கும்பம் ராசியினர் அதிக செல்வம் ஈட்ட இப்பரிகாரங்களை செய்ய வேண்டும்

kumbam-rasi
- Advertisement -

ஜாதகத்தில் குறிப்பிடப்படும் 12 ராசிகளும் நவகிரகங்களின் ஆதிக்கத்திற்குட்பட்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் ஜாதக கட்டங்களில் இருக்கும் 12 ராசிகளில் “கும்பம்” ராசி 11 ராசியாக வருகிறது. இந்த ராசியின் அதிபதியாக நவகிரகங்களில் நீதி தேவனும், ஆயுட்காரகனுமாகிய சனி பகவான் இருக்கிறார். இந்த கும்பம் ராசியினர் தங்கள் வாழ்வில் பொருளாதார வலிமை பெறவும், இன்ன பிற நன்மையான பயன்களை பெறவும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

sani bagavaan

12 ராசிகளில் மகரம் மற்றும் கும்பம் ராசி சனி பகவானின் ராசிகளாகும். எனவே இந்த இரு ராசிகளுக்கும் சனி கிரக பெயர்ச்சி காலத்தில் மற்ற ராசிக்காரர்களை போன்று அவ்வளவு பாதகமான பலன்களை சனி பகவான் தருவதில்லை. கும்பம் ராசிக்காரர்கள் மற்ற எந்த ராசிக்காரர்களை விடவும் மனஉறுதி அதிகம் கொண்டவர்கள். எடுத்துக்கொண்ட செயல்களில் வெற்றி பெறும் வரை அதிலிருந்து பின்வாங்க மாட்டார்கள். கும்பம் ராசியினர் வாழ்வில் செல்வ நிலை உயரவும், அதிர்ஷ்டங்களை பெறவும் கீழ்கண்டவற்றை செய்ய வேண்டும்.

- Advertisement -

கும்ப ராசியில் பிறந்தவர்கள் செல்வ வளமிக்க வாழ்க்கை கிடைக்க பெறவும், அனைத்திலும் சிறப்பான முன்னேற்றங்களை அடையவும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வதால் சனி பகவானின் தோஷங்கள் நீங்கி நன்மைகள் ஏற்பட தொடங்கும். மேலும் சனி அம்சம் கொண்ட திருப்பதி வெங்கடாசலபதியையும் சனிக்கிழமைகளில் வழிபடுவதால் வாழ்வில் செல்வ நிலை உயரும். இந்த ராசியினர் அஷ்டமி தினங்களில் பைரவர் மூர்த்தியை வழிபட்டு வர வேண்டும்.

hanuman

கும்ப ராசியினர் விரதம் மேற்கொள்ள நினைத்தால் சனி பகவானுக்கு சனிக்கிழமை விரதம் மேற்கொள்வது சிறந்த பலன்களை கொடுக்கும். வலது கை மோதிர விரலில் தங்க மோதிரம் அணிவது அதிர்ஷ்டத்தை தரும். ஏழ்மையான நிலையில் இருப்பவர்களுக்கும், கோயில்களுக்கும் சனிக்கிழமைகளில் எண்ணெய் தானம் தருவது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தோஷங்களை போக்கும். பொய் பேசுவதை தவிர்க்க வேண்டும். இதனால் நீதி தேவனாகிய சனிபகவானின் அருள் உங்களுக்கு கிட்டும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Kumbha rasi pariharam in Tamil. It is also called Jothida rasi pariharam Tamil or Kumbam rasi in Tamil or Rasi pariharam in Tamil.

- Advertisement -