ரெண்டே நிமிஷத்துல தேங்காய், வெங்காயம், தக்காளி, எதையும் சேர்க்காம, வெறும் ஒரு கைப்பிடி புதினாவை மட்டும் வெச்சு நல்ல ஹோட்டல் ஸ்டைல்ல சூப்பரான புதினா சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

- Advertisement -

பொதுவாகவே இந்த காலை வேளை என்பது எல்லோரும் பரபரப்பாக இயங்கக் கூடிய நேரம் தான். அதிலும் பெண்களுக்கு இந்த நேரம் பெண்களுக்கு கொஞ்சம் கூடுதலாகவே டென்ஷனை கொடுக்கக் கூடியது. அவர்களும் கிளம்பி கொண்டு மற்றவர்களையும் தயார் செய்து, வீட்டு வேலையும் பார்த்து இப்படியான நேரத்தில் வீட்டில் இருப்பதை வைத்து ஏதாவது சுலபமாக அதே நேரத்தில் சீக்கிரமாக சமைக்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அப்படி நினைப்பவர் கொஞ்சம் புதினா மட்டும் இருந்தாலே போதும் அருமையான ஒரு சட்னியை இந்த நிமிஷத்தில் தயார் செய்துவிடலாம். இதோ அதற்கான சமையல் குறிப்பு பற்றிய தகவல் தான் இந்த பதிவு.

புதினா சட்னி தயிர் தேவையான பொருட்கள்:
புதினா -1 கப், பச்சை மிளகாய் – 4, பூண்டு – 4 பல், இஞ்சி – 1 சின்ன துண்டு, புளி – சின்ன நெல்லிக்காய் அளவு கடுகு -1 டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு -1 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – 1கொத்து, காய்ந்த மிளகாய் – 2, சர்க்கரை – 1/2 டீஸ்பூன், உப்பு -1/2 டீஸ்பூன், பாதாம் -2, நல்லெண்ணெய் -2 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

புதினா சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் புதினாவை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் அலசி வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து பேன் வைத்து சூடானவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் பச்சை மிளகாய் ,பூண்டு, இஞ்சி மூன்றையும் போட்டு வதக்க வேண்டும். பச்சை மிளகாய் நன்றாக நிறம் மாறும் வரை வதக்கி கொள்ளுங்கள். இதை வதக்கிய பிறகு புதினாவை சேர்த்து அதையும் வதக்கி விடுங்கள். புதினாவை வதக்கும் போதே புளியையும் சேர்த்துக் கொள்ளுங்கள் அவ்வளவு தான். பொருட்களை எல்லாம் வதக்கி முடித்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள். இது கொஞ்ச நேரம் அப்படியே ஆறட்டும்.

இப்போது வதக்கிய பொருள்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் 2 பாதாம் (இந்த பாதாம் சேர்ப்பதால் புதினாவுக்கு நல்ல ஒரு ஹோட்டல் சுவை கிடைக்கும்)  உப்பு, சர்க்கரை இவைகளை எல்லாம் சேர்த்த பிறகு கொஞ்சமாக தண்ணீர் விட்டு நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அரைத்த புதினா சட்னியை ஒரு பவுலுக்கு மாற்றி கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து தாளித்து கரண்டியை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு போட்டு தாளித்தவுடன் உடன் ஒரு காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு கருவேப்பிலையும் சேர்த்து தாளிப்பை இந்த சட்னியில் சேர்த்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வேர்க்கடலையை வைச்சு நல்ல காரசாரமான இந்த சட்னியை அரைச்சு, சுட சுட இட்லி கூட சாப்பிட்டு பாருங்க செம்ம டேஸ்ட்டா இருக்கும். அப்புறம் நீங்களும் இதோட டேஸ்ட்டுக்கு அடிமை ஆகிடுவீங்க

மிகவும் சுலபமாக செய்யக் கூடிய இந்த சட்னியை நாம் சாதாரணமாக செய்யும் புதினா சட்னி விட சுவையாகவே இருக்கும். பெரிய ஹோட்டல்களில் கொடுக்கும் புதினா சட்னி இந்த முறையில் செய்யத்தான்  நல்ல ஒரு ரிச்சான டேஸ்ட்டில் இருக்கும்.

- Advertisement -