29-01-2024 சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

pillaiyar2
- Advertisement -

அரசனாக வாழ்ந்தவனை கூட, ஆண்டியாக மாற்றும் சக்தி இந்த கடனுக்கு உண்டு. வாங்கிய அசலுக்காக கொஞ்சம் கொஞ்சமாக வட்டியை கட்டி கையில் இருக்கும் செல்வ வளங்களை எல்லாம் இழந்து, வாழ்க்கையில் இருக்கும் நிம்மதியை இழந்து கஷ்டப்படுபவர்களுக்காக இந்த பதிவு. கடன் என்னும் சங்கடத்திலிருந்து வெளிவர சக்தி வாய்ந்த சங்கடஹர சதுர்த்தி வழிபாடு பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இது தை மாதம். தை மாதத்தில் முதலாவதாக வந்திருக்கக் கூடிய சங்கடஹர சதுர்த்தி இது. அது மட்டுமில்லாமல் திங்கட்கிழமையோடு சேர்ந்து இந்த சங்கடஹர சதுர்த்தி வந்திருக்கிறது. அப்படி என்ன சிறப்பு, திங்கட்கிழமைக்கு இந்த சங்கடஹர சதுர்த்திக்கும் என்று சில பேர் சிந்திக்கலாம். விநாயகப் பெருமானிடம் பெற்ற சாபத்திலிருந்து, சந்திர பகவான் விமோசனம் அடைந்த நாள், இந்த திங்கட்கிழமை.

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் திங்கட்கிழமை சோமவாரம் என்று சொல்லுவார்கள். சிவபெருமானுக்கு உரிய தினமாகவும் கருதப்படுகிறது.  சந்திர பகவானுக்கும் உரிய தினம் இந்த திங்கட்கிழமை. ஆக மொத்தம் நாளைய தினம் சிறப்பு வாய்ந்த சங்கடஹர சதுர்த்தி. இந்த நாளில் விநாயகரை வழிபட யாரும் தவற விடாதீங்க.

நாளை சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

நாளைய தினம் வழக்கம் போல எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி உங்களுடைய சங்கடஹர சதுர்த்தி விரதத்தை தொடங்கலாம். மாதம் தோறும் விரதம் இருப்பவர்கள், நீங்கள் எப்போதும் போல உங்கள் விரோதத்தை மேற்கொள்ளலாம். விரதம் இருக்க முடியாதவர்கள் சாதாரணமாக விநாயகரை வணங்கி விட்டு இந்த பரிகாரத்தை செய்யலாம் தவறு இல்லை.

- Advertisement -

நாளைய தினம் ஒரு அரச மரத்தடி விநாயகர் கோவிலுக்கு செல்ல வேண்டும். நாளை காலை 6:00 மணியிலிருந்து மாலை 5:00 மணிக்குள் இந்த பரிகாரத்தை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம். பச்சரிசியை கொஞ்சமாக எடுத்து, அதில் ஓரிரு ஏலக்காய்களை போட்டு, அரைத்து மாவாக்கிக் கொள்ளுங்கள். இந்த பச்சரிசியில் வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை அல்லது சர்க்கரை ஏதாவது ஒரு இனிப்பு பொருளை சேர்க்கவும்.

இந்த அரிசி மாவை உங்கள் கையோடு எடுத்துக் கொள்ளுங்கள். விநாயகர் வழிபாடு செய்யும்போது உங்கள் கையில் இந்த மாவு கட்டாயம் இருக்க வேண்டும். விநாயகரை பிரார்த்தனை செய்யும் போது, உங்கள் கடன் சுமை குறைய வேண்டும், வாங்கிய கடனை திருப்பித் தர வழியை காட்டு விநாயகா என்று வேண்டிக் கொள்ளுங்கள். சங்கடங்களை தீர்க்கும் விநாயகரே, என்னுடைய கடன் சங்கடத்தை குறைக்கணும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

விநாயகரை மூன்று முறை வலம் வர வேண்டும். மூன்று முறை தோப்புக்கரணம் போடவும். பிறகு கையில் வைத்திருக்கும் அரிசி மாவை அந்த அரச மரத்தை சுற்றி தூவி விட வேண்டும். அரச மரத்தடியில் நிழலுக்கு நிறைய கட்டெறும்புகள் வாழ்ந்து கொண்டிருக்கும். நிறைய பூச்சி பொட்டிகள் இருக்கும். அதற்கெல்லாம் நீங்கள் போடும் இந்த அரிசி மாவு உணவாக இருக்கும்.

அந்த அரிசி மாவை பசியாற அந்த எறும்புகள் உண்ண உண்ண உங்களுடைய கடன் சுமை படிப்படியாக குறையும். உங்கள் கர்ம வினை படிப்படியாக குறையும். இதுதான் இந்த பரிகாரத்தின் பின்னால் இருக்கும் சூட்சமம். பொதுவாகவே இந்த வழிபாட்டை நீங்கள் எப்போது எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் செய்யலாம். தவறு கிடையாது. கடன் சுமை இல்லாதவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம் தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

நாளை சங்கடஹர சதுர்த்தி எனும் பட்சத்தில் நாளைய தினம் இந்த வழிபாட்டை செய்வது உங்களுக்கு பல மடங்கு பலனை கைமேல் கொடுக்கும். கடன் பிரச்சனை உள்ளவர்கள் இந்த வழிபாட்டை செய்ய மறக்காதீங்க. வீட்டு பக்கத்தில் அரசு மரத்தடி விநாயகர் இல்லை என்றால் ஏதாவது ஒரு மரத்தடியில் இந்த அரிசி மாவை விநாயகரை நினைத்து தூங்கி விடுங்கள். விக்ணங்களை தீர்க்கும் விநாயகர் உங்களுடைய கடன் பிரச்சனையை நிச்சயம் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கையில் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -