இன்று அதிசக்தி வாய்ந்த நாள். செவ்வாய்க்கிழமை முருகனுக்கும் செவ்வாய் பகவானுக்கும் உரிய நாள். இந்த நாளில் நாம் செய்யக்கூடிய வழிபாடு, நம்மை கடன் பிரச்சனையிலிருந்து காப்பாற்றும். இதே நாளில் தேய்பிறை அஷ்டமி திதி சேர்ந்து வந்திருப்பது மேலும் சிறப்பு வாய்ந்தது.
இந்த நாளில் துர்க்கை அம்மனை ராகுகால நேரத்தில் வழிபாடு செய்தால் ராகு கேதுவால் வாழ்வில் பெரிய அளவில் துன்பம் வராது. பெரிய பெரிய கஷ்டத்திலிருந்து கூட அந்த அன்னை நம்மை காப்பாள் என்பது நம்பிக்கை. இதே ராகுகால நேரத்தில் தான் கால பைரவரையும் வழிபாடு செய்ய வேண்டும்.
இத்தனை சக்திகளும் ஒன்று சேர்ந்து வந்திருக்கும் அந்த ராகு கால நேரத்தை நாம் தவற விடலாமா. எல்லா சக்தியும் ஒன்று சேர்ந்து ஒன்றரை மணி நேரத்தில் உங்கள் கைக்குள் அடக்கம். இன்றைய ராகு கால நேரத்தில் செய்ய வேண்டிய ஒரு அதிசக்தி வாய்ந்த பரிகாரத்தை இப்போது பார்த்து விடுவோமா.
செவ்வாய்க்கிழமை ராகுகால நேர பைரவர் வழிபாடு
இன்று 3 மணியிலிருந்து 4:30 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து முடிக்கணும். நீங்கள் வீட்டிலிருந்தால் மட்டுமே இந்த பரிகாரத்தை செய்ய முடியும். உங்களுடைய உள்ளங்கைகளில் 27 மிளகு இருக்க வேண்டும். உங்கள் கைபேசியில் 27 நட்சத்திரத்தின் பெயரை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
ஒரு சின்ன மண் அகல்விளத்தில் ஒரு சூடம் பொருத்தி வைத்து விடுங்கள். ஒரு பெரிய கட்டிசூடமாக இருக்கட்டும். சின்ன கட்டி சூடம் தான் இருக்கிறது என்றால் அது தீரும்போது இன்னொரு கட்டி கற்பூரத்தை போடலாம் தவறு ஒன்றும் கிடையாது. கற்பூரத்தை பொருத்தி அகல் விளக்கில் வைத்து விடுங்கள்.
கையில் இருக்கும் மிளகை மூடிக்கொண்டு பைரவரை மனதார நினைத்து “எனக்கு இருக்கும் கடன் சுமை சீக்கிரம் குறைய வேண்டும். வாங்கிய கடனை எல்லாம் சீக்கிரம் திருப்பி அடக்க வேண்டும். அதற்கு காலபைரவரான நீதான் நல்ல வழியை காட்ட வேண்டும்”. என்னுடைய கடன் உன்னுடைய பொறுப்பு என்று சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள்.
பிறகு அந்த உள்ளங்கையில் இருக்கும் 27 மிளகு ஒரு கிண்ணத்தில் போட்டு பக்கத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நட்சத்திரத்தின் பெயராக படித்து, ஒவ்வொரு மிளகை எடுத்து அந்த கற்பூர நெருப்பில் போடுங்கள். ஒவ்வொரு மிளகும் நெருப்பில் பட் பட் என்ற சத்தத்தோடு வெடிக்கும். இதுதான் பரிகாரமே. அந்த மிளகு நெருப்பில் வெடிக்கும் போது உங்களுடைய ஒவ்வொரு கடனும் குறைவதாக எண்ணிக் கொள்ளுங்கள்.
27 நட்சத்திரங்களும் சேர்ந்து உங்களை ஆசீர்வாதம் செய்து உங்களை கடன் சுமையிலிருந்து வெளிவர வைக்கும். அதற்கு உண்டான எளிய பரிகாரம் தான் இது. 27 மிளகு சிவப்பு துணியில் மூட்டையாக காட்டி ஒன்றாக நல்லெண்ணெயில் போட்டு தீபம் ஏற்றி பைரவரை வழிபாடு செய்வார்கள். அப்படி செய்தாலும் தவறு கிடையாது. இருப்பினும் 27 நட்சத்திரத்தை சொல்லி நம் கையால் அந்த மிளகை நெருப்பில் போடும்போது அதி விரைவான பலன் கிடைக்கும்.
இதை நீங்கள் வீட்டிலிருந்தபடியே செய்யலாம். கோவிலில் அமர்ந்து உங்களுக்கு இந்த பரிகாரத்தை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது என்றாலும் செய்யலாம் தவறு கிடையாது. நிச்சயம் இந்த பரிகாரத்தை செய்து முடித்தவுடன் உங்களுக்கு மனதில் ஒரு அமைதி கிடைக்கும். நம்முடைய கடன் எல்லாம் இப்போதே அடைந்து விட்டதாக ஒரு திருப்தி கிடைக்கும். கடனை அடைப்பதற்கு எந்த பயமும் உங்களுக்கு வராது.
இதையும் படிக்கலாமே: வீடு நிலம் தொடர்பான பிரச்சனை தீர
துணிச்சலோடு செயல்பட்டு துணிச்சலோடு பணத்தை தயார் செய்து கடனாளிகளுக்கு கொடுத்து நிம்மதியை பெறுவீர்கள். அதிகபட்சம் அடுத்த மாத தேய்பிறை அஷ்டமி திதிக்குள் உங்களுக்கு ஏதாவது ஒரு அதிசயம் நிச்சயம் நடந்தே தீரும். அதற்கு கால பைரவரே பொறுப்பு என்ற தகவலுடன் அந்த பைரவரை வேண்டி இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.