12 ராசியினருக்கும் செல்வம் பெருகச் செய்யும் பரிகாரங்கள்

astro

நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் பல இன்பங்களை அனுபவிக்க செல்வம் இன்றியமையாததாக இருக்கிறது. ஜோதிடத்தில் 12 ராசிகள் பற்றி பல விடயங்கள் கூறப்பட்டிருக்கின்றன. அதில் இந்த 12 ராசியினரும் தங்களின் வாழ்வில் பொருளாதாரத்தில் சிறப்பான நிலையை ஈட்டுவதற்கு செய்ய வேண்டிய சில எளிமையான பரிகார முறைகள் கூறப்பட்டிருக்கின்றன. அவை என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.

மேஷம்

Mesham Rasi

மேஷ ராசியினர் தங்களின் வாழ்வில் பொருளாதார உயர்வுகளை பெற வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் முருகன் கோயிலுக்கு சென்று முருகப்பெருமானுக்கு நெய் தீபங்கள் ஏற்றி வழிபட்டு வர வேண்டும். மாதமொருமுறை முருகன் கோவிலுக்கு செல்லும் முன்பு குறைந்த பட்சம் ஒரு மூன்று யாசகர்களுக்கு உணவு பொட்டலங்களை வாங்கி கொடுத்து விட்டு பின்பு கோயிலுக்கு சென்று வணங்க வேண்டும்.

ரிஷபம்

Rishabam Rasi

ரிஷப ராசியினர் தங்களின் வாழ்வில் சிறப்பான பொருளாதார வளர்ச்சியினை பெறுவதற்கு தினமும் ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டு வருவது நன்மை பயக்கும். நீங்கள் வசிக்கும் பகுதிக்கருகில் உள்ள கோயில்களில் தத்தாத்ரேயர் சந்நிதி இருப்பின் அங்கு வியாழக்கிழமைகளில் சென்று வழிபடும் வாடிக்கையை கட்டிப்பிடித்து வந்தால் உங்களை தரித்திரங்கள் அணுகாமல் காக்கும்.

மிதுனம்

midhunam

- Advertisement -

மிதுன ராசியினர் தங்களின் வாழ்வில் சிறப்பான பொருளாதார உயர்வுகளை பெறுவதற்கு தங்களின் வீடுகளில் மணி பிளான்ட் எனப்படும் அலங்கார செடியை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். இச்செடியில் இருந்து வெளிப்படும் ஆற்றல்கள் உங்கள் ராசிக்கு எதிர்மறையான பலன்களை அதிகம் உண்டாக்கும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.

கடகம்

Kadagam Rasi

கடக ராசியினர் தங்களின் வாழ்வில் சிறப்பான பொருளாதார முன்னேற்றங்களை பெறுவதற்கு இனிப்புகள் மீது தடவப்படும் சிறு வெள்ளி தாள் ஒன்றை வாங்கி அதை உங்கள் வீட்டின் முன்வாசலில் வைத்து எரித்து, அந்த சாம்பலை வீட்டில் தூவிவிடுவதால் உங்களுக்கு பொருளாதார முடக்க நிலை போன்றவை ஏற்படாது .

சிம்மம்

simmam

சிம்ம ராசியினர் தங்களின் வாழ்வில் சிறப்பான பொருளாதார உயர்வுகளை பெறுவதற்கு வாழ்நாள் முழுவதும் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்து வர வேண்டும். மேலும் உங்கள் தந்தையின் இறுதி காலம் வரை அவருக்கு மனத்துயரம் ஏற்படாதவாறு நன்கு கவனித்து வந்தால் சூரிய பகவானின் முழு அருளாசிகள் உங்களுக்கு கிடைத்து செல்வப்பெருக்கு உண்டாகும்.

கன்னி

Kanni Rasi

கன்னி ராசியினர் தங்களின் வாழ்வில் பொருளாதார உயர்வை பெறுவதற்கு புதன் கிழமைகளில் புதன் பகவானுக்கு விரதம் மேற்கொள்வதால் சிறப்பான பலன்கள் உண்டாகும். மேலும் விரதம் இருக்கும் அன்றைய தினத்தில் யாருக்கும் கடன் கொடுப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்ற செயல்களை அறவே வெறுக்க வேண்டும்.

துலாம்

Thulam Rasi

துலாம் ராசியினர் தங்களின் வாழ்வில் சிறப்பான பொருளாதார முன்னேற்றங்களை அடைய நீங்கள் ஆண்களாக இருக்கும் பட்சத்தில் பெண்களை இழிவான வார்த்தைகள் கொண்டு திட்டுவதோ, அவமரியாதையாக பேசுவதையோ அறவே தவிர்ப்பதால் உங்களுக்கு லட்சுமி தேவியின் அருளாசி கிடைத்து செல்வ நிலை உயர்ந்து கொண்டே போகும்.

விருச்சிகம்

Virichigam Rasi

விருச்சிக ராசியினர் தங்களின் வாழ்வில் சிறப்பான பொருளாதார உயர்வுகளை அடைவதற்கு யாரிடமும் எக்காலத்திலும் இலவசமாக எதையும் பெற்று கொள்ளாதீர்கள், அப்படி பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் பதிலுக்கு உங்களால் முடிந்த ஏதேனும் ஒரு பொருளை உங்களுக்கு அன்பளிப்பு அளித்தவர்களுக்கு கொடுப்பது நன்மைகளை தரும்.

தனுசு

Dhanusu Rasi

தனுசு ராசியினர் தங்களின் வாழ்வில் சிறப்பான பொருளாதார முன்னேற்றங்களை அடைவதற்கு உங்களின் செயல்பாடுகளால் யாரையும் ஏமாற்றாமல் இருப்பது நல்லது.அத்தகைய எண்ணங்கள் ஏற்படாதவாறு பார்த்து கொள்ள வேண்டும். வழக்குகளில் பொய் சாட்சியம் அளிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உங்கள் ராசியின் நாயகனான குரு பகவான் இந்த இரண்டையும் விரும்புவதில்லை.

மகரம்

Magaram rasi

மகர ராசியினர் தங்களின் வாழ்வில் மிக சிறந்த பொருளாதார நிலையை அடைவதற்கு எல்லா காலங்களிலும் அடர் கருப்பு, அடர் நீலம் மற்றும் ரோஸ் நிற ஆடைகளை அணிவதை தவிர்த்தாலே உங்களை நோக்கி துர்சக்திகள் ஈர்க்கப்படுவதை தவிர்த்து உங்கள் வாழ்வில் வளமை பெருகும்.

கும்பம்

Kumbam Rasi

கும்ப ராசியினர் தங்களின் வாழ்வில் பொருளாதார ரீதியான ஏற்றங்களை பெறுவதற்கு சுத்தமான வெள்ளியை உருக்கி சிறு துண்டுகளாக செய்து அதை ஒரு வெள்ளை நிற தாளில் போட்டு மடித்து உங்களின் பணம் வைக்கும் பர்ஸ், தொழில், வியாபார இடங்களில் இருக்கும் கல்லா பெட்டியில் போட்டு வைத்தால் மேலும் மேலும் உங்களிடம் பணத்தை ஈர்க்க செய்யும்.

மீனம்

Meenam Rasi

மீன ராசியினர் தங்களின் வாழ்வில் மிக உயரிய பொருளாதார நிலை அடைய உங்களால் முடிந்த போதெல்லாம் உங்களின் வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு உங்கள் கைகளால் அரிசி இன்ன பிற தானியங்களை இரையாக போட்டு வர வேண்டும். புறாக்கள், குருவிகள் போன்றவற்றிற்கும் அவ்வப்போது இரையளித்து வருவது நன்மையளிக்கும்.

இதையும் படிக்கலாமே:
ஆந்தை அலறல் பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 12 rasi selva pariharam in Tamil.