உங்கள் வாழ்வில் நன்மைகள் பல ஏற்பட இவ்விரதம் மேற்கொள்ளுங்கள்

sivastakam
- Advertisement -

“சோமன்” என்றால் சம்ஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை வடமொழியில் சோமவாரம் என அழைக்கப்படுகிறது. பொதுவாக திங்கட்கிழமை என்பது சிவபெருமானுக்குரிய தினமாகும். அப்படி 16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபடுவது “16 சோமவார விரதம்” எனப்படுகிறது. இந்த சோமவார விரதம் மேற்கொள்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

sivan

இந்த 16 சோமவார விரதம் இருப்பவர்கள் தொடர்ந்து வரும் 16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருப்பது சிறப்பு. திங்கள் தோறும் அதிகாலையில் துயிலெழுந்து, வீட்டின் பூஜையறையில் சிறிய அளவில் இருக்கும் சிவலிங்கத்திற்கு பூக்கள் சூட்டி, உங்கள் நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும். சர்க்கரை பொங்கல், பாயசம் போன்ற உணவுகளை படைத்து, சிவனுக்கு நைவேதியம் செய்து, சிவ மந்திரங்கள், சிவ புராணம் போன்றவற்றை படித்தால் வேண்டும்.

- Advertisement -

இந்த விரதம் மேற்கொள்பவர்கள் மூன்று வேலை ஏதும் உண்ணாமல் இருப்பது சிறப்பு என்றாலும், வேலை, தொழில் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மூன்று வேளையும் உப்பு சேர்க்காத உணவை சாப்பிடலாம் அல்லது பால், பழங்கள் உண்ணலாம். பின்பு மாலையில் கோயிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டு, வீடு திரும்பிய பின்பு சிவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதங்களை சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும்.

Sivan lingam

ஒரு சிலருக்கு தொடர்ச்சியாக 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகிறது. அப்படிப்பட்டவர்கள், விரதம் மேற்கொள்ளாத திங்கட்கிழமைக்கு அடுத்த திங்கட்கிழமைகளில் சிவனை வழிபட்டு விரதத்தை தொடரலாம். திட சித்தத்தோடு இந்த 16 சோமவார விரதம் மேற்கொள்ளும் திருமண வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சீக்கிரத்தில் திருமணம் நடக்கும். திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ தொடங்குவார்கள். தாயாருக்கு ஏற்படும் தோஷங்களும், உடல் பாதிப்புகளும் நீங்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
கும்பம் ராசியினருக்கான பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 16 somavara vratham in Tamil. It is also called Thingal kilamai viratham in Tamil or Somavaram vratham in Tamil or Siva viratham in Tamil or Somavara viratha magimai in Tamil.

- Advertisement -