- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval29-10-2024 செவ்வாய் பிரதோஷ வழிபாடு

29-10-2024 செவ்வாய் பிரதோஷ வழிபாடு

- Advertisement -

சிவனின் முழு பார்வையும் நம்மேல் விழ வேண்டும் என்றால், பிரதோஷ நேரத்தில் சிவனை நினைத்து நாம் வழிபாடு செய்ய வேண்டும். சிவனது முழு பார்வை நம் மேல் விழுந்துவிட்டால், நம்முடைய துன்பங்கள் அனைத்தும் ஒரு நொடி பொழுதில் தீர்ந்துவிடும். இதெல்லாம் எப்படி சாத்தியம். முழு நம்பிக்கையோடு, முழு பக்தியோடு சிவபெருமானை சரணாகதியோடு எவர் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுக்கு இந்த விஷயம் மிக மிக சுலபமாக சாத்தியமாகிவிடும்.

அந்த வகையில் நாளைய தினம். 29-10-2024 செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து பிரதோஷம் வந்திருக்கிறது. இந்த பிரதோஷத்தை ருண விமோசன பிரதோஷம் என்று சொல்கிறார்கள். ருணம் என்றால் நோயையும் குறிக்கும். கடனையும் குறிக்கும். உங்களுடைய கர்ம வினைகளையும் குறிக்கும். ஏனென்றால் கர்மவினையின் பயனால் தான், நமக்கு நோயும் கடனும் பின்தொடர்கிறது. இதிலிருந்து விடுபட நாளைய தினம் சிவனை எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய தகவலைத்தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

செவ்வாய்க்கிழமை பிரதோஷ வழிபாடு

ரொம்ப ரொம்ப சுலபமான முறை இது. பிரதோஷ நேரத்தில் கோவிலில் போய் அமர்ந்து கொண்டு ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை சொன்னாலே செய்த பாவத்தில் பாதி தீர்ந்துவிடும். கர்ம வினைகள் குறைய தொடங்கும். கடன் குறைய தொடங்கி விடும். இது முதல் விஷயம். எங்களால் எதுவுமே செய்ய முடியாது என்பவர்கள் இதை மட்டும் செய்யுங்கள். சிவபெருமானின் பார்வை முழுமையாக உங்கள் மீது விழும். அதில் மாற்று கருத்து கிடையாது. இது தவிர சில பரிகாரங்கள் நமக்கு கை மேல் பலனை கொடுக்கும்.

ஒரு 5 பேரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். சிவன் கோவிலுக்கு வெளியில் யாசகம் கேப்பவர்கள் இருப்பார்கள். அவர்களிலிருந்து ஒரு ஐந்து பேர். நம்மால் அவ்வளவுதான் தான தர்மம் செய்ய முடியும். அதற்கு மேலாக நம்முடைய நிதி நிலைமை செட் ஆகாது. ஒரு தாம்பூல தட்டில் 5 செட் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைத்துக் கொள்ளவும். ஒவ்வொருவருக்கும் இரண்டு வெற்றிலை, இரண்டு பாக்கு, இரண்டு வாழைப்பழம், இதில் 11 ரூபாய் தட்சனை வைத்துக் கொள்ளுங்கள். இந்த தாம்பூலத்தை, அந்த இயலாதவர்களுக்கு முதியவர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.

- Advertisement -

இதை கோவிலுக்குள் வைத்து, கோவிலுக்குள் வருபவர்களுக்கு நாம் தானம் செய்வதை விட, வெளியில் இயலாதவர்கள் இருப்பார்கள் அவர்களுக்கு அந்த 11 ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. அவர்களுக்கு இந்த வெற்றிலை பார்க்கோடு இந்த 11 ரூபாய் தட்சணையை மரியாதையுடன் கொடுக்கும்போது அவர்களுடைய வாழ்த்து உங்களுக்கு கிடைக்கப்பெறும் அல்லவா.

அது உங்களுடைய பாவ கணக்குகளை குறைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. நாளை செவ்வாய்க்கிழமையோடு வரக்கூடிய பிரதோஷ தினத்தில் நீங்களும் இந்த தானத்தை செய்து பாருங்கள். உங்களுக்கு உண்டான பலன் மிகப்பெரிய அளவில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

என்னடா இது கோவிலில் ஒரு தாம்பூல தட்டில் வெற்றிலை பார்க்கோடு தக்ஷனை வைத்து பிச்சை எடுப்பவர்களுக்கு கொண்டு போய் கொடுத்தால் அடுத்தவர்கள் எப்படி பார்ப்பார்கள். இதையெல்லாம் கண்டு கொள்ள வேண்டாம். அடுத்தவர்களை நினைத்தா நம்முடைய வாழ்க்கை நடக்கிறது. அந்த ஈசனை மனதில் நினைத்துக் கொண்டு இந்த வழிபாட்டை செய்யுங்கள். அந்த ஈசனே பிச்சை எடுப்பவர் ரூபத்தில் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இதோடு சேர்த்து பிரதோஷ நேரத்திற்கு கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்யும்போது, உங்களுடைய உள்ளங்கைகளில் ஒரே ஒரு மிளகு எடுத்துக்கொண்டு செல்லுங்கள். கோவிலுக்குள் அமர்ந்து பிரதோஷ நேரத்தில் வழிபாட்டை முடித்துவிட்டு, உங்களுடைய வேண்டுதலை எல்லாம் சிவபெருமான் பாதத்தில் இறக்கி வைத்துவிட்டு, நந்தீஸ்வரரை வணங்கிவிட்டு, வீடு திரும்பும்.

இதையும் படிக்கலாமே: ஐப்பசி பூரம் அம்பாள் வழிபாடு

வீடு திரும்பும் போது, அந்த ஒரு மிளகு உங்கள் வாயில் போட்டும் மென்று தின்று விடுங்கள். கோவிலிலேயே சாப்பிட்டாலும் சரிதான். அல்லது வீட்டிற்கு கொண்டு வந்த அந்த மிளகாய் சாப்பிட்டுக் கொண்டாலும் சரிதான். அவ்வளவுதான் உங்கள் உடம்புக்குள் தங்கியிருக்கும் கெட்டதும் விலகும். இந்த எளிமையான பரிகாரங்கள் நாளைய தின பிரதோஷ நாளில் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்