நாளை ஆவணி மாதத்தின் கடைசி நாள், ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து பிரதோஷ தினமும் வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை ராகு கால நேரம். இந்த நேரத்தில் பிரதோஷ வழிபாடு செய்தால் நமக்கு வாழ்க்கையில் இருக்கும் தீராத கஷ்டங்கள், கிரக தோஷங்கள், எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.
அதிலும் குறிப்பாக சூரிய திசை நடப்பவர்கள், ஜாதக கட்டத்தில் சூரிய பகவான் சரியில்லாத காரணத்தால் வேலையில் பிரச்சனை, வேலையில்லாமல் அவதிப்படுபவர்கள் எல்லாம் நாளைய தினம் கட்டாயம் சிவன் கோவிலுக்கு சென்று, இந்த பிரதோஷ நேரத்தில், சிவன் கோவிலில் அமர்ந்து அந்த எம்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
ஞாயிறு பிரதோஷ வழிபாடு
ஞாயிற்றுக்கிழமை அன்று வரக்கூடிய பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு உங்களால் இயன்ற பொருட்களை வாங்கி அபிஷேகத்திற்கு கொடுக்கலாம். அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை சிவபெருமானுக்கு இளநீர் வாங்கி அபிஷேகம் செய்தால் உங்கள் வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். நார்த்தங்காய் 2 வாங்கி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய கொடுத்தால், சொந்த வீடு வாங்கும் யோகம் கிடைக்கும்.
அது மட்டும் இல்லாமல் உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகளும் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. நார்த்தங்காயை இரண்டாக அறுத்து, அதன் உள்ளே இருக்கும் சாறை சிவபெருமானுக்கு கோவில்களில் அபிஷேகம் செய்வார்கள்.
உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவபெருமான் கோவிலுக்கு சென்று, காலையிலேயே கேட்டுக் கொள்ளுங்கள் அர்ச்சகரிடம். நார்த்தங்காய் வாங்கி அபிஷேகத்திற்கு தரலாமா என்று. சரி என்று சொன்னால் இந்த நார்த்தங்காய் வாங்கி உங்கள் கைகளால் நாளை மாலை 3 மணிக்கு கொண்டு போய் சிவன் கோவில்களில் கொடுத்து விடலாம். அதேபோல செல்வ செழிப்பில் உயர்ந்து நிலைக்கு செல்ல வேண்டும் என்பவர்கள் நாளை வெள்ளை நிறத்தில் இருக்கும் தாமரை பூவே சிவபெருமானுக்கு வாங்கிக் கொடுப்பது சிறப்பு.
நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரும்பாலானவர்கள் அசைவ பிரியர்களாகத்தான் இருப்பார்கள். ஆகவே இன்று இந்த பதிவின் மூலம் உங்களுக்கு நினைவு கூறுகின்றோம், நாளை பிரதோஷம். நாளை ஒரு ஞாயிறு அசைவத்தை தவித்து விட்டு, சிவபெருமான் வழிபாட்டில் மனதை ஈடுபடுத்துங்கள். நாள் முழுவதும் ‘நமசிவாய’ மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள். நீங்கள் வேண்டிய வரத்தை சிவபெருமான் நிச்சயம் கொடுப்பார்.
கோவிலில் முட்டி மோதி பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை காண வேண்டும் என்று வழிபாட்டை மேற்கொள்வது ரொம்ப ரொம்ப தவறு. கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், கோவிலில் எந்த இடத்தில் கூட்டம் இல்லையோ அந்த இடத்தை தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டு கண்களை மூடி மனக் கண்ணால் சிவபெருமானை கண்டு வழிபாடு செய்வதே சரியான முறை. கூட்டம் கலைந்த பின்பு நந்தி தேவரையும் சிவபெருமானையும் ஒரு சேர தரிசனம் செய்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: எதிரி தொந்தரவிலிருந்து விடுபட சின்னம்
கோவிலுக்கு வரும் ஒவ்வொரு பக்தர்களும் இதை பின்பற்ற வேண்டும். இதுவே உண்மையான பக்தி. நீங்கள் பிரதோஷ நேரத்தில் சிவபெருமானை காண கோவிலுக்கு செல்கிறீர்கள். நீங்கள் கோவிலுக்குள் காலடி எடுத்து வைத்த உடனேயே சிவபெருமான் உங்களை பார்த்து விடுவார். ஆக சிவபெருமானை பார்க்க நீங்கள் அவசரம் காட்டாதீங்க. அந்த ஈசனும் அதை விரும்ப மாட்டார். நமசிவாய நாமம் உங்களுக்கு நல்லதையே செய்யும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.