பயன்படுத்துவது நல்லதல்ல. உங்கள் ராசிக்குரிய அதிர்ஷ்ட நிறம் உள்ள மணிபர்ஸ் என்றால் அது காவி நிறமாகும்.

- Advertisement -

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சிகப்பு மற்றும் நீல நிற வர்ணங்களை தவிர்ப்பது நல்லது. ஆரஞ்சு நிற மணிபர்ஸ் பயன்படுத்தினால் அதில் மேலும் மேலும் பணம் அதிகமாக சேர்வதற்கு வாய்ப்புகள் உருவாகும்.

கன்னி
kanni
கன்னி ராசியில் பிறந்தவர்கள் உங்கள் ராசிக்கு உரிய மணிபர்ஸ் சதுரமாக இருப்பது மிகவும் நல்லது. மேலும் அடர் வண்ணங்கள் கொண்ட பணப்பையை உபயோகிப்பது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

துலாம்
Thulam Rasi
துலாம் ராசியில் பிறந்தவர்கள் சதுரம் மற்றும் சிறிய அளவிலான மணி பர்சை உபயோகிப்பது மிகவும் நல்லது. குறிப்பாக உங்கள் ராசிக்கு காப்பி எனப்படும் பிரவுன் கலர் மணிபர்ஸ் உபயோகிப்பது மிகவும் நல்லது.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் உங்கள் ராசிக்கு அடர்த்தியான நிறம் உள்ள மணிபர்ஸ் உபயோகிப்பது மிகவும் நல்லது. குறிப்பாக அதில் பச்சை நிற பணப்பையாக இருப்பது மேலும் அதிர்ஷ்டத்தை உண்டாக்கும். நிறம் குறைந்துள்ள மணி பர்சை தவிர்த்து விடுங்கள்.

தனுசு
dhanusu
தனுசு ராசியில் பிறந்தவர்கள் நீங்கள் பயன்படுத்தும் மணிபர்ஸ் அல்லது ஹேன்ட் பேக் எதுவாக இருந்தாலும் அதில் அதிக படியான ஜிப் வைத்து உள்ளவையாக இருந்தால் மிகவும் நல்லது. வெளிர் நிறமுள்ள மணி பர்சை பயன்படுத்துவது யோகத்தை தரும்.

மகரம்
Magaram rasi
மகர ராசியில் பிறந்தவர்கள் உங்கள் ராசிக்கு உரிய நிறமான சிவப்பு நிற மணி பர்சை பயன்படுத்துவது நல்லது. பச்சை, கருப்பு, வெள்ளை போன்ற நிறங்களில் இருக்கும் மணிபர்ஸ் களை தவிர்ப்பது மிகவும் நல்லது.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசியில் பிறந்தவர்கள் சிமெண்ட் நிறமுள்ள மணி பர்சை பயன்படுத்துவது மிகவும் நல்லது. மேலும் உங்களுடைய மணிபர்ஸ் செவ்வக வடிவில் இருப்பது அதிர்ஷ்டத்தை தரும்.

மீனம்
meenam
மீன ராசியில் பிறந்தவர்கள் வெளிர் நிறம் உள்ள மணி பர்சை தவிர்ப்பது நல்லது. அதே போல சதுர வடிவ மணி பர்சை உபயோகிப்பது வீண் விரயத்தை உண்டாக்கும் என்பதால் அதனையும் தவிர்த்து விடுங்கள். செவ்வக வடிவில் இருக்கும் அடர் நிறமுள்ள மணி பர்ஸ்களை சிவப்பு, பச்சை போன்ற நிறமுள்ள பர்சை பயன்படுத்துவது அதிர்ஷ்டத்தை தரும்.